Published : 30 Sep 2019 10:58 AM
Last Updated : 30 Sep 2019 10:58 AM

வெற்றி மொழி: சால்வடார் டாலி

1904-ம் ஆண்டு முதல் 1989-ம் ஆண்டு வரை வாழ்ந்த சால்வடார் டாலி புகழ்பெற்ற ஸ்பானிஷ் ஓவியர் ஆவார். தனது திறமையான மற்றும் விநோதமான ஓவியங்களுக்காக மிகவும் பிரபலமானவராக அறியப்படுபவர். ஓவிய உலகத்தில் மாற்றத்தை ஏற்படுத்திய தலைசிறந்த படைப்புகளுக்கு சொந்தக்காரர்.

இவர் திரைப்படம், சிற்பம், கட்டிடக்கலை, இலக்கியம் மற்றும் புகைப் படக்கலை போன்ற துறைகளிலும் ஆர்வமுடையவராக விளங்கினார். அனைத்து காலத்துக்குமான மிகவும் பிரபலமான கலைஞர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார். உலகின் மிகவும் பிரபலமான அருங்காட்சியகங்களில் இவரது ஏராளமான ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

# லட்சியம் இல்லாத புத்திசாலித்தனம் என்பது இறக்கைகள் இல்லாத பறவையைப் போன்றது.
# ஓவியம் வரைதல் என்பது கலையின் நேர்மை.
# எதையும் பின்பற்ற விரும்பாதவர்கள், எதையும் உருவாக்க மாட்டார்கள்.
# கிட்டதட்ட தவறுகள் எப்போதும் ஒரு புனிதமான இயல்புடையவை.
# பரிபூரணத்தின் மீதான பயம் வேண்டாம்; நீங்கள் அதை ஒருபோதும் அடையமாட்டீர்கள்.
# எனக்கும் பைத்தியக்காரருக்கும் உள்ள ஒரே வித்தியாசம் என்னவென்றால், எனக்கு பைத்தியம் இல்லை.
# எப்போதும் ரகசியமாகவே இருந்ததே எனது செல்வாக்கின் ரகசியம்.
# ஒரு உண்மையான கலைஞர் என்பவர் ஈர்க்கப்பட்டவர் அல்ல, மற்றவர்களை ஈர்ப்பவர்.
# அதனால் என்ன நடக்கக்கூடும் என்பதில், சிறிதளவேனும் நடக்கும்.
# இந்த உலகில் நாம் தூங்கும்போது, இன்னொரு இடத்தில் விழித்திருக்கிறோம்.
# அனைத்தும் என்னை சரி செய்கிறது, ஆனால் எதுவும் என்னை மாற்றாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x