Published : 06 Apr 2016 11:00 AM
Last Updated : 06 Apr 2016 11:00 AM

விசில் அடிக்கும் கீரி!

கீரி இனத்தைச் சேர்ந்த சிறிய பாலூட்டி விலங்கு ‘பாலைவனக் கீரி. ஆங்கிலத்தில் இதை மீர்கட் ( Meerkat) அல்லது சூரிகேட் ( Suricate) என்று சொல்வார்கள். இதைப் பற்றி கொஞ்சம் பார்ப்போமா?

>> ஆப்ரிக்காவின் போட்ஸ்வானா நாட்டில் உள்ள கலகரி பாலைவனம், நமீபியாவின் நமிப் பாலைவனம், தென்மேற்கு அங்கோலா மற்றும் தென் ஆப்ரிக்காவில் இந்தப் பாலைவனக் கீரிகள் அதிகம் காணப்படுகின்றன.

>> கூட்டமாக வாழும் இயல்புடையவை பாலைவனக் கீரிகள். 20 முதல் 50 கீரிகள் ஒன்றாகச் சேர்ந்து வாழும்.

>> ஆண் கீரிகள் 730 கிராம் எடையும், பெண் கீரிகள் 720 கிராம் எடையும் இருக்கும்.

>> இதன் உடல் 25-35 செ.மீ. நீளம் வரையும், வால் 17-25 செ.மீ வரையிலும் இருக்கும். தனது இரண்டு கால்களையும் பயன்படுத்தி நிமிர்ந்து நிற்கும்போது சமநிலையில் இருக்க வால் பெரிதும் பயன்படுகிறது. வலுவாக இருக்கும் 4 விரல்கள், 2 செ.மீ. நீளத்தில் தோண்டி இரையைத் தேடிச் சாப்பிட உதவுகின்றன. வளைந்த நகங்கள் மரம் ஏறவும் உதவுகின்றன.

>> பல்லி, பாம்பு, சிலந்தி, தேள், முட்டை, சிறிய பாலூட்டிகள் மற்றும் சிறிய பறவைகளை இவை விரும்பிச் சாப்பிடும்.

>> ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் கால்களை உயர்த்தித் தூக்கி அசைக்கும். பிறகு விசில் சத்தம் எழுப்பி கூட்டத்தை எச்சரிக்கும். ஒவ்வொரு ஆபத்துக்கும் ஒவ்வொரு விதமாக சமிக்ஞை கொடுக்கும்.

>> குட்டிகள் பிறந்த கொஞ்ச நேரத்திலேயே தேவையான இரையைத் தானாகத் தேடிக் கொள்ளும்.

>> இள மஞ்சள், பழுப்பு மற்றும் பிரவுன் நிறங்களில் இவை காணப்படும். பாலைவனக் கீரிகளின் காதுகள் பூனையைப் போலவும், மூக்கு கூர்மையாகவும் இருக்கும்.

>> பாலைவனக் கீரிகள் 12 முதல் 14 ஆண்டுகள்வரை உயிர் வாழக்கூடியவை.

தகவல் திரட்டியவர்: ஆர். பிரசன்னா,
11-ம் வகுப்பு, பிஷப்ஹீபர் மேல்நிலைப் பள்ளி, திருச்சி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x