Published : 03 Oct 2019 11:43 AM
Last Updated : 03 Oct 2019 11:43 AM

வார ராசிபலன் 03-09-2019 முதல் 09-10-2019 வரை (துலாம்  முதல் மீனம் வரை)

துலாம் ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் சுக்கிரன் ராசிக்கு வருவதால் எதிலும் முன்னேற்றம் காணப்படும். உங்கள் உழைப்புக்கான அங்கீகாரம் இல்லாமல் போகலாம். குடும்பத்தில் அமைதி இருக்கும். கணவன், மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். வீடு, மனை, வாகன விஷயங்களில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். பெண்களுக்கு, பணவரத்து திருப்தி தரும். வீண் பேச்சைக் குறைப்பது நன்மை தரும்.

அலுவலகத்தில் அங்கீகாரம் பெறுவீர்கள். கலைத் துறையினரின் படைப்புகளுக்குச் சந்தை மதிப்பு உயரும். விருதுகளுக்கான வாய்ப்பு உண்டு. உங்களது கலைத் திறன் வளரும். அரசியல்வாதிகளுக்கு, நற்பலன்கள் கிடைத்தாலும் மனக்கஷ்டமும் அவ்வப்போது உண்டாகும். எதையும் தீர ஆலோசித்துச் செய்ய வேண்டும். மாணவர்களுக்கு, கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். விளையாட்டுப் போட்டிகளுக்காக வெளியூர் செல்வீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வெள்ளி.
திசைகள்: கிழக்கு, தெற்கு.
நிறங்கள்: சிவப்பு, வெள்ளை.
எண்கள்: 5. 6, 9.
பரிகாரம்: அஷ்டலட்சுமிகளையும் வணங்கி வர மனோதைரியம் கூடும்.

விருச்சிக ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் செவ்வாய் லாபஸ்தானத்தை அலங்கரிப்பதால் அனுகூலமான பலன்களை எதிர்பார்க்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். கணவன் மனைவிக்குள் இடைவெளி குறையும். பெண்களுக்கு, நீண்ட நாட்களாகச் செய்ய நினைத்த ஒரு காரியத்தைச் செய்து முடிப்பீர்கள். தந்தைவழி உறவினர்களின் ஆதரவு இருக்கும். கலைத் துறையினரின் படைப்புத் திறன் வளரும்.

பொது நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்குவீர்கள். நல்ல வாய்ப்புகள் வரும். அரசியல்வாதிகளுக்கு, உங்களைப் பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேர்வார்கள். மேலிடத்தில் நெருக்கம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு, கல்வியில் இருந்த தடைகள் நீங்கும். திறமை வெளிப்படும். ஆசிரியர்களுடன் நல்ல உறவு ஏற்படும். பெற்றோர் ஆதரவாக இருப்பார்கள். வெளிநாட்டுக் கல்விக்கு முயற்சி செய்தவர்களுக்கு நல்ல செய்தி வரும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்.
திசைகள்: மேற்கு, வடக்கு.
நிறங்கள்: மஞ்சள், பச்சை.
எண்கள்: 2, 6, 9.
பரிகாரம்: பெருமாளை வணங்கி வர முன்ஜென்மப் பாவம் நீங்கும். திருமணம் கைகூடும்.

தனுசு ராசி வாசகர்களே

இந்த வாரம் தொழில் ஸ்தானத்தைச் சூரியன், செவ்வாய், சுக்கிரன் அலங்கரிப்பதால் வெளியூர்ப் பயணங்கள் உண்டாகலாம். வர்த்தக ஆர்டர்கள் பெறுவதில் தாமதம் ஏற்பட்டு நீங்கும். உத்தியோகத்தில் வீண் அலைச்சல், வேலைப் பளு இருக்கும். கணவன் மனைவிக்குள் கருத்து வேற்றுமை வரலாம். பிள்ளைகள் விஷயத்தில் கூடுதல் கவனம் வேண்டும். உறவினர் வருகை சந்தோஷம் தரும்.

பெண்களுக்கு, நினைத்த காரியத்தைச் செய்து முடிப்பதற்கான முயற்சிகள் சாதகமான பலன் தரும். கலைத் துறையினருக்கு, உடனிருப்பவர்களுடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்பட்டு நீங்கும். வாக்குவாதங்களைச் சாதுரியமாகக் கையாள வேண்டும். வரவேண்டிய பணம் வந்து சேரும். அரசியல்வாதிகளுக்கு, வளர்ச்சியில் இருந்த முட்டுக்கட்டைகள் நீங்கும். பயணங்கள் செல்ல நேரலாம். மாணவர்களுக்கு, கல்வியில் வெற்றிபெற எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன்களைத் தரும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்.
திசைகள்: கிழக்கு, வடகிழக்கு.
நிறங்கள்: மஞ்சள், ஆரஞ்சு.
எண்கள்: 2, 3, 4.
பரிகாரம்: பிரத்தியங்கரா தேவியை அர்ச்சனை செய்து வணங்கிவர கஷ்டங்கள் நீங்கும்.

மகர ராசி வாசகர்களே

இந்த வாரம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த வேதனையும் சோதனையும் மாறும். வீட்டில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். கணவன் மனைவிக்குள் கருத்து வேற்றுமை நீங்கும். உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். பெண்களுக்கு, எதிலும் தயக்கம் காட்டாமல் துணிச்சலாகக் காரியங்களைச் செய்து முடிப்பீர்கள்.

கலைத் துறையினருக்கு, அடுத்தவரிடம் உங்களது முயற்சிகளைப் பற்றிக் கூறுவதைத் தவிர்க்க வேண்டும். அவசரமான முடிவுகளைத் தவிர்க்கப் பாருங்கள். பேச்சாற்றல் மூலம் தொழில் லாபம் கூடும். அரசியல்வாதிகளுக்கு, ஒப்பந்தங்களை நன்றாக ஆராய்ந்து முடிவுக்கு வரவேண்டும். வெளிநாட்டு ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். மேலிடத்தின் கனிவான பார்வை கிடைக்கப் பெறுவீர்கள். மாணவர்கள், கூடுதல் கவனத்துடன் பாடங்களைப் படிப்பது நன்மை தரும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வியாழன்.
திசைகள்: கிழக்கு, தெற்கு.
நிறங்கள்: கருநீலம், பச்சை.
எண்கள்: 8, 9.
பரிகாரம்: ராகு காலத்தில் சரபேஸ்வரரை வணங்க காரியத்தடை நீங்கும். மன அமைதி கிடைக்கும்.

கும்ப ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியை ராசிநாதன் சனி பகவான் பார்ப்பதால் எதிலும் ஆதாயம் கிடைக்கும். எதிர் பாலினத்தவரிடம் பழகும்போது கவனம் தேவை. தொலைதூரப் பயணங்களின்போது பிரபலங்களைச் சந்திப்பீர்கள். சக ஊழியர்கள், மேலதிகாரிகளிடம் மனக்கசப்பு மாறும். குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கும். திருமண முயற்சிகள் கைகூடும். கோயில்கள், மகான்களின் சமாதிகளுக்குச் சென்று வருவீர்கள்.

கணவன் மனைவிக்குள் நெருக்கம் ஏற்படும். பிள்ளைகளால் நன்மை கிடைக்கும். பெண்களுக்கு, எதிர்பாராத செலவு உண்டாகும். கலைத் துறையினருக்கு, அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். பாராட்டும், பணமும் வந்து உங்களை உற்சாகப்படுத்தும். வெளிநாட்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு, எடுத்த காரியங்களில் உடனே வெற்றி கிட்டும். மாணவர்களுக்கு, கல்விநிலை உயரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி,
திசைகள்: தெற்கு, தென்மேற்கு,
நிறங்கள்: கரும்பச்சை, வெண்மை,
எண்கள்: 4, 5, 8.
பரிகாரம்: பைரவரைத் தரிசித்து வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும்.

மீன ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியை நான்கு கிரகங்கள் பார்க்கிறார்கள். நல்ல பலன்களை அனுபவிக்கப் போகும் காலம் இது. எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். உத்தியோகத்தில் செயல்திறமை கூடும். பணி நிமித்தமாக அலைய வேண்டியதிருக்கும். குடும்பத்தில் சிக்கல்கள் நீங்கி நிம்மதியும் சந்தோஷமும் உண்டாகும். கணவன் மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும். பயணங்களில் கவனம் தேவை. சகோதரர்களிடம் கருத்து வேற்றுமை உண்டாகலாம்.

பெண்களுக்கு, அறிவுத்திறன் மிளிரும். இனிமையான பேச்சால் எதையும் எளிதாகச் செய்து முடிப்பீர்கள். கலைத் துறையினருக்கு, அன்பும் பாசமும் அதிகரிக்கும். கருத்துகளைப் பரிமாறும்போது நிதானத்தைக் கடைப்பிடியுங்கள். அரசியல்வாதிகளுக்கு, எதிர்காலம் தொடர்பாக அவசர முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். மாணவர்களுக்கு, கல்விக்கான முயற்சிகளில் தாமதம் உண்டாகும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வெள்ளி.
திசைகள்: கிழக்கு, தெற்கு.
நிறங்கள்: மஞ்சள், வெண்மை.
எண்கள்: 4, 6, 9.
பரிகாரம்: நவக்கிரகத்தில் குருவுக்குத் தீபம் ஏற்றி வணங்கக் குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x