Last Updated : 23 Nov, 2021 10:40 AM

 

Published : 23 Nov 2021 10:40 AM
Last Updated : 23 Nov 2021 10:40 AM

சேதி தெரியுமா?

நவ.14: ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற எட்டாவது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா முதன்முறையாகக் கோப்பையை வென்றது.

நவ.15: உலகில் 60 சதவீத வருவாய் உள்ள 10 நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவைப் பின்னுக்குத் தள்ளி சீனா முதலிடம் பிடித்தது.

நவ.16: 2024ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை முதன்முறையாக மேற்கிந்திய தீவுகளுடன் இணைந்து அமெரிக்கா நடத்துகிறது. 29 ஆண்டுகளுக்குப் பிறகு 2025இல் பாகிஸ்தானில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டி நடைபெறுகிறது. 2024 - 2031 காலகட்டத்தில் இந்தியா மூன்று ஐசிசி தொடர்களை நடத்த உள்ளது.

நவ.17: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஸ்வர்நாத் பண்டாரி நியமிக்கப்பட்டார். அவர் பொறுப்பேற்கும் வரை அப்பொறுப்பை மூத்த நீதிபதி துரைசாமி வகிப்பார் என்று குடியரசுத் தலைவர் உத்தரவிட்டார்.

நவ.17-18: இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவில் அனைத்திந்திய சட்டப்பேரவைத் தலைவர்கள் மாநாடு நடைபெற்றது. அனைத்திந்திய சட்டப்பேரவைத் தலைவர்கள் மாநாட்டின் நூற்றாண்டைக் கொண்டாடும்விதமாக இம்மாநாடு நடைபெற்றது.

நவ.18: தமிழகத்தில் விளையாட்டு வீரர்களுக்கான மூன்று சதவீத இட ஒதுக்கீட்டில் சிலம்பாட்டம் விளையாட்டைச் சேர்த்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

நவ.18: மயானங்களில் பணிபுரியும் ஊழியர்களை முன்களப் பணியாளர்களாக அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

நவ.19: மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாகப் பிரதமர் மோடி அறிவித்தார்.

நவ.19: அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு முழு உடல் பரிசோதனையில் மயக்க மருந்து கொடுக்கப்பட்டதால், சில மணி நேரங்களுக்குத் தற்காலிக அதிபர் பொறுப்பை கமலா ஹாரிஸ் ஏற்றார். அமெரிக்க வரலாற்றில் பெண் ஒருவர் அதிபர் அதிகாரங்களை ஏற்றது இதுவே முதன்முறை.

நவ.19: 580 ஆண்டுகளுக்குப் பின்பு வானில் நீண்ட சந்திர கிரகணம் நிகழ்ந்தது. இதற்கு முன்பு நீண்ட சந்திர கிரகணம் 1440ஆம் ஆண்டு பிப்ரவரி 18 அன்று நிகழ்ந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x