Published : 21 Jul 2015 11:53 AM
Last Updated : 21 Jul 2015 11:53 AM

பி.ஏ.பி.எல். (ஹானர்ஸ்) தரும் வாய்ப்புகள்

நான் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் உள்ள பி.ஏ.பி.எல். (ஹானர்ஸ்) எடுக்க முடிவெடுத்திருக் கிறேன். இந்தப் படிப்பைப் படித்தால் வேலைவாய்ப்பு அதிகம் இருக்கிறதா? என்ன மாதிரி வேலை கிடைக்கும் ?

- டி.கமலக்கண்ணன். திருச்சி

தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்புத் துறையின் உதவி இயக்குநர் எம்.கண்ணனிடம் இதற்கான பதிலைக் கேட்டுப் பெற்றோம்.

சட்டம் பயின்றவர்களுக்குச் சிறப்பான வேலைவாய்ப்புகள் அரசுத் துறையில் மட்டுமல்லாது தனியார் துறையிலும் பிரகாசமாக உள்ளன. அரசுத் துறையைப் பொறுத்தவரை கீழ்க்காணும் பணிகளுக்கு இளங்கலை சட்டப் படிப்பு அவசியம்.

1. உரிமையியல் நீதிபதி (Civil Judge)

2. உதவி ஆணையர், தொழிலாளர் நலம் (Assistant Commissioner, Labