Published : 21 Aug 2019 10:01 AM
Last Updated : 21 Aug 2019 10:01 AM

அறிவியல் மேஜிக்: காகிதப் பந்து பாட்டிலுக்குள் விழுமா?

மிது கார்த்தி

சிறிய காகிதப் பந்தை பிளாஸ்டிக் பாட்டிலுக்குள் உங்களால் ஊதித் தள்ள முடியுமா? ஒரு பரிசோதனை செய்து பார்ப்போமா?

என்னென்ன தேவை?

சிறிய காகிதம்
அரை லிட்டர் பிளாஸ்டிக் பாட்டில்

எப்படிச் செய்வது?

# காகிதத்தைத் திராட்சைப் பழம் அளவுக்கு, உருட்டிக்கொள்ளுங்கள்.
# காகிதப் பந்தை பாட்டிலின் வாய்ப் பகுதியில் வைத்துக்கொள்ளுங்கள்.
# காகிதப் பந்தை வேகமாக ஊதி பாட்டிலுக்குள் தள்ளுங்கள்.
# காகிதப் பந்து பாட்டிலுக்குள் விழுந்ததா? விழுந்திருக்காது.
# நீங்கள் ஊதிய வேகத்தில் காகிதப் பந்து உங்கள் முகத்தின் மீதே விழும்.
காகிதப் பந்தை வேகமாக ஊதித் தள்ளியும், அது ஏன் பாட்டிலுக்குள் செல்லவில்லை?.

காரணம்

பாட்டிலின் வாய் அருகே ஊதும்போது பாட்டிலுக் குள் காற்றழுத்தம் அதிகரிக்கிறது. அதே வேளையில் பாட்டிலின் வாய்ப் பகுதியில் அதற்கு இணையாக வெற்றிடமும் உருவாகிறது. பாட்டிலுக்குள் காற்றழுத்த மும் வாய்ப்பகுதியில் வெற்றிடமும் ஏற்படுவதால், பாட்டி லுக்குள் இருக்கும் காற்று, வேகமாக வாய்ப்பகுதிக்கு வந்து காகிதப் பந்தை வெளியே தள்ளிவிடுகிறது.

பயன்பாடு

காற்றையும் காற்றழுத்தத்தின் பண்பையும் அறிய இந்தச் சோதனை உதவுகிறது. டயர் டியூப்களில் காற்று ஏற்றப்படுவது இந்தச் சோதனையின் அடிப்படையில்தான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x