Published : 30 Dec 2019 11:40 AM
Last Updated : 30 Dec 2019 11:40 AM

வெற்றி மொழி: பருச் ஸ்பினோசா

1632-ம் ஆண்டு பிறந்த பருச் ஸ்பினோசா டச்சு தத்துவஞானி மற்றும் மேற்கத்திய தத்துவத்தின் மிக முக்கியமான சிந்தனையாளர் ஆவார். தனது நெறிமுறைகளுக்காக தத்துவஞானிகளிடையே பெரிதும் அறியப்படுபவர்.

இவரது காலத்துக்குப் பிந்தைய நூற்றாண்டுகளில் தத்துவம், இறையியல் மற்றும் அரசியல் ஆகியவற்றை வடிவமைத்ததில் இவரது எழுத்துகள் முக்கியப் பங்கு வகித்தன. 1677-ம் ஆண்டில் தனது 44-வது வயதில் நுரையீரல் நோய் பாதிப்பின் காரணமாக மறைந்தார். டச்சு பொற்காலத்தின் முன்னணி தத்துவவாதியாக மட்டுமின்றி பதினேழாம் நூற்றாண்டு தத்துவத்தின் சிறந்த பகுத்தறிவாளர்களில் ஒருவராகவும் கருதப்படுகிறார்.

* புரிந்துகொள்ள கற்றுக்கொள்வதே ஒரு மனிதன் அடையக்கூடிய மிக உயர்ந்த செயல்பாடாகும்.
* அச்சத்துடன் ஒன்றிணைக்கப் படாத நம்பிக்கையும் இல்லை, நம்பிக்கையுடன் ஒன்றிணைக்கப்படாத அச்சமும் இல்லை.
* எல்லா மகிழ்ச்சியும் அல்லது மகிழ்ச்சியின்மையும் நாம் அன்பினால் இணைக்கப்பட்டுள்ள பொருளின் தரத்தைப் பொறுத்தது. மனித செயல்களைப் பார்த்து சிரிக்கக் கூடாது; அவர்களைப் பார்த்து அழக் கூடாது; வெறுக்கக் கூடாது; ஆனால் அவற்றைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று நான் முயற்சித்தேன்.
* நிகழ்காலம் கடந்த காலத்திலிருந்து வேறுபட்டதாக இருக்க விரும்பினால், கடந்த காலத்தை ஆராயுங்கள்.
* மிகப்பெரிய பெருமை அல்லது மிகப்பெரிய ஏமாற்றம் என்பது ஒருவரது சுயத்தின் மிகப்பெரிய அறியாமை.
* நல்லொழுக்கத்தின் முதல் மற்றும் ஒரே அடிப்படை புரிந்துகொள்வதற்கான முயற்சியே.
* பெருமை என்பது ஒரு மனிதனின் சிந்தனையிலிருந்து தன்னைவிட அதிகமாக எழும் இன்பம்.
* இயற்கைக்கு முரணானது எதுவும் நியாயத்துக்கு முரணானது, பகுத்தறிவுக்கு முரணானது எதுவும் *அறிவியல் மற்றும் கலைகளின் முன்னேற்றத்துக்கு சுதந்திரம் முற்றிலும் அவசியம்.
*அமைதி என்பது போர் இல்லாதது அல்ல, வலிமையை அடிப்படையாகக் கொண்ட ஒரு நல்லொழுக்கம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x