Published : 02 Nov 2016 11:00 AM
Last Updated : 02 Nov 2016 11:00 AM

மீன் புராணம்!

> உலகில் மீன்கள் இனம் தோன்றிச் சுமார் 50 கோடி ஆண்டுகள் ஆகின்றன.

> மீன்களின் உடல் சூடு, அவை வாழும் நீரின் வெப்பநிலையைப் பொறுத்து மாறும்.

> மீன்களின் துடுப்புகள் நீந்த உதவுவதைப் போலச் செதில்கள் மீன்களின் உடல் பாதுகாப்புக்கு உதவுகின்றன.

> மீன்களில் சுமார் 22 ஆயிரம் வகைகள் உள்ளன. ஒவ்வொரு வகை மீனும் நிறத்தி லும் வடிவத்திலும் எடையிலும் மாறுபட்டது.

> ஒருசில மீன்களைத் தவிர்த்துப் பெரும்பாலான மீன்களுக்கு நுரையீரல் கிடையாது. வாய் மூலம் நீரைக் குடித்து அதைச் செவுள்கள் மூலம் வெளியேற்றும். அப்போது நீரில் உள்ள ஆக்ஸிஜனை எடுத்துக்கொண்டு, கார்பன்-டை-ஆக்ஸைடை வெளியிடும்.

> மீன்களுக்கு இமைகள் கிடையாது என்பதால், கண்களைத் திறந்துகொண்டே தூங்கும். ஆழ்கடலில் வாழும் மீன்கள் பொதுவாகத் தூங்குவதில்லை.


சர்ஜன் மீன்

> மீன்களுக்குப் புறக்காதுகள் கிடையாது. அதேசமயம் நீரில் உண்டாகும் அதிர்வுகளைத் துல்லியமாக உணர்ந்துகொள்ளும்.

> மிகச் சிறிய மீன் கோபி. இது சராசரியாக 13 மில்லி மீட்டர் அளவே இருக்கும்.

> மிகப் பெரிய மீன் பெட்டிச் சுறா (Whale Shark). இது 18 மீட்டர் நீளம் இருக்கும்.

> ‘லங் ஃபிஷ்’ என்ற மீன் நுரையீரல் மூலமே சுவாசிக்கும்.

> ‘செயில் ஃபிஷ்’ என்ற மீன் மிக வேகமாகச் செல்லும்.

> ‘சூரிய மீன்’ என்ற வகை மீன் கோடிக்கணக்கில் முட்டைகள் இடுமாம்.


கோபி மீன்

> ‘சர்ஜன் மீன்’ என்ற மீனின் வால் பகுதியில் சிறிய கத்தி போன்ற அமைப்பு உள்ளது.

தகவல் திரட்டியவர்: என். முரளி கிருஷ்ணா,
8-ம் வகுப்பு, அரசினர் மேல்நிலைப் பள்ளி, அரியலூர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x