Published : 30 Dec 2021 01:31 PM
Last Updated : 30 Dec 2021 01:31 PM

நீதி இல்லாத இடத்தில் அமைதி இருக்காது

தென்னாப்பிரிக்க அமைதிப் போராளி. பேராயர் டெஸ்மான்ட் டுட்டு. பிறப்பு: 1931; மறைவு: 2021

எங்கே நீதி இல்லையோ அங்கே அமைதி இருக்காது. இந்த அழகிய பூமியில் வசிப்பவர்கள் அனைவருக்கும் சமநீதியை அனுபவிக்க முடியாவிட்டால் அங்கே உண்மையான அமைதியும் பாதுகாப்பும் இருக்காது. நீதி இல்லாத அமைதி கிடையவே கிடையாது என்பதையே வேதாகமம் வலியுறுத்துகிறது. அதனால்தான் "அமைதி அமைதி அமைதி" என்று கதறுகிறது (வேதாகமத்தில் வரும் ‘ஷாலோம்’ என்ற வார்த்தைக்கு சமாதானம் என்று பொருள்). கடவுளின் ஷாலோம் என்பது தவிர்க்க முடியாத நேர்மை, நீதி, முழுமை, தீர்மானம் எடுப்பதில் பங்கேற்பு, நல்லதன்மை, சிரிப்பு, மகிழ்ச்சி, பரிவு, பகிர்தல் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றைக் குறிப்பது.

***

கடவுளின் பிம்பத்தில் படைக்கப்பட்டவர்கள் என்ற நிலையில் மனித உயிர்கள் எல்லையற்ற மதிப்பு கொண்டவை என்பதை நாம் எப்போது கற்றுக்கொள்ளப் போகிறோம். அவர்களை மதிப்பு குறைவாக நடத்துவது என்பது மத நிந்தனை ஆகும். சக மனிதர்களைக் கீழ்மைப்படுத்துவதன் வழியாக அதைச் செய்பவர்கள் கீழ்மையை அடைகின்றனர். ஒடுக்குபவரையே கூடுதலாக கீழ்நிலைக்குத் அது தள்ளுவதாகக்கூட இருக்கலாம். நாம் மற்றவர்களின் கூட்டில், இணக்கத்தில் சமூகமாக இருந்தால் மட்டுமே மனிதனாகவும் சமாதானத்துடனும் இருக்க முடியும்.

***

நாம் மற்றவர்களை எதிரியாகப் பார்க்கத் தொடங்கும்போது நாம் வெறுப்பது எதுவோ அதுவாக மாறும் அபாயத்தில் இருக்கிறோம். நாம் மற்றவர்களை ஒடுக்கத் தொடங்கும்போது நம்மையே ஒடுக்குவதில் அது முடிகிறது. மற்றவர்களில் உள்ள மனிதார்த்தத்தை அங்கீகரிப்பதில்தான் ஒட்டுமொத்த மனிதகுலத்தின் மனிதார்த்தம் அடங்கியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x