Published : 14 Mar 2022 10:21 AM
Last Updated : 14 Mar 2022 10:21 AM

மாறிவரும் சூழலுக்கேற்ற நிதித் திட்டங்கள்

ஆர். வெங்கடேஷ்

உங்களைச் சுற்றி நடைபெறும் நிகழ்வுகளை நீங்கள் எப்போதாவது கவனித்தது உண்டா? அப்படி கவனிக்கும்பட்சத்தில் பெரும்பாலும் உங்களை ஈர்க்கும் விஷயம் எதுவாக இருக்கும். வழக்கமான செய்தி மற்றும் அது சார்ந்த கலந்துரையாடல்கள், எதிர்காலம் குறித்த அலசல்கள் மற்றும் மாறிவரும் சூழல் குறித்த கருப்பொருள் அதிலும் குறிப்பாக மக்களுக்கு சாதகமான நடப்பு சூழல் எதுவோ அது உங்களது கவனத்தை ஈர்ப்பது நிச்சயம். அத்தகைய மாற்றங்கள் பல்வேறு வாய்ப்புகளை உருவாக்குவதாகவும் அமையும்.

அந்த வகையில் முதலீடுகள் சார்ந்த விஷயங்களில் இப்போது கருப்பொருள் சார்ந்த முதலீடுகள் (Thematic investments) மக்களை பெரிதும் கவரும் விஷயமாக உள்ளன. இதற்குக் காரணம் இத்தகைய முதலீடுகள் உங்களது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதமாகவும் உங்களது சிந்தனைகளுக்கு ஏற்பவும் இருப்பதே காரணமாகும். முதலீடுகளில் உத்திசார்ந்த முதலீடுகளில் கருப்பொருள் சார்ந்த முதலீடுகள் அனைத்துமே நீண்ட கால அடிப்படையில் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மாறும் சூழலுக்கேற்ப மேற்கொள்ளப்படுபவையாகும். வழக்கமாக ஒரு நிறுவனம் அல்லது ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்த முதலீடுகள் அல்லாமல் மேற்கொள்ளப்படுபவை. அதிலும் குறிப்பாக நலன் சார்ந்த முதலீட்டுத் திட்டங்களும் அவ்விதமானவையே. அந்த வகையில் கருப்பொருள் சார்ந்த முதலீடுகள் சரியாக மேற்கொள்ளப்படுமாயின் உங்களுக்கு சிறந்த பலனை அளிப்பதாகவும் உங்கள் நலன் சார்ந்ததாகவும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அந்த வகையில் நீங்கள் ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம். நீங்கள் கருப்பொருள் சார்ந்த முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்பவராக இருப்பின் அது இப்போது வளர்ந்து வரும் முதலீட்டுத் திட்டம் என்பதை முதலில் நீங்கள் உறுதியாக நம்ப வேண்டும். சர்வதேச அளவில் இதுதான் இப்போதைய சூழலாகும். கருப்பொருள் சார்ந்த முதலீட்டுத் திட்டங்களில் மேற்கொள்ளப்படும் உத்தியானது எந்தத் துறையில் வளர்ச்சி வாய்ப்புகள் அதிகமோ அவற்றில் முதலீடு செய்து அதன் மூலம் மிகச் சிறந்த லாபத்தை எட்டுவதுதான். அதற்கு நீங்கள் உங்களது முதலீட்டுத் திட்டங்களை தொடர்ந்து கண்காணித்து வர வேண்டும். அவ்விதம் கவனிக்கும் பட்சத்தில் உங்களுக்கு அதிகபட்ச லாபம் கிடைப்பது உறுதி. இவ்வித முதலீடுகளில் சந்தை அபாயம் மிகவும் குறைவு என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.

ஆர். வெங்கடேஷ், நிர்வாக இயக்குநர், குருராம், பைனான்சியல் சர்வீசஸ்

கருப்பொருள் சார்ந்த முதலீட்டுத் திட்டங்களை நீங்கள் தேர்வு செய்தால் மாறிவரும் சூழலுக்கேற்ற முதலீட்டுத் திட்டத்தை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். அவ்விதம் தேர்வு செய்யாமல் போனால் அது புத்திசாலித்தனமான முடிவாக இருக்காது. இதற்கு கருப்பொருள் சார்ந்த பரஸ்பர நிதித் திட்டங்கள் மிகவும் சரியானவையாக இருக்கும். இந்த நிதித் திட்டங்களில் திரட்டப்படும் நிதி வளர்ச்சி வாய்ப்புள்ள பல்வேறு துறைசார்ந்த திட்டங்களில் முதலீடு செய்யப்படும். இந்த நிதித் திட்டங்கள் அனைத்துமே மிகவும் நிபுணத்துவம் பெற்றவர்களால் நிர்வகிக்கப்படுகிறது. இதனால் இந்த முதலீட்டுத் திட்டங்களில் அதிகபட்ச லாபத்தை எட்டுவதோடு, எதிர்காலத்தில் மிகப் பெரும் ஆதாயத்தையும் நீங்கள் எட்ட வழியேற்படும்.

அந்த வகையில் இப்போது ஐசிஐசிஐ புரூடென்ஷியல் தீமேட்டிக் அட்வான்டேஜ் பண்ட் (எப்ஓஎப்) அறிமுகமாகியுள்ளது. இதில் திரட்டப்படும் நிதியானது பல்வேறு வளர்ச்சி வாய்ப்புள்ள துறைகளில் முதலீடு செய்யப்படும். அந்த வகையில் சிறந்த முதலீட்டாளராக இருந்தால் உங்களுக்குள்ள வாய்ப்புகளில் இதை நீங்கள் தேர்வு செய்யலாம்.

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் தீமேட்டிங் அட்வான்டேஜ் முதலீட்டுத் திட்டத்தில் திரட்டப்படும் நிதியை நிர்வகிக்கும் நிபுணர்கள் மாறிவரும் சந்தை வாய்ப்புகளை உன்னிப்பாகக் கவனித்து, அதில் வளர்ச்சி வாய்ப்புள்ள திட்டங்களில் முதலீடு செய்வதற்கு பரிந்துரைப்பர். இதற்கென வகுக்கப்பட்டுள்ள பல்வேறு அளவுகோளின்படி திட்டங்களைத் தேர்வு செய்வர். அனைத்துமே வளர்ச்சி வாய்ப்புள்ள திட்டங்களை அடையாளம் காண்பதாக மட்டுமே இருக்கும். இறுதியாக, வளர்ச்சி வாய்ப்புள்ள திட்டங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்பட்டு அதில் முதலீடு செய்யப்படும்.

இத்திட்ட முதலீடுகள் குறித்த விவரங்கள் உங்களது முதலீட்டு எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதாக இருந்தால் நீங்கள் இத்தகைய திட்டத்தில் முதலீடு செய்து அதிகபட்ச ஆதாயத்தை எட்டலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x