Published : 23 Jan 2020 14:25 pm

Updated : 23 Jan 2020 14:25 pm

 

Published : 23 Jan 2020 02:25 PM
Last Updated : 23 Jan 2020 02:25 PM

வார ராசி பலன் 23-01-2020 முதல் 29-01-2020 வரை (மேஷம் முதல் கன்னி வரை)

weekly-horoscope

மேஷ ராசி வாசகர்களே

இந்த வாரம் குரு பார்வை, ராசியில் விழுவதால் எடுக்கும் காரியங்களில் வெற்றி வந்து சேரும். சிக்கலான பிரச்சினைகளில் சுமுகமான முடிவைக் காண முற்படுவீர்கள். சூரியன் சஞ்சாரம் ராசிக்கு 10-ல் இருப்பதால் மனத்தடுமாற்றம் நீங்கும். வேறு வேலைக்கு முயல்பவர்களுக்கு நல்ல செய்தி வரும். குடும்பத்தில் இருந்த பிரச்சினை நீங்கும். கணவன் மனைவிக்குள் இருந்த கருத்து வேற்றுமை அகலும். பிள்ளைகளிடம் அன்பாகப் பழக வேண்டும். பெண்களுக்கு, அனுகூலமற்ற காரியங்களைக்கூடச் சுமுகமாக முடித்து விடுவீர்கள். கலைத் துறையினருக்கு, நன்மைகள் நடக்கும் காலகட்டம் இது. அரசியல்வாதிகளுக்கு, எதிர்காலம் தொடர்பில் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். மாணவர்களுக்கு, கல்விக்குத் தேவையான புத்தகங்கள், உபகரணங்கள் வாங்குவீர்கள். படிப்பில் ஆர்வம் உண்டாகும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்
திசைகள்: கிழக்கு, வடக்கு
நிறங்கள்: சிவப்பு, மஞ்சள்
எண்கள்: 1, 3, 9
பரிகாரம்: முருகனுக்குப் பால் பாயசம் நிவேதனம் செய்து வணங்கி வர மனக்கவலை நீங்கும்.

ரிஷப ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் சுக்கிரனின் சஞ்சாரத்தால் பொன், பொருள் சேர்க்கை இருக்கும். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். தொழில் ஸ்தானத்தில் புதன் - சுக்கிரன் இருக்கிறார்கள். தொழில், வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூல் செய்வதில் வேகம் காண்பிப்பார்கள். பணி நிமித்தமாக அலைச்சல் இருக்கும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்குள் மனவருத்தம் நீங்கும். குழந்தைகளால் மனநிம்மதி கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் இருக்கும். பெண்களுக்கு, எதைப் பற்றியாவது நினைத்துக் கவலைப்படுவீர்கள். கலைத் துறையினருக்குப் எதிர்பார்த்த வாய்ப்புகள், வந்து சேரும். அரசியல்வாதிகளுக்கு, எல்லா வேலைகளுக்கும் கூடுதல் முயற்சி தேவையாக இருக்கும். மாணவர்களுக்கு, கல்வியில் வெற்றிபெறத் திட்டமிடுவீர்கள். சக மாணவர்களின் உதவி கிடைக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வெள்ளி
திசைகள்: மேற்கு, வடமேற்கு
நிறங்கள்: வெள்ளை
எண்கள்: 2, 6
பரிகாரம்: அம்மனை வணங்க எல்லாக் காரியங்களும் நல்லபடியாக நடக்கும்.

மிதுன ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் புதன் சஞ்சாரத்தால் நெருக்கடி நிலை அகலும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். பயணங்களால் நன்மை ஏற்படும். தொழில், வியாபாரத்தில் லாபம் குறைவது போல் இருந்தாலும் பணவரவு திருப்திகரமாக இருக்கும். கணவன் மனைவிக்குள் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்ல வேண்டும். குழந்தைகளின் எதிர்கால நலன் பற்றிச் சிந்திப்பீர்கள். உங்களது உடைமைகளைக் கவனமாகப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். நண்பர்களால் அனுகூலம் ஏற்படும். பெண்களுக்குப் பணவரவு திருப்தி தரும். அரசியல்வாதிகள், தொண்டர்களின் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்வீர்கள். கலைத் துறையினருக்குப் புதிய வாய்ப்புகள் தேடி வரும். செல்வாக்கு உயரும். மாணவர்களுக்கு, பாடங்களைப் படிக்க வேண்டிய கட்டாயம் உண்டாகும். ஆசிரியர், சக மாணவர்களிடம் இணக்கம் தேவை.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன்
திசைகள்: வடக்கு, தென்மேற்கு
நிறங்கள்: வெள்ளை, பச்சை
எண்கள்: 2, 5
பரிகாரம்: பானகம் அர்ப்பணித்து பெருமாளை வணங்கக் குடும்பம் சுபிட்சமடையும்.

