Last Updated : 29 Jul, 2015 12:09 PM

 

Published : 29 Jul 2015 12:09 PM
Last Updated : 29 Jul 2015 12:09 PM

கடலுக்குள் ஆஹா அதிசயங்கள்

கடலுக்கடியில் என்ன இருக்கும்? கடல் எவ்வளவு ஆழமாக இருக்கும்? இப்படிச் சில கேள்விகள் உங்கள் மனதில் எழுந்துகொண்டே இருக்குமல்லவா? உண்மையில் தரை மட்டத்தில் இருந்து கடலுக்குள் ஓரிரு மைல்வரை உள்ள பகுதியை ‘கண்ட எல்லை’ என்றே சொல்கிறார்கள். இதன் சாரசரி ஆழம் 600 அடி.

அதற்குப் பிறகுதான் நிஜக் கடலே தொடங்குகிறது. ஆச்சரியமாக இருக்கிறது இல்லையா? அதைவிட ஆச்சரியம் என்னவென்றால், ஆழ்கடலுக்குள் சமவெளிப் பிரதேசம், எரிமலைகள், படுகுழிகள், மலைத்தொடர்கள் எனப் பலவும் அணிவகுத்துக் காணப்படுகின்றன. சூரிய ஒளியின் வெளிச்சம்கூடக் கடலில் 100 அடி வரைதான் தெரியும். அதற்குக் கீழே சென்றால் வெளிச்சம் மங்கிவிடும். ஆயிரம் அடிக்குக் கீழே போனால் ஒரே கும்மிருட்டுதான்!

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஜே பிக்கர்ட் என்ற விஞ்ஞானி 1955-ம் ஆண்டில் ஒரு சிறிய நீர்மூழ்கி அமைப்பு மூலம் கடலுக்குள் போனார். 5 மணி நேரத்துக்குப் பிறகே, தரையைத் தொட்டுவிட்டதாக வயர்லஸ் கருவி மூலம் தகவல் அனுப்பினார். பசிபிக் பெருங்கடலில் அவர் இறங்கிய அந்த இடத்துக்குப் பெயர்தான் ‘மரியானா டிரெஞ்ச்’. பாடப் புத்தகங்களில் இதைப் பற்றி படித்திருப்பீர்கள். அதன் ஆழம் 35 ஆயிரத்து 808 அடி.

உலகின் உயர்ந்த சிகரமான எவரெஸ்ட்டைவிட இது மிகவும் அதிகம். எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 26 ஆயிரத்து 246 அடி மட்டும்தான். அப்படியானால் கடல் எவ்வளவு ஆழம் என்பதைப் புரிந்துகொள்ளுங்களேன்.

சரி, அப்படியானால் கடலின் ஆழம் எல்லா இடங்களிலும் இப்படி ஒரே மாதிரியாகவே இருக்குமா என்றுதானே நினைக்கிறீர்கள்? அதுதான் இல்லை. இடத்துக்கு இடம் கடலின் ஆழம் மாறுபடவும் செய்யும்.இப்படி எல்லையில்லா ஆச்சரியங்களைப் பொதிந்து வைத்திருக்கிறது கடல்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x