Published : 05 Apr 2014 01:14 PM
Last Updated : 05 Apr 2014 01:14 PM

அந்த நாள் ஞாபகம்: கேரளாவின் முதல் முதலமைச்சர் பதவி ஏற்ற நாள்

1957, ஏப்ரல் 5

கேரளமாநிலத்தின் முதல் முதலமைச்சர், இந்தியாவின் முதல் காங்கிரஸ் அல்லாத முதலமைச்சர், முதல் கம்யூனிஸ்ட் முதலமைச்சர், என பலவகையில் சிறப்பு பெற்ற ஒரு முதலமைச்சர் பதவியேற்ற நாள் இன்று.

இ.எம்.எஸ் என அழைக்கப்படும் எலம்குளம் மனக்கல் சங்கரன் நம்பூதிரிப்பாட் (1909 1998) காங்கிரஸ் கட்சியில் தீவிரமாக பணியாற்றினார்.பிறகு அதன் ஓர் அங்கமாக சோசலிச காங்கிரஸ் கட்சியை 1934ல் உருவாக்கியவர்களில் ஒருவர் ஆனார். இக்காலகட்டத்தில் சென்னை மாகாண சட்டசபை உறுப்பினராகவும் (1939) தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பிறகு பொதுவுடைமைக் கட்சியில் இணைந்தார். புதிதாக அமைந்த கேரள மாநிலத்தில் நடந்த முதல் தேர்தலிலேயே, 1957, இந்திய பொதுவுடைமைக் கட்சிக்கு பெரும் வெற்றியைத் தேடித் தந்தார். ஏப்ரல் 5, 1957 ல் அவர் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற நாள் இன்று. நிலச் சீர்திருத்தங்கள் மற்றும் கல்விச் சீர்திருத்தங்களை அவரது அரசு நிறைவேற்றியது.

இந்திய அரசியல் வரலாற்றில் மற்றொரு முன்னோடி சம்பவமாக 1959ல் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் விதி 356 கீழ் அவரது அரசு கலைக்கப்பட்டது. முஸ்லிம் லீக் உள்ளிட்ட ஏழு கட்சி கூட்டணிக்கு தலைமையேற்று 1967ல் இரண்டாவது முறையாக முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.இம்முறை அவரது ஆட்சி இரண்டரை ஆண்டுகள் நீடித்தது. கேரள சட்டப்பேரவையில் எதிர்கட்சித் தலைவராக 1960 முதல் 1964 வரையும் பின்னர் 1970 முதல் 1977 வரையும் பணியாற்றினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x