Published : 02 Sep 2019 10:36 AM
Last Updated : 02 Sep 2019 10:36 AM

 குறையும் வீட்டுக்கடன் வட்டி: வேறு வங்கிகளுக்கு மாறுவது புத்திசாலித்தனமான முடிவா?

தொடர்ந்து நான்கு முறை ரிசர்வ் வங்கி கடனுக்கான வட்டி விகி தத்தை குறைத்துள்ளது. ஆர்பிஐ வட்டி விகிதத்தை குறைத்தா லும், அதன் பலனை உடனடியாக வாடிக்கை யாளர்களுக்கு தருவதில் வங்கிகள் தயக்கம் காட்டுகின்றன. இந்த நிலையில் வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும் என ரிசர்வ் வங்கியும், அரசும் உறுதிபட தெரிவித்ததைத் தொடர்ந்து ஒன்றன்பின் ஒன்றாக வங்கிகள் வட்டியைக் குறைத்து வருகின்றன. இதன் பலனாக மாதாந்திர சுலப தவணைகளின் அளவு குறையும்.

ஆனால் சில தனியார் வங்கிகள் வட்டிக் குறைப்பை அவ்வளவு விரைவாக மேற்கொள் வதில்லை. இதனால் இத்தகைய வங்கி களில் அதிக வட்டியில் தவணை செலுத்திக் கொண்டிருப்பவர்களுக்கு பொதுத்துறை வங்கிகளுக்கு கடன் பொறுப்புகளை மாற்றிக் கொண்டால் என்ன என்று தோன்றலாம். இது வரவேற்கத்தகுந்த முடிவுதான். ஆனால் அதை மேற்கொள்ளும் முன்பு சில விஷயங் களை கவனிப்பது மிகவும் அவசியம். அப்போதுதான் வட்டிக் குறைப்பின் உண்மை யான பலனை நீங்கள் பெற முடியும்.

வட்டிக் கடன் நிர்ணய அளவு

பொதுவாக வீட்டுக் கடன் அளிக்கும் வங்கிகள் அவற்றுக்கான வட்டியை கடன் வழங்குவதற்கான நிதி அளவின் அடிப்படை யில் (எம்சிஎல்ஆர்) நிர்ணயிக்கும். நிதி அமைச் சரோ வீட்டுக் கடனுக்கான வட்டியை ரெப்போ விகிதப்படி நிர்ணயிக்க வலியுறுத்தி யுள்ளார். பொதுவாக வீட்டுக் கடனுக்கான வட்டி நிர்ணய அளவானது பல சமயங்களில் எம்சிஎல்ஆர் விகிதத்தைவிட குறைவாக இருக்கும். பொதுக்கடன் சார்ந்த வீட்டு கடன் பிரிவுக்கான கடன் அளவு குறைவாக இருந்தால் அதில் மாறுவதில் தவறில்லை. அதேசமயம் வங்கிகள் எம்சிஎல்ஆர் அடிப் படையில் வீட்டுக்கடன் வழங்குவதை நிறுத்தி விடக்கூடும். பிற கடன்களுக்கான வட்டி அடிப் படையில் வீட்டுக் கடன் வழங்குவதையும் சில வங்கிகள் நிறுத்திவிடும். இது வாடிக்கை யாளர்களுக்கு குழப்பத்தைத்தான் ஏற்படுத்தும்.

பிற கடன்களுக்கு ஏற்ப வீட்டுக் கடன் வட்டி நிர்ணயம் செய்தால், அது குறைக்கப்படும்போது அதன் பலன் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும். ஆனால், ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தும்போது வங்கிகளும் வட்டியை உயர்த்தும். பாரத ஸ்டேட் வங்கி, சிட்டி வங்கி, ஃபெடரல் வங்கி, யூனியன் வங்கி உள்ளிட்ட வங்கிகள் வீட்டுக் கடனுக்கான வட்டியை வெளிக் கடன் வட்டி விகிதத்துடன் இணைத்து வழங்குகின்றன.

மேலும் வட்டி குறைக்கப்படுமா?

வருங்காலத்தில் மேலும் வட்டி குறைக்கப் படுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் மேலும் 50 புள்ளிகள் குறைக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக பொருளாதார நிபுணர் இந்திரநீல் சென்குப்தா சுட்டிக்காட்டுகிறார்.

பெரும்பாலான வங்கிகள் எம்சிஎல்ஆர் வட்டி விகிதத்தில் 20 புள்ளிகள் வரை குறைத்துள்ளன. ஆனால் அந்த வட்டிக் குறைப்பின் பலன் அடுத்த மாத தவணை செலுத்தும்போதுதான் தெரியும்.