கடக ராசி வாசகர்களே

இந்த வாரம் ஆறாமிடத்தில் இருக்கும் கிரகத்தின் சேர்க்கையால் உடல் ஆரோக்கியம் சிறக்கும். திட்டமிட்டுச் செயலாற்றுவதில் பின்னடைவு அகலும். பக்தியில் நாட்டம் அதிகரிக்கும். தொழில், வியாபாரம் தொடர்பில் சிக்கல்கள் தீரும். வாடிக்கையாளர்களுக்கு உத்தரவாதங்கள் தரவேண்டாம். உத்தியோகத்தில் வேலைப்பளு இருப்பது போல் உணர்வார்கள். கணவன் மனைவிக்குள் பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகளின் படிப்பில் அக்கறை காட்டுங்கள். கலைத் துறையினர் கடினமாக உழைத்தால்தான் துறையில் வெற்றி வாகை சூடலாம். பெண்களுக்கு, மற்றவர்களிடம் சில்லறைச் சண்டைகள் ஏற்படாமல் இருக்க இணக்கமாகப் பேசுங்கள். அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை தொண்டர்களின் ஆதரவுடன் செயற்கரிய செயல்களைச் செய்வீர்கள். மாணவர்களுக்கு, கல்வியில் இருந்த மெத்தனப் போக்கு மாறும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வியாழன்
திசைகள்: மேற்கு, வடமேற்கு
நிறங்கள்: வெள்ளை, நீலம்
எண்கள்: 2, 6
பரிகாரம்: அங்காள பரமேஸ்வரியை வேப்பிலை கொடுத்து வணங்கப் பிரச்சினைகள் சுமுகமாய் முடியும்.

சிம்ம ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் சூரியன் ஆறாமிடத்தில் உலவுவதால் உடல்நிலை தேறும். செலவு கட்டுக்குள் இருக்கும். காரியத் தடைகள் நீங்கும். தொழில், வியாபாரத்தில் பணவரவு நன்றாக இருக்கும். உத்தியோகம் தொடர்பில் இடமாற்றம் உண்டாகலாம். குடும்பாதிபதி புதன் சப்தம ஸ்தானத்தில் இருக்கிறார். குடும்பத்தில் பிரச்சினைகள் குறையும். கணவன் மனைவிக்குள் பூசல்கள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். கேதுவின் சஞ்சாரம் ஆன்மிகத்தில் நாட்டத்தை ஏற்படுத்தும். பெண்களுக்கு, தடைபட்ட காரியங்கள் நடந்து முடியும். அரசியல்வாதிகளுக்கு, சங்கடங்கள் குறையத் தொடங்கும். கலைத் துறையினருக்கு ,திறமைக்கேற்ற புகழும், கவுரவமும் கட்டாயம் கிடைக்கும். மாணவர்களுக்கு, கல்வியில் நாட்டம் உண்டாகும். போட்டிகள் நீங்கும். சக மாணவர்களுடன் இருந்த மனக்கசப்பு மாறும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்
திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு
நிறங்கள்: வெள்ளை, சிவப்பு
எண்கள்: 1, 3, 9
பரிகாரம்: சிவபெருமானை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும்.

கன்னி ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியாதிபதி புதன், ராசிக்கு மறைந்திருந்தாலும் அவரின் பாதசார சஞ்சாரத்தால் நெருக்கடியான பிரச்சினைகள் நீங்கும். பணவரவு அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்களைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும். தொழில், வியாபாரம் முன்னேற்றமாக நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் ஏற்படும். எதிர்பார்த்த பணி இடமாற்றம் கிடைக்கும். குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை சேரும். கலைத்துறையினருக்கு, அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். பெண்களுக்கு, திட்டமிட்டபடி காரியங் களைச் செய்து முடிப்பீர்கள். அரசியல்வாதிகள் அனைவரையும் அரவணைத்துச் செல்வீர்கள். மாணவர்களுக்கு, மன மகிழ்ச்சி ஏற்படும் சம்பவங்கள் நிகழும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வெள்ளி
திசைகள்: தெற்கு, தென்மேற்கு
நிறங்கள்: பச்சை, வெளிர் நீலம்
எண்கள்: 5, 6
பரிகாரம்: அய்யப்பனுக்கு நெய் அபிஷேகம் செய்து வணங்கி வர சகல தோஷங்களும் நீங்கும்.


வார ராசி பலன்மேஷம் முதல் கன்னி வரைமேஷம்கன்னிWeekly HoroscopeHoroscopeபெருங்குளம் ராமகிருஷ்ண ஜோதிடர்ஜோதிடர்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author