Last Updated : 31 May, 2017 11:57 AM

 

Published : 31 May 2017 11:57 AM
Last Updated : 31 May 2017 11:57 AM

நீங்களே செய்யலாம்: கொட்டாங்கச்சி பூ ஜாடி!

வீட்டில் கொட்டாங்கச்சிகள் இருந்தால் என்ன செய்வீர்கள்? தூக்கியெறிந்துவிடுவீர்கள். இனி அப்படிச் செய்தீர்கள். கொட்டாங்கச்சியை வைத்து அழகான பூ ஜாடி செய்து உங்கள் அம்மாவிடம் கொடுத்து அசத்துங்கள்.

தேவையான பொருட்கள

சிறியதும், பெரியதுமாக இரண்டு கொட்டாங்கச்சிகள், கத்தி, ஸ்க்ரூ, நட்டு, ஆயில் பெயிண்ட் மற்றும் பிரஷ்.

எப்படிச் செய்வது?

1. படம் 1-ல் காட்டியதைப் போலக் கொட்டாங்கச்சிகளின் வெளிப்புறத்தில் நார்களைச் சீவி எடுங்கள்.

2. கொட்டாங்கச்சிகளின் நடுவே கத்தி யைக் கொண்டு துளை போடுங்கள் (கத்தியை வீட்டில் உள்ள பெரியவர்கள் உதவியுடன் கையாளுங்கள்).

3. படம் 3-ல் உள்ளது போல இரண்டு கொட்டாங்கச்சிகளையும் சேர்த்து, அந்தத் துளையின் வழியே ஸ்க்ரூ, நெட்டைக் கொண்டு பொருத்துங்கள்.

4. பிறகு உங்களுக்குப் பிடித்த வண்ணத்தைக் கொட்டாங்கச்சிகளின் வெளியே பூசுங்கள்.

5. இப்போது ஜாடி ரெடி. அதில் உங்களுக்குப் பிடித்த பூக்களை வைத்து அதை மேஜை மீதுவையுங்கள். பார்க்க அழகாக இருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x