Last Updated : 27 Jun, 2022 11:03 AM

 

Published : 27 Jun 2022 11:03 AM
Last Updated : 27 Jun 2022 11:03 AM

தரவு அறிவியல் படிப்புக்கு ஜேஇஇ நுழைவுத் தேர்வின்றி மாணவர்களை அழைக்கும் சென்னை ஐஐடி

2021ஆம் ஆண்டுக்கான தேசிய உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலில் சென்னை ஐஐடி முதடலித்தில் உள்ளது. உயர்கல்வியில் சென்னை ஐஐடி ஆற்றிவரும் சேவைக்குக் கிடைத்திருக்கும் சிறிய அங்கிகாரம் அது. தரமான கல்வியை மாணவர்களுக்குக் கொண்டு சேர்ப்பதில் அது காட்டும் முனைப்பு உலக அளவில் பிரசித்திபெற்றது.

கற்பிப்பதில் மட்டுமல்லாமல்; இன்றைய தொழில்நுட்பத் தேவைகளுக்கு ஏற்ற வகையில் புதிய பாடத்திட்டத்தை வடிவமைப்பதிலும் பல புதிய முன்னெடுப்புகளை அது தொடர்ந்து மேற்கொண்டுவருகிறது. 2020 முதல் தரவு அறிவியல் சென்னை ஐஐடி வழங்கிவரும் இணைய வழி படிப்பு அத்தகைய புதிய முன்னெடுப்புகளில் ஒன்று. உலக அளவில் தரவு அறிவியலில் வழங்கப்பட்ட முதல் படிப்பும் அதுவே.

இந்தாண்டு செப்டம்பரில் சென்னை ஐஐடியில் தொடங்கப்பட இருக்கும் தரவு அறிவியல் படிப்புக்கும் மாணவர்கள் தற்போது விண்ணப்பிக்காம். அதன் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 19.

தரவு அறிவியல் துறை

உலக அளவில் வேகமாக வளர்ந்து வரும் துறைகளில் தரவு அறிவியலும் ஒன்று. 2026ஆம் ஆண்டுக்குள் ஒரு கோடிக்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை அது உருவாக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த துறையில் குறைந்தது 15 முதல் 20 ஆண்டுகளுக்கு வேலைகளுக்குப் பஞ்சம் இருக்காது. தரவு அறிவியல் துறைக்குத் தேவைப்படும் தொழில்நுட்ப அறிவை அனைவருக்கும் எட்டக்கூடியதாக மாற்றும் நோக்கில் சென்னை ஐஐடி வடிவமைத்து இருப்பதே இந்த தரவு அறிவியல் பாடத்திட்டம்.

பாடத்திட்டத்தின் வடிவமைப்பு

இந்த பாடத் திட்டம் கற்பவரின் வசதியை மனதில் கொண்டு மிகவும் நெகிழ்வான முறையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. அதன் வாராந்திர உள்ளடக்கம் எந்த நேரத்திலும் அணுகும் விதமாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. தேர்வு எழுதுவதற்கு மட்டும் அதற்கு என நியமிக்கப்பட்ட மையங்களில் மாணவர்கள் நேரில் கலந்து கொள்ள வேண்டும். கற்றல் மதிப்பீட்டின் நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்காக நடைமுறைபடுத்தப்படும் வழிமுறை இது.

யார் விண்ணப்பிக்கலாம்?

வேலைவாய்ப்புக்கும், வளமான எதிர்காலத்துக்கு உத்தரவாதம் அளிக்கும் இந்த படிப்புக்கு மாணவர்கள் உலகில் எங்கிருந்தும் விண்ணப்பிக்கலாம். ஆனால், அவர்கள் பன்னிரண்டாம் வகுப்பில் ஆங்கிலமும், கணிதமும் படித்து இருக்க வேண்டும்.

தற்போது பன்னிரண்டாம் வகுப்பு படித்துவரும் மாணவர்களும் இந்த தேர்வு எழுத முடியும். தகுதித் தேர்வில் அவர்கள் தேர்ச்சிபெற்றால், பன்னிரண்டாம் வகுப்பை முடித்த பிறகு இந்த பாடத் திட்டத்தில் சேர்ந்துகொள்ளலாம். +2 படித்தவர்கள் மட்டுமல்லாமல்; கல்லூரி படிப்பை முடித்து வேலையில் இருப்பவர்களும் இந்த தகுதித் தேர்வில் பங்கேற்க முடியும்.

இந்த தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 19 ஆகும். ஆர்வமுள்ள மாணவர்கள் https://onlinedegree.iitm.ac.in என்கிற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மூன்று வகையான படிப்புகள்

இந்த இணையவழிப் பட்டப்படிப்பு தேசிய கல்விக் கொள்கையின்படி வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இதில் ஓராண்டு சான்றிதழ் படிப்பு, ஈராண்டு பட்டயப் படிப்பு, மூன்றாண்டு இளநிலை என மூன்று வகையான படிப்புகள் வழங்கப்படுகின்றன. இந்த மூன்று படிப்புகளின் எந்தவொரு கட்டத்திலும் வெளியேறும் சுதந்திரம் மாணவர்களுக்கு உண்டு. அவ்வாறு வெளியேறும் மாணவர்களுக்கு சென்னை ஐ.ஐ.டியிலிருந்து முறையே அடிப்படைச் சான்றிதழ், டிப்ளமோ சான்றிதழ் அல்லது இளநிலைப் பட்டப்படிப்புச் சான்றிதழ் வழங்கப்படும்.

இதன் முக்கியத்துவம்

2020-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்தப் படிப்புகளை இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும் படித்து வருகின்றனர். உலகம் முழுவதும் பல்வேறு படிப்புகளை முடித்த பல மாணவர்கள் இதில் மீண்டும் தங்களை மாணவர்களாக இணைத்துக்கொண்டனர். அதில், பெரு நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள், நிறுவனர்கள், இயக்குநர்கள், நிறுவனங்களின் துணைத் தலைவர்கள், இஸ்ரோ பணியாளர்கள், சிஎஸ்ஐஆர் பணியாளர்கள், அரசு அதிகாரிகள் ஆகியோர் அடக்கம்.

வணிகம், கலை, அறிவியல், பொறியியல், மேலாண்மை, மருத்துவம், சட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணிபுரியும் வல்லுநர்கள் இதில் சேர்ந்து படிப்பதிலிருந்தே இந்த பாடத் திட்டத்தின் முக்கியத்துவத்தை நாம் புரிந்துகொள்ளலாம். ஜேஇஇ நுழைவுத் தேர்வை எழுதாமலேயே சென்னை ஐஐடியில் இந்தப் படிப்பைப் படிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x