Last Updated : 23 Mar, 2016 12:55 PM

 

Published : 23 Mar 2016 12:55 PM
Last Updated : 23 Mar 2016 12:55 PM

சாயலும் வித்தியாசமும்: அமைதியான நாயும் கலகலப்பான சிங்கமும்

கடல்நாயும் (Seal) கடல் சிங்கமும் (Sea lion) சட்டெனப் பார்ப்பதற்கு ஒரே சாயலில் இருப்பது போலத் தெரியும். ஆனால், இரண்டும் வெவ்வேறானவை. இரண்டுக்கும் சிறுசிறு வித்தியாசங்களும் உள்ளன. அவற்றைப் பார்ப்போமா?

# கடல் நாய், கடல் சிங்கம் இரண்டுக்குமே கால்கள் துடுப்புகள் போலவே இருக்கும். இரண்டுக்குமே பூனை மீசை உண்டு.

# கடல் நாயும் கடல் சிங்கமும் பெரும்பாலான நேரத்தைத் தண்ணீரிலேயே கழிக்கும். குட்டிபோடவும் ஓய்வெடுக்கவும் கரைக்கு வரும்.

# கடல் சிங்கங்களுக்கு காது மடிப்புகள் உண்டு. கடல் நாய்க்குக் காதுத் துளைகள் மட்டுமே இருக்கும்.

# கடல் சிங்கங்களுக்குக் கடல்நாய்களைவிட கழுத்து நீளம். மேலும் நிலத்திலும் வேகமாக நகரும் வண்ணம் அதன் பின்பகுதியிலுள்ள கனமான துடுப்புகள் உதவுகின்றன.

# கடல் நாய்களுக்கு முன்புறம் மெலிவான பிளந்த துடுப்புகள் உண்டு. கடல் நாய்கள் உடலளவில் சிறியவை. தரையைவிட தண்ணீரில்தான் அவை இயல்பாக இருக்கும். தரைக்கு வந்தால் வயிற்றால்தான் தவழவே முடியும். ஆனால், கடல் சிங்கங்கள் தரையிலும் வேகமாகச் செல்லும்.

# ஆண் கடல் சிங்கங்கள் 850 பவுண்டுகள் (1 பவுண்டு = 0.453 கிலோ) வரையும், பெண் கடல் சிங்கங்கள் 250 பவுண்டுகள் எடைவரை வளரும்.

# ஆண் கடல் நாய்களோ 350 பவுண்டுகள் வரை தான் வளரும். பெண் கடல் நாய்கள் 250 பவுண்டுகள் வரை இருக்கும்.

# கடல் நாய்கள் பெரும்பாலும் தனிமையையும் அமைதியையும் விரும்பும். கடல் சிங்கங்களோ கூட்டமாகவும் கலகலப்பாகவும் இருக்கவே விரும்பும்.







FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x