Published : 22 Oct 2016 11:52 AM
Last Updated : 22 Oct 2016 11:52 AM

டிஎன்பிஎஸ்சி | குரூப்-IV தேர்வு | மாதிரி வினா-விடை 32: வரலாறு

வரலாறு

56. திரிபீடகங்கள் என்பது யாருடைய புனித நூல்?

a. சமண மதம் b. புத்த மதம்

c. இந்து மதம் d. கிறிஸ்தவ மதம்

57. கி.பி. 505 முதல் 587 வரையிலான காலத்தில் வாழ்ந்த மற்றும் விக்கிரமாதித்யன் அவையி லிருந்த வராகமித்திரர் ஒரு

a. வானியல் நிபுணர் b. கணித மேதை

c. தத்துவஞானி d. இவை அனைத்துமே

58. முகமது பின் துக்ளக் தலைநகரை தில்லியி லிருந்து தேவகிரிக்கு மாற்றிய ஆண்டு

a. 1319 b. 1327 c. 1339 d. 1345

59. வேத காலம் என்பது

a. கி.மு. 1500 முதல் கி.மு. 1000 வரை

b. கி.மு. 1000 முதல் 500 வரை

c. கி.மு. 500 முதல் 100 ஆண்டுகள்

d. இவை எதுவும் இல்லை

60. முஸ்லிம் அல்லாதவரிடம் விதிக்கப்பட்ட ஜஸியா வரியை அறிமுகப்படுத்தியவர் யார்?

a. அக்பர் b. ஜஹாங்கீர்

c. அவுரங்கசீப் d. அலாவுதீன் கில்ஜி

61. அங்கோர்வாட் கலைக்கோவில்கள் எங்குள்ளன?

a. பிலிப்பைன்ஸ் b. தாய்லாந்து

c. கம்போடியா d. வியட்னாம்

62. ஆரிய சமாஜம் பற்றி எது சரி?

a. உருவ வழிபாட்டை ஏற்றுக் கொண்டது

b. இந்து மதத்துக்கு மதமாற்றம் செய்து கொள்வதை ஆதரித்தது

c. ஜாதியை கண்டித்தத d. அனைத்தும் சரி

63. இல்டுட் மிஷ் காலத்தில் எல்லை அபாயங் களை ஏற்படுத்தியவர்

a. தைமூர் b. செங்கிஸ்கான்

c. பெரோஷ் துக்ளக் d. அனைவரும்

64. முகமதுகோரி கஜினியைக் கைப்பற்றிய ஆண்டு

a. 1173 b. 1174 c. 1175 d. 1176

65. ஆரியர்களைப் பற்றி எது சரியான தகவல்?

a. இவர்கள் மத்திய ஆசியாவிலிருந்து வந்தவர்கள்

b. மாடு மேய்ப்பது இவர்களின் முக்கியத் தொழில்

c. இவர்களுக்கு பசு புனிதமான வடிவம்

d. இவை அனைத்துமே சரி

66. அசோக சக்கரவர்த்தியைப் பற்றி சரியான கூற்று

a. கி.மு. 269 முதல் 232 வரை ஆட்சி புரிந்தார்

b. கலிங்கப் போருக்குப் பின் போரை வெறுத்து புத்த மதத்தைத் தழுவினார்

c. இவரது மறைவுக்குப் பின் மௌரியப் பேரரசு வீழ்ச்சி அடையத் தொடங்கியது

d. இவை அனைத்தும் சரி

67. அஷ்ட பிரதானிகள் யாருடைய அவையில் இருந்த அறிஞர்கள்?

a. அசோகர் b. சிவாஜி c. கனிஷ்கர் d. சந்திரகுப்தர்

68. சாக்கிய முனி என அழைக்கப்பட்டவர் யார்?

a. ராமகிருஷ்ண பரமஹம்சர் b. மகாவீரர்

c. கௌதம புத்தர் d. விவேகானந்தர்

69. சுஸ்ருதா என்னும் நூல் எதோடு தொடர்புடையது?

a. நிலவரி b. அரசின் வருமான வரி

c. வானியல் d. மருத்துவம்

70. சோழர்கள் ஆட்சியின் சிறப்பு என்ன?

a. தஞ்சாவூர் கோயிலை கட்டிய சோழர் கால கலை

b. கிராம சுயாட்சி c. சிறப்பான உள்ளாட்சி முறை

d. இவை அனைத்துமே

71. ஆர்ய சத்யா உபதேசத்தில் புத்தர் எதை கூறுகிறார்

a. துன்பம் b. துன்பத்துக்கான காரணம்

c. துன்பத்தை களைவது d. அனைத்தையும்

72. அலெக்ஸாண்டர் இந்தியா மீது படையெடுத்தது

a.கி.மு.310 b.கி.மு.342 c.கி.மு.362 d.கி.மு.326

73. அமிர்தசரஸ் நகரத்திற்கான இடம் யாரால் குரு ராம் தாசுக்குத் தரப்பட்டது?

a. ஹர்ஷர் b. பாபர் c. அக்பர் d. ஹுமாயூன்

74. அர்த்தசாஸ்திரத்தில் உள்ள பகுதிகள்

a. 10 b. 2 c. 5 d. 15

75. விக்ரம சீவப் பல்கலைக்கழகத்தை நிறுவியவர்

a. ஹர்ஷர் b. தர்மபாலன்

c. தேவபாலன் d. எவருமில்லை

76. அசோகரது கல்வெட்டுக்களில் அவரது அண்டை பகுதியினர் என யாரை குறிப்பிடுகிறார்?

a. பாண்டியர்கள் b. கேரளாபுத்திரர்கள்

c. சத்யபுத்திரர்கள் d. இவர்கள் அனைவரையும்

77. சித்தாந்த சிரோமணி என்னும் நூலை எழுதியவர்

a. பாஸ்கரவர்மன் b. பாஸ்கராச்சாரியர்

c. பத்ரபாகு d. பில்கானா

78. புத்தம்- சமணம் இடையே பொதுவான அம்சம்

a. வேத கருத்து மறுப்பு b. சடங்கு மறுப்பு

c. விலங்கு வதை எதிர்ப்பு d. அனைத்துமே

79. முதல் உலகப் போரின் முக்கிய காரணம்

a. லாயிட் ஜார்ஜின் திடீர் மரணம்

b. லெனின் சிறை வைப்பு

c. ஆஸ்திரியாவின் பிரான்சிஸ் பெர்டினான்ட் படுகொலை செய்யப்பட்டது

d. உலகை ஆள அமெரிக்கா விரும்பியது

80. பின்வரும் எந்த அரசு பீகாரில் ஆட்சி புரிந்தது?

a. வஜ்ஜி b. வத்சா c. சுராசேனா d. அவந்தி

81. பல்லவ மன்னர்களின் தலைநகரம்

a. சென்னப்பட்டினம் b. காஞ்சிபுரம்

c. மதுரை d. மாமல்லபுரம்

82. களப்பிரர்களின் காலம் எது?

a. 1 - 3ம் நூற்றாண்டு b. 3 - 6ம் நூற்றாண்டு

c. 5 - 8ம் நூற்றாண்டு d. எதுவுமில்லை

83. யாருடைய ஆட்சியில் மகாவீரர், புத்தர் ஆகியோர் உபதேசங்கள் மேற்கொண்டனர்

a. அஜாத சத்ரு b. பிம்பிசாரர்

c. நந்திவர்த்தனர் d. அசோகர்

84. கிராம சமூகம் அதிகாரம் பெற்றிருந்த காலம்

a. பல்லவர் b.சோழர் c.குப்தர் d.முகலாயர்

85. சுதந்திரப் போரின் போது அமெரிக்காவில் எத்தனை காலனிகள் இருந்தன?

a. 14 b. 13 c. 15 d. 12

86. கி.பி. 1451 வரை இந்தியாவை ஆண்ட அரசர்கள் எந்த இனத்தை சார்ந்தவர்கள்?

a. துருக்கியர் b. அரேபியர்

c. பதானியர் d. ஆப்கானியர்

87. தைமூர் இந்தியா மீது படையெடுத்த ஆண்டு

a. 1326 b. 1349 c. 1372 d. 1398

89. எது சரியாக பொறுத்தப்படவில்லை

a. கன்னோசி - பிரதிகாரர்கள்

b. ஆஜ்மீர் - சவுக்கான்கள்

c. சந்தேளர்கள் - பந்தல்கண்ட்

d. பாளர்கள்- டெல்லி

90. சுங்கம் தவிர்த்த சோழன் யார்?

a. முதலாம் ராஜராஜன்

b. முதலாம் குலோத்துங்கன்

c. முதலாம் ராஜேந்திரன்

d. இரண்டாம் ராஜராஜன்

விடைகள்: 56. b, 57. d, 58. b, 59. a, 60. d, 61. c 62. d, 63. b, 64. a, 65. d, 66. d, 67. b, 68. c, 69. d, 70. d, 71. d, 72. d, 73. c, 74. d, 75. c, 76. d, 77. b, 78. d, 79. c, 80. a, 81. b, 82. b, 83. b, 84. b, 85. b, 86. a, 87. d, 88. a. 89. d, 90. b.

இந்திய தேசிய இயக்கம்

1. A) தியோசோபிக்கல் இயக்கம்

- 1. ஷா வல்லுல்லாக்

B) வகாபி இயக்கம்

- 2. எம். எஸ்.ஆல்காட்

C) இந்தியன் சோஷியல் கான்பரன்ஸ்

- 3. இராத காந்த தேப்

D) தர்ம சபை

- 4. எம். ஜி. ராணடே

a) A-1, C-2, B-3, D-4

b) A-2, B-1, C-4, D-3

c) A-4, B-3, C-2, D-1

d) A-4, B-2, C-3, D-1

2. கீழ்கண்டவற்றுள் ஏறு வரிசையில் எழுதுக:

1. தனி நபர் சட்டமறுப்பு இயக்கம்

2. சிரிப்ஸ் தூதுக் குழு

3. வெள்ளையனே வெளியேறு இயக்கம்

4. வேவல் திட்டம்

a) 1, 2, 3, 4 b) 2, 1, 3, 4

c) 4, 3, 2, 1 d) 4, 2, 3, 1

3. A) முதல் மைசூர் போர் -

1. சால்பை உடன்படிக்கை

B) 2 மைசூர் போர் 2. மதராஸ் உடன்படிக்கை

C) 3 மைசூர் போர் 3.மங்களூர் உடன்படிக்கை

D) முதல் மராத்தியப் போர் -

4.சீரங்கப்பட்டினம் உடன்படிக்கை

A B C D

a) 3 4 2 1

b) 2 3 4 1

c) 3 2 4 1

d) 2 4 3 1

4. வில்லியம் பெண்டிங்கின் புகழுக்குக் காரணம்

1. சமுக சீர்திருத்தம் 2. நீதித்துறை சீர்திருத்தம்

3. படைச் சீர்திருத்தம் 4. வெளியுறவு கொள்கை

a) 1, 3, 4 b) 1, 4 c) 2 d) 1

5. A) வேல்ஸ் இளவரசர் வருகை 1. கர்சன் பிரபு

B) வங்க பிரிவிணை 2. நார்த் ப்ருக் பிரபு

C) தலைநகர் டில்லிக்கு மாற்றம் 3. இரண்டாம் ஹார்டின்ச் பிரபு

D) 5-ம் ஜார்ஜ் மன்னர் வருகை 4.வேவல் பிரபு

A B C D

a) 2 1 3 4

b) 1 2 3 4

c) 2 3 4 1

d) 3 1 2 4

6. மிதவாதிகள், தீவிரவாதிகள் பிளவின்போது காங்கிரஸின் தலைவர்?

a) ராஷ்பிஹாரி போஸ்

b) பெரோஸ் ஷா மேத்தா

c) மதன்மோகன் மாளவியா

d) பிபின் சந்திர பால்

7. பிரிட்டிஷ் மக்களவையின் முதல் இந்திய உறுப்பினர்

a) தாதாபாய் நௌரோஜி b) பத்ருதீன் தியாப்ஜி

c) மகாத்மா காந்தி d) பாலகங்காதர திலகர்

8. A) நேரு அறிக்கை 1.1940

B) 2வது வட்ட மேஜை மாநாடு 2.1928

C) தனிநபர் சத்யாக்கிரகம் 3.1946

D) அட்லி பிரபுவின் அறிவிப்பு 4.1931

A B B D

a) 2 4 1 3

b) 4 2 1 3

c) 2 4 3 1

d) 3 2 1 4

9. முத்துலெட்சுமி ஆரம்பித்த ஆதரவற்றோர் இல்லம்

a) சரஸ்வதி இல்லம் b) ஒளவை இல்லம்

c) அன்பு இல்லம் d) லட்சுமி இல்லம்

10. கீழ்க்கண்டவற்றில் தவறான கூற்று

1. வ.உ.சி. எட்டயபுரத்தில் பிறந்தார்.

2. அன்னி பெசன்ட் பிரம்ம ஞான சபையைத் தொடங்கினார்.

3. பாரதியார் பாண்டிச்சேரியில் இறந்தார்.

4. சுய மரியாதை இயக்கத்தை ஈ.வெ.ரா. தொடங்கினார்.

a)1, 3, 4 b) 2, 3, 4 c)1, 2, 4 d) 1, 2, 3

11. முஸ்லீம் ஆதிக்கத்தை நிலைநாட்டியப் போர்

a) 1-ம் தரெய்ன் போர் b)1-ம் பானிப்பட் போர்

c) தலைகோட்டை போர் d) 2-ம் தரெய்ன் போர்

12. பர்மியப் போரில் “யாண்டபூ” உடன்படிக்கை கையெழுத்தானது

a) 1820 b) 1822 c) 1828 d) 1826

13. ரோஹில்லா போர் நடந்தது யாருடைய காலம்

a) ஹேஸ்டிங்ஸ் b) பெண்டிங்

c) காரன்வாலிஸ் d) வெல்லெஸ்லி

14. புரட்சி நடந்த இடங்களும்-அதற்கு தலைமையேற்றவர்களும்

A) லக்னோ (அயோத்தி) 1.கன்வர்சிங்

B) டெல்லி 2. நானாசாகிப்

C) பீகார் 3. ஹர்சத்மகால்

D) கான்பூர் 4. பகதூர்ஷா

A B C D

a) 4 3 2 1

b) 3 4 1 2

c) 4 3 2 1

d) 3 1 4 2

15. “மனிதருக்குச் செய்யும் பணி கடவுளுக்குச் செய்வதாகும்” என்றவர்

a) தேவேந்திரநாத் தாகூர் b) விவேகானந்தர்

c) ராமகிருஷ்ண பரமஹம்சர் d) காந்தி

விடைகள்: 1.b, 2.a, 3.b, 4.b, 5.a, 6.a, 7.a, 8.a, 9.b, 10.d, 11.d, 12.d, 13.a, 14.b, 15.b.

எம்.பூமிநாதன் இயக்குநர், கிங் மேக்கர் ஐஏஎஸ் அகாடமி, சென்னை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x