கடன் மறு மதிப்பீடு

வங்கிகளில் கடன் பெற்று அதை வேறொரு வங்கிக்கு மாற்றுவது மிகவும் சிக்கலான, சிரமமான நடைமுறையாக உள்ளது. இவ் விதம் மாறுவதால் வட்டிக் குறைப்பின் பலனை விட சில சமயம் கூடுதலாக செலவு பிடிக்கும் விஷயமாக மாறவும் வாய்ப்புள்ளது. அதற்குப் பதிலாக ஏற்கெனவே கடன் பெற்றுள்ள வங்கி அல்லது நிதி நிறுவனங்களிடம் பேச்சு நடத்தி வட்டியைக் குறைக்கச் சொல்லலாம். பெரும்பாலான நிறுவனங்கள் வட்டிக் குறைப்பு செய்ய தயாராகவே உள்ளன. ஒரு வேளை அறிவிக்கப்பட்ட வட்டியை விட சற்று கூடுதலாகக் கூட இருக்கலாம். ஆனால் ஓரள வுக்கு நெருக்கமாக இருந்தால் அதை ஏற்பதே புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும். மாறாக வேறு வங்கிக்கு மாற்றுவது உங்க ளது நேரத்தையும், அலைச்சலையும் அதிகரிக் கவே செய்யும். கடன் பெற்ற வங்கியில் பேச்சு நடத்தி வட்டியை குறைக்கச் சொல்லி பலன் பெறுவதே சிறந்த நடவடிக்கை.

எப்போது மாற்றலாம்

ஒருவேளை பேச்சு நடத்தியும் பலனில்லாத சூழலில் வேறு நிதி நிறுவனங்கள் அல்லது வங்கிக்கு மாற்றலாம். மேலும் முன் கூட்டியே கடனை செலுத்துவதற்கு விதிக்கப்படும் கட்டணம் சமீபத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் நீங்கள் கடன் பெற்ற நிதி நிறுவனம் அல்லது வங்கியிலிருந்து கடனை செலுத்தி வேறு நிறுவனத்துக்கு மாற முடியும்.

சிறிய நிதி நிறுவனங்கள் முன்கூட்டியே கடனை செலுத்துவதற்கு கட்டணம் விதிக்கின்றன. ஒருவேளை நீங்கள் கடன் பெற்ற நிறுவனம் அத்தகையதாக இருப்பின் அதை செலுத்தித்தான் ஆக வேண்டும். அப்படி யிருப்பின் அதை செலுத்தி அந்நிறுவனத் திலிருந்து வெளியேறுவதே புத்திசாலித்தன மான முடிவாக இருக்கும். அதேசமயம் புதிதாக கடன் வழங்கும் நிறுவனம் இது போல முன்கூட்டியே கடனை கட்டுவதற்கு கட்டணம் விதிக்காமல் இருக்கலாம். அதே சமயம் பரிசீலனைக் கட்டணம், நிர்வாக கட்டணம், சட்ட கட்டணம், மதிப்பீடு கட்டணம், காப்பீட்டுக்கு பிரீமியம் உள்ளிட்டவற்றை செலுத்த வேண்டியிருக்கும். எனவே இதுகுறித்து புதிதாக கடன் பெறும் நிறுவனங்களிடம் பேச்சு நடத்தி முடிந்த வரை அனைத்து கட்டணங்களையும் குறைக்க அல்லது ரத்து செய்ய முயற்சிக்கவும். கடனை திரும்ப செலுத்தும் திறன் (கிரெடிட் ஸ்கோர்) உங்களுக்கு அதிகமாக இருப்பின், இதுபோன்ற கட்டணங்களை வங்கிகள் நிச்சயம் ரத்து செய்யும்.

மதிப்பீடு

ஒரு நிறுவனத்திலிருந்து மற்றொரு நிறுவனத்துக்கு மாறும்போது உங்களது சொத்து மதிப்பின் அளவு குறையலாம். உதாரணமாக 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.1 கோடி மதிப்புள்ள வீட்டை வாங்கியதாக வைத்துக் கொள்ளுங்கள். அப்போது வங்கியில் ரூ. 75 லட்சம் கடன் வழங்கப்பட்டிருக்கும். உங்களது கடன் பாக்கி தற்போது ரூ.72 லட்சமாக இருப்பதாக வைத்துக் கொள்வோம். ஆனால் புதிதாக கடன் வாங்கும் நிறுவனம் உங்கள் வீட்டை மதிப்பீடு செய்யும்போது அதன் விலை ரூ.85 லட்சமாக குறைய வாய்ப்புள்ளது. அப்படியிருப்பின் உங்களுக்கு அந்த வங்கி ரூ. 63.75 லட்சம் மட்டுமே அளிக்கும். எஞ்சிய ரூ. 10 லட்சம் தொகைக்கு என்ன செய்வது என்ற பிரச்சினை உருவாகும்.

ரியல் எஸ்டேட் சொத்து மதிப்பு சரிந்து வரும் சூழலில் உங்களது வீட்டின் மதிப்பும் குறையும். இதனால் புதிய நிறுவனத்துக்கு மாறும்போது ஏற்படும் பண இடைவெளியைக் குறைக்க வேண்டியிருக்கும். எனவே புதிய நிறுவனத்துக்கு மாறும் முன்பு இதுகுறித்தும் யோசனை செய்வது அவசியம்.

வங்கியல்லாத நிதி நிறுவனங்கள் தற் போது கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வரு கின்றன. இவை அனைத்துமே அதிக வட்டியை வீட்டுக் கடனுக்கு நிர்ணயித்துள்ளன. இவற் றில் கடன் பெற்றவர்கள் வங்கிகளுக்கு மாறு வது சரியான நடவடிக்கையாக இருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x