Last Updated : 12 Aug, 2015 11:34 AM

 

Published : 12 Aug 2015 11:34 AM
Last Updated : 12 Aug 2015 11:34 AM

கற்பனை உயிரினம்: நெருப்பில் குதித்துப் பனியைத் தின்னும் பறவை

“பீனிக்ஸ் பறவை போல மீண்டு வருவேன்” என்று தோல்வியடைந்தவர்கள் சொல்வதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். புத்துயிர்ப்புக்கும்கூடப் பீனிக்ஸ் பறவையை அடையாளமாகச் சொல்வார்கள். இந்தப் பீனிக்ஸ் பறவை என்பது கிரேக்கப் புராணக் கதைகளில் வரும் பறவை. இது மரணம் இல்லாத வாழ்வைக் குறிக்கும் பறவை. சூரியக் கடவுளுடன் தொடர்புடைய பறவையும்கூட.

l அரேபியாவில் ஒரு குளிர்ந்த நீர் கிணறு ஒன்றின் அருகில் வசிப்பதாகக் கற்பனை செய்யப்படும் பறவை பீனிக்ஸ்.

l பீனிக்ஸ் ஒரு கழுகைப் போல, தீக்கோழி போல அளவில் இருக்கும் என்று பல கதைகளில் கூறப்பட்டுள்ளன.

l ஒரு சமயத்தில் ஒரேயொரு பீனிக்ஸ் பறவைதான் உயிர்வாழுமாம். அதுவும் 500 முதல் 1000 ஆண்டுகள்கூட வாழுமாம் அந்தப் பறவை.

l தனக்கு மரணம் நேரும் என்று பீனிக்ஸ் பறவை உணர்ந்தவுடன் வாசனையான மரச்சுள்ளிகளைச் சேகரித்து, சூரியன் மறைந்தவுடன் அந்த மரச்சுள்ளிகளுக்கு நெருப்பு வைத்து அதிலே குதித்து இறந்துவிடுமாம்.

l பீனிக்ஸ் பறவை இறந்த பிறகு சாம்பலிலி ருந்து ஒரு புழு பிறக்கும். அது அழகான சின்னஞ்சிறு பீனிக்ஸ் பறவையாக மாறும். தனது தந்தையின் சாம்பலை ஒரு பந்துபோலச் செய்துகொண்டு அந்தக் குட்டிப்பறவை கிரேக்க நகரமான ஹெலியோபோலீசுக்குப் பறக்கும்.

l கிரேக்கத்தில் உள்ள சூரியக் கடவுள் கோயிலில் தந்தைப் பறவைக்கு இறுதிக் கடனைச் செய்துவிட்டு மீண்டும் அரேபியா திரும்பவிடும். பின்னர் அந்தப் பறவை நீண்ட நாட்களுக்கு வாழும்.

l அமெரிக்காவில் சான்பிரான்சிஸ்கோ மாகாணத்தின் கொடியில் பீனிக்ஸ் பறவை இடம் பெற்றுள்ளது.

l வீழ்த்தவே முடியாத ரோமானிய அரசின் அடையாளமாக பீனிக்ஸ் பறவை ஒப்பிடப்பட்டுள்ளது.

l அரேபியக் கதைகளிலும் பீனிக்ஸ் பறவை இடம் பெற்றுள்ளது. செந்தூரமும் தங்க நிறமும் கலந்த இறகுகளைக் கொண்ட பறவையாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.

l சீனப் புராணக் கதைகளில் வரும் பீனிக்ஸ் நல்லொழுக்கப் பண்புகளுடன் கருணையின் அடையாளமாகக் கருதப்படுகிறது. பனித்துளியை மட்டுமே உண்ணும் பறவையாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.

l சீனப் பீனிக்ஸ் பறவையின் அலகு சேவலுடையது. அதன் முகம் தைலான் குருவியினுடையது. பாம்பின் கழுத்து, வாத்தின் மார்பு, ஆமையின் முதுகு, கலைமானின் கால்கள், மீனின் வாலைக் கொண்டிருக்கும் அழகான பறவை அது.

l சீனப் பீனிக்ஸ் பறவை, பாம்பைப் பார்த்தால் தனது சிறகை விரித்துக் கால் நகங்களால் தாக்கும். சீனாவில் பீனிக்ஸ் பறவை கதைகளிலும், ஓவியங்களிலும் 7,000 ஆண்டுகளுக்கு மேலாகச் சித்தரிக்கப்பட்டுவருகின்றன. சீன பீனிக்ஸ் பறவையின் இறகுகள் கருப்பு, வெள்ளை, சிகப்பு, பச்சை மற்றும் மஞ்சள் நிறங்கள் கலந்து காணப்படும்.







FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x