Published : 06 Aug 2021 06:44 am

Updated : 06 Aug 2021 06:44 am

 

Published : 06 Aug 2021 06:44 AM
Last Updated : 06 Aug 2021 06:44 AM

கோலிவுட் ஜங்ஷன்: 1925-ல் குத்துச் சண்டை!

kollywood-junction

சற்குணம் - அதர்வா கூட்டணி!

‘களவாணி 2’ படத்துக்குப் பிறகு சற்குணம் இயக்கும் புதிய படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. ஜிப்ரான் இசையமைக்கும் இந்தப் படத்தில் அதர்வா கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக அறிமுகமாகிறார் ஆஷிகா ரங்கநாத். குடும்பக் கதையாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தஞ்சையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.


இரண்டு நாயகிகள்!

கார்த்திக் நரேன் இயக்கத்தில் 'மாறன்' என்கிற படத்தில் நடித்துவருகிறார் தனுஷ். இப்படம் முடிந்ததும், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கவுள்ள படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் தனுஷுடன் பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் ஒப்பந்தம் இணைந்துள்ளனர்.இதில் ப்ரியா பவானி சங்கர், ராஷி கண்ணா என தனுஷுக்கு இரண்டு கதாநாயகிகள். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தனுஷ் - அனிருத் இப்படத்தில் இசைக்கூட்டணி அமைத்துள்ளனர்.

1925-ல் குத்துச் சண்டை!

பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி ஓடிடியில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ள படம் ‘சார்பட்டா பரம்பரை’. இந்தப் படத்தில் இடம்பெற்ற 70-களின் குத்துச் சண்டை காலகட்டத்துக்கு முன்னர் நிகழ்வதுபோன்ற ஒரு முன்கதையை, தமிழ்ப் பிரபா, கரன் கார்க்கி, பாக்கியம் சங்கர் ஆகிய மூவருடன் இணைந்து எழுதி வருவதாக பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார் பா.ரஞ்சித்.

“1925-ல் ஆரம்பிக்கும் அந்தக் கதையை யோசிக்கும்போதே பின்னி மில் கலவரம் உள்ளிட்ட பல விஷயங்கள் சேர்ந்து பிரமிப்பாக இருக்கிறது. இதைத் திரைப்படமாக எடுக்கும் ஆசையும் இருக்கிறது. அல்லது வெப் சீரீஸாகவும் ஆக்கலாம். என்ன நடக்கும் என்று பார்க்கலாம்" என்று தெரிவித்திருக்கிறார்.

முதல் தோற்றம்!

இயக்குநர் கே எஸ் ரவிக்குமாரின் தயாரிப்பு மற்றும் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘கூகுள் குட்டப்பா’. இதில் தர்ஷன், லாஸ்லியா மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன்’ என்கிற மலையாளப் படத்தின் தமிழ் ரீமேக்கான இதை சபரிகிரீசன் - குரு சரவணன் இணைந்து இயக்கியுள்ளனர். இவர்களில் சபரிகிரீசன் இயக்குநர்
கே.எஸ். ரவிக்குமாரின் அண்ணன் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் முதல் தோற்றத்தை சமீபத்தில் சூர்யா வெளியிட்டுள்ளார்.


Kollywood junctionகோலிவுட் ஜங்ஷன்1925-ல் குத்துச் சண்டைசற்குணம் - அதர்வா கூட்டணி!

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x