Published : 28 Mar 2020 08:53 AM
Last Updated : 28 Mar 2020 08:53 AM

வீட்டுக்குள் கைகொடுக்கும் செயலிகள்

உலகை ஒட்டுமொத்தமாகப் புரட்டிப் போட்டிருக்கிறது கரோனா வைரஸ். இந்த வைரஸ் பரவலில் இருந்து தற்காத்துக்கொள்ள, மேற்கொள்ளப்படும் முயற்சிகளில் முக்கியமானது வீட்டில் இருந்தே பணியாற்றுதல்.

இந்த வேளைகளில் ஏற்படும் சலிப்பைக் களைவதற்கும், கவனச் சிதறலைத் தடுப்பதற்கும் சில செயலிகள் உதவுகின்றன. கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாகத் தரவிறக்கிக்கொள்ளக் கிடைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில செயலிகளின் பட்டியல்:

HEADSPACE

திடீரென வீட்டில் இருந்து தொடர்ச்சி யாகப் பணியாற்றுவதால் இறுக்கமும் மன அழுத்தமும் ஏற்படலாம். அதிலிருந்து விடுபட, மனதை உடனடியாக அமைதிப் படுத்த 2-3 நிமிட குட்டி தியானத்துக்கு இந்தச் செயலி உதவுகிறது.

இணையச் சுட்டி: https://bit.ly/2QEqB6P

TIDE

உங்கள் கவனம் சிதறாமல் இருக்க, கவனக் குவிப்பைக் கட்டுக்குள் வைக்கும் விதமான பின்னணி இசையை வழங்கி, நீங்கள் தடையின்றி பணியாற்ற இந்தச் செயலி வழிசெய்கிறது.

இணையச் சுட்டி: https://bit.ly/2WAsbur

JOIN ME

இந்தக் கையடக்கச் செயலியின் மூலம் செய்தி களைப் பகிர்ந்துகொள்ளலாம்; கான்ஃபரன்ஸ் காலில், திரையை சக பணியாளர் களுடன் பகிர்ந்துகொள்ளும் வசதியும் இதில் உண்டு.

இணையச் சுட்டி: https://bit.ly/2UdZCBw

HOURS

நீங்கள் எந்த வகைகளில் எல்லாம் நேரத்தைச் செலவிடுகிறீர்கள் என்பதைக் கண்காணிக்க இந்தச் செயலி உதவுகிறது. தனிநபராக மட்டுமல்லாமல், குழுவாகவும் இந்தச் செயலியைப் பயன்படுத்த முடியும்.

இணையச் சுட்டி: https://bit.ly/33GzCl3

DOWN DOG

இந்த நாட்களில் உடற்பயிற்சிக் கூடத்துக்குச் செல்ல இயலாத குறையை இந்தச் செயலி போக்குகிறது. சுமார் 60,000 வெவ்வேறு பயிற்சி அசைவுகளைக் கொண்டிருக்கும் இந்தச் செயலியைப் பயன்படுத்துவதன் மூலம், உடற்பயிற்சியில் உங்களுக்குச் சலிப்பே ஏற்படாது.

இணையச் சுட்டி: https://bit.ly/39dL0pY

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x