Published : 09 Apr 2022 11:00 AM
Last Updated : 09 Apr 2022 11:00 AM

சென்னையில் வேர்கள், கிழங்குகள் திருவிழா

வேர்கள், கிழங்குகள், பாரம்பரிய நெல் வகைகள், மரபு விதைகள், பாதுகாப்பான உணவு ஆகியவற்றின் மறுமலர்ச்சி குறித்த விழிப்புணர்வு இன்றைக்கு அவசியமாக உள்ளது. இந்தப் பின்னணியில் தி. நகர் தக்கர் பாபா வித்யாலயாவில் ’ரூட்ஸ் அண்ட் டியுபர் (வேர்கள், கிழங்கு)’ திருவிழா ஏப்ரல் 9 – 10 (சனி, ஞாயிறு) நடக்க இருக்கிறது. அல்லயன்ஸ் ஃபார் சஸ்டைனபில் அக்ரிகல்ச்சர், ஆர்கானிக் ஃபார்மர்ஸ் மார்க்கெட், சேஃப் புட் அல்லயன்ஸ், தக்கர் பாபா வித்யாலயா, சஹஜா சம்ருதா ஆகிய அமைப்புகள் இணைந்து இதை ஏற்பாடு செய்துள்ளன.

இயற்கை உணவு, இயற்கை ஆடை, மாடித் தோட்டம் உள்ளிட்டவைக் குறித்த கண்காட்சியும் விற்பனையும் நடைபெறும். கிழங்குகளை ஏன் வளர்க்க வேண்டும், எப்படி வளர்க்க வேண்டும், எதற்காக உட்கொள்ள வேண்டும், அவற்றின் நன்மைகள் என்ன என்பது குறித்து நிபுணர்கள் உரையாற்றுகிறார்கள். திரைப் பிரபலங்கள் நாசர், வெற்றிமாறன், விஷ்ணுவர்தன், த.செ. ஞானவேல், சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால், மருத்துவர் கு. சிவராமன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

கூடுதல் தகவலுக்கு: கோபி 97909 00887 / சீதா 99622 25225

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x