Published : 28 Nov 2016 10:27 AM
Last Updated : 28 Nov 2016 10:27 AM

வெற்றி மொழி: ஸ்டீவ் ஜாப்ஸ்

1955ஆம் ஆண்டு பிறந்த ஸ்டீவ் ஜாப்ஸ் அமெரிக்க தொழிலதிபர், கண்டுபிடிப்பாளர் மற்றும் தொழில்துறை வடிவமைப்பாளர். சிறுவயதில் படிப்பின் மீது அதிக ஈடுபாடு இல்லாதவராகவும் அதேசமயம், எலெக்ட்ரானிக் சாதனங்களின் மீது அதீத பற்றுடையவராக காணப்பட்டார். ஆப்பிள் நிறுவனத்தைத் தொடங்கியவர்களுள் ஒருவரான இவர், அந்நிறுவனத்தின் தலைவராகவும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் இருந்துள்ளார். இவரின் வழிகாட்டுதல் ஐபோன், ஐபாட் போன்ற நவீன தொழில்நுட்பங்களுக்கு வழிவகுத்தது. கணினித் துறையின் மிகவும் குறிப்பிடத்தக்க நபரான ஸ்டீவ் ஜாப்ஸ், 2011 ஆம் ஆண்டு தனது 56-வது வயதில் மரணமடைந்தார்.

# நீங்கள் செய்கின்ற வேலைதான் உங்கள் வாழ்க்கையின் பெரும்பகுதியை நிரப்பப் போகின்றது.

# இது தொழில்நுட்பத்தின் மீதான நம்பிக்கை அல்ல. மக்களின் மீதான நம்பிக்கை.

# உங்களது இதயம் மற்றும் உள்ளுணர்வைப் பின்பற்றத் தேவையான தைரியத்தைக் கொண்டிருங்கள்.

# உங்களது வேலையில் மனப்பூர்வமாக திருப்தியடைவதற்கான ஒரே வழி, செய்கின்ற வேலையை மனதார நேசித்து செய்வதே.

# உங்களுக்கான நேரம் குறைவானது, எனவே வேறொருவரின் வாழ்க்கையை வாழ்ந்து அதை வீணடிக்க வேண்டாம்.

# வடிவமைப்பு என்பது வெறுமனே பார்ப்பது மற்றும் உணர்வது அல்ல. வடிவமைப்பு என்பது செயல்பாட்டில் உள்ளது.

# உலகின் மிகச்சிறந்த சாதனங்களை உருவாக்குவதே எங்களது இலக்கு, மிகப்பெரியவற்றை அல்ல.

# தேவைப்படுவதை நீங்கள் இன்னும் பெறவில்லை என்றால், தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டே இருங்கள். ஓய்ந்துவிடாதீர்கள்.

# வணிகத்தில் மிகப்பெரிய விஷயங்கள் ஒரு நபரால் செய்யப்பட்டவை அல்ல. அவை, பலரால் உருவான குழுக்களின் மூலம் நிகழ்த்தப்பட்டவை.

# வயதான மக்கள் “இது என்ன?” என்று கேட்கிறார்கள். ஆனால், சிறுவனோ “இதைக்கொண்டு நான் என்ன செய்ய முடியும்?” என்று கேட்கிறான்.

# கல்லறையில் பெரும் பணக்காரனாக இருப்பது எனக்கு ஒரு விஷயமே இல்லை. இரவு உறங்கச்செல்லும் போது, இன்று ஒரு அற்புதமான விஷயத்தை செய்துவிட்டோம் என்று சொல்வதே பெரிய விஷயம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x