Published : 15 Jul 2019 07:34 AM
Last Updated : 15 Jul 2019 07:34 AM

மேம்படுத்தப்பட்ட ஹோண்டா டபிள்யு ஆர்-வி

ஹோண்டா கார்களில் அதிக வரவேற்பைப் பெற்ற மாடல்களில் ஒன்று ஹோண்டா டபிள்யு ஆர்-வி. தற்போது இந்த மாடல் சற்று மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த மேம்படுத்தப்பட்ட ஹோண்டா டபிள்யு ஆர்-வி டீசல் வேரியன்ட்டாகவும் வழங்கப்படுகிறது.

இந்த டீசல் வேரியன்ட் ஹோண்டா டபியுள் ஆர்-வியின் பேஸ் வேரியன்ட்டுக்கும், விஎக்ஸ் என்ற டாப் வேரியன்ட்டுக்கும் இடையில் உள்ளது. ஆனால், டாப் வேரியன்ட்டான விஎக்ஸ் மாடலில் உள்ள அனைத்து அம்சங்களையும் இதில் பார்க்க முடிகிறது. 7.0 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்ட்மெண்ட் சிஸ்டம், ரிவர்ஸ் கேமரா, குரூயிஸ் கன்ட்ரோல், பவர் ஃபோல்டிங் ரியர் வியூ மிரர்கள் ஆகியவை அதில் அடங்கும்.

டாப் வேரியன்ட்டில் இருக்கும் எலெக்ட்ரிக் சன் ரூஃப் மற்றும் லெதர் பினிஷ் தரப்பட்ட ஸ்டியரிங் ஆகியவை மட்டும் இதில் மிஸ்ஸிங். இதன் விலை ரூ.9.95 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது எஸ் பேஸ் வேரியன்ட்டை விட ரூ. 70 ஆயிரம் அதிகமாகவும், விஎக்ஸ் டாப் வேரியன்ட்டை காட்டிலும் ரூ.40 ஆயிரம் குறைவாகவும் உள்ளது.  மேலும் இதில் கன்மெட்டல் ஃபினிஷ் செய்யப்பட்ட 16 அங்குல அலாய் வீல், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், பனி விளக்குகள், ஒன் டச் ஆட்டோ விண்டோ ஓப்பன் குளோஸ் ஆப்ஷன், ஸ்பீட் சென்சிங் ஆட்டோ டோர் லாக் ஆகியவை உள்ளன.  

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x