Published : 07 Dec 2015 10:23 AM
Last Updated : 07 Dec 2015 10:23 AM

உள்ளூரில் உதிரிபாக உற்பத்தி: குறைகிறது எஸ்யுவி கார்களின் விலை

தற்போது வெளிநாட்டு நிறுவனங்கள் சில உள்நாட்டிலேயே சர்வதேச பிராண்டுகளைத் தயாரிக்கின்றன. முக்கியமான பாகங்களை மட்டும் வெளிநாட்டில் உள்ள தாய் நிறுவனத் திலிருந்து இறக்குமதி செய்து மற்றவற்றை இங்குள்ள ஆட்டோ மொபைல் உதிரிபாக சப்ளையர்களி டமிருந்து பெற்று தயாரிக்கத் தொடங்கி யுள்ளன. உதிரி பாகங்கள் பயன்படுத்தும் அளவு அதிகரிக்க அதிகரிக்க கார்களின் விலை குறையும். அந்த வகையில் இப்போது பெரும்பாலான எஸ்யுவி கார்களின் விலைகள் கணிசமாகக் குறைந்துள்ளன.

ஜாகுவார் லேண்ட் ரோவர், மெர்சிடெஸ் பென்ஸ், பிஎம்டபிள்யூ, ஆடி உள்ளிட்ட கார்கள் உள்நாட்டு உதிரிபாகங்களை அதிக அளவில் பயன்படுத்துகின்றன. இதனால் இவற்றின் விலை குறையத் தொடங்கி யுள்ளது.

ஏறக்குறைய 24-க்கும் அதிகமான கார் மாடல்கள் இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படுகிறது. உள்ளூர் பாகங்கள் பயன்படுத்துவதால் கார்களின் விலை ரூ.2 லட்சம் முதல் ரூ. 90 லட்சம் வரை குறைந்துள்ளதாக நிறுவன தயாரிப் பாளர்கள் தெரிவிக்கின்றனர். டாடா நிறுவனத்தின் ஜாகுவார் லாண்ட் ரோவர் எஸ்யுவி காரின் விலை ரூ. 8 லட்சம் குறைந்துள்ளது. இந்நிறுவனத்தின் ரேஞ்ச் ரோவர் எவோக் மாடல் காரின் விலை ரூ. 47 லட்சமாகும். உள்ளூர் உதிரி பாகங்களை பயன்படுத்தியதால் விலை குறைந்துள்ளது.

இதேபோல சொகுசு கார்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஜெர்மனியின் மெர்சிடெஸ் பென்ஸ் நிறுவனம் தனது மேபாக் எஸ் 500 ரக மாடல் கார்களில் அதிக அளவில் உள்ளூர் உதிரி பாகங்களை பயன்படுத்தி யுள்ளது. இதனால் கார்களின் விலை ரூ.93 லட்சம் முதல் ரூ. 1.67 கோடி வரை குறைந்துள்ளதாக நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜெர்மனியிலுள்ள தாய் நிறுவனத்துக்கு அடுத்தபடியாக மேபாக் ரக கார்கள் தயாரிக்கப்படுவது இந்தியாவில் மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜேஎல்ஆர் மற்றும் பென்ஸ் கார்கள் புணேயில் உள்ள சக்கன் ஆலையில் உருவாக்கப்படுகிறது. இதேபோல பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது கார்களில் 50 சதவீத அளவுக்கு உள்ளூர் உதிரி பாகங்களை பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. இந்நிறுவனம் இந்தியாவில் 8 மாடல்களில் கார்களைத் தயாரிக்கிறது. இதனால் கார்களின் விலை ரூ. 29 லட்சம் முதல் ரூ. 1.25 கோடி வரை விலை குறைந்துள்ளதாக நிறுவனத்தினரே தெரிவிக்கின்றனர்.

உள்ளூர் உதிரிபாக தயாரிப்பால் கிடைக்கும் வரிச் சலுகையின் பலனை வாடிக்கையாளர்களுக்கு அளிப்பதால் விலை குறைந்துள்ளது. உள்ளூர் உதிரி பாகங்களை பயன்படுத்துவது அதிகரிக்க அதிகரிக்க விலை குறை யும். இதைத்தான் மேக் இன் இந்தியா திட்டமும் கூறுகிறது. அது முழுவீச்சில் நிறைவேறும்போது பலருக்கு கனவாக மட்டுமே இருக்கும் சொகுசு கார்கள் சாத்தியமாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x