Published : 11 Sep 2019 10:30 am

Updated : 11 Sep 2019 10:30 am

 

Published : 11 Sep 2019 10:30 AM
Last Updated : 11 Sep 2019 10:30 AM

பள்ளி உலா

palli-ulaa

சென்னை தொடக்கப் பள்ளி, சேத்துப்பட்டு, சென்னை.

1960-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது இந்தப் பள்ளி, 1997-ம் ஆண்டு எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. 2012-ம் ஆண்டு முதல் தொடக்கப்பள்ளியாகத் தனியே செயல்பட்டு வருகிறது. பள்ளிக்குத் தேவையான அனைத்து வசதிகளும் மாநகராட்சி மூலம் செய்யப்பட்டிருக்கின்றன. கல்வியோடு மாணவர்களின் தனித் திறமைகளை வளர்க்க பாட்டு, ஓவியம், யோகா, நடனம், விளையாட்டு போன்றவையும் கற்றுக்கொடுக்கப் படுகின்றன.
மாதந்தோறும் பள்ளி மேலாண்மை கூட்டம் நடத்தப்படுகிறது. இதில் மாணவர்களின் பெற்றோர் கலந்துகொண்டு, பள்ளியின் செயல்பாடுகளையும் மாணவர்களின் கல்வித் தரத்தையும் அறிந்து கொள்கின்றனர்.

இதன் மூலம் மாணவர், ஆசிரியர், பெற்றோர் என மூன்று தரப்பினரும் சேர்ந்து சிறப்பாகப் பணியாற்ற முடிகிறது.
ஆண்டுதோறும் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுகிறது. மனிதவள மேம்பாட்டுத் துறை மூலம் அறிவிக்கப்படும் திட்டங்கள் அனைத்தும் இந்தப் பள்ளியில் செயல்படுத்தப்படுகிறது.
காற்றோட்டமான வகுப்பறைகள், சுத்தமான குடிநீர், கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன.
இநந்தப் பள்ளியோடு உயர்நிலைப்பள்ளியும் ் மாற்றுத்திறனாளி மையமும் செயல்படுகிறது. அதில் மாற்றுத்திறனாளி மாணவர்களைப் பரிசோதிக்க மருத்துவர்களும் உள்ளார்கள். பயிற்சிக்கு தேவையான கருவிகளும் மாநகராட்சி மூலம் தரப்பட்டுள்ளது. மேலும் அங்கன்வாடியும் செயல்படுகிறது.

வித்யா நிகேதன் மேல்நிலைப் பள்ளி, புதுச்சேரி.

‘Awakens Inner Intelligence’ என்னும் ஜே. கிருஷ்ண மூர்த்தி யின் தத்துவத்தைத் தாரக மந்திரமாகக் கொண்டு, 1997-ம்
ஆண்டு மழலையர் பள்ளியாக ஆரம் பிக்கப்பட்டது. பின்னர் மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது.
மாணவர்களைத் தேர்வுகளுக்குத் தயார் செய்வது மட்டுமின்றி வளமான, அமைதியான வாழ்க்கைக்குத் தயார் செய்வதும் இந்தப் பள்ளியின் சிறப்பு. அமைதியான வளர்ச்சியை மாணவப் பருவத்தில் வழங்கிட, அறிவு சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகள் ஆண்டு முழுவதும் நடத்தப்படுகின்றன.மருத்துவம், பொறியியல் போன்ற படிப்புகளைத் 25-க்கும் மேற்பட்ட பல்வேறுதுறை சார்ந்த படிப்புகள் இருக்கின்றன.

பன்னிரண்டாம் வகுப்புக்குப் பிறகு அவற்றில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வுகளை எழுதப் பயிற்சியளிக்கப் படுகிறது. ஆலோசனைகள் வழங்கப்படு கின்றன. தேவை யான புத்தகங்கள் மற்றும் ஆன்லைன் உரைகளைக் கேட்பதற்கான வசதிகளும் செய்யப்பட்டிருக்கின்றன. பூமித் தாயைப் பசுமையாகக் காக்கும் பணியின் ஓர் அங்கமாக, அருகில் உள்ள கனகன் ஏரியைத் தத்தெடுத்திருக்கிறது.

புதுவை துணைநிலை ஆளுநர் முன்னிலையில் நடைபெற்ற ’சுற்றுச்சூழல் பாதுகாப்பு’ நிகழ்ச்சியில் இந்தப் பள்ளியின் ’பசுமை காக்கும் படை’ (Go Green Army) ஏரியைச் சுற்றி மரங்களை நட்டும் விதைப்பந்துகளைப் பொதுமக்களுக்கு வழங்கியும் தங்கள் பங்களிப்பைச் செலுத்தியது. ’உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்’ என்ற வாக்கினை உண்மையாக்கிட, மாணவர்கள் மாடித்தோட்டம் அமைத்துப் பாதுகாத்தல், இயற்கை உரம் தயாரித்தல் போன்ற விவசாயம் தொடர்பான வேலைகளைச் செய்ய தேவையான வசதிகள் செய்யப்பட்டி ருக்கின்றன. ‘லிட்டில் ஃபார்மர்ஸ்’ என்ற பெயரில் இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

பள்ளி உலாதொடக்கப் பள்ளிசேத்துப்பட்டுவித்யா நிகேதன்மாணவர்ஆசிரியர்பெற்றோர்Go Green Army

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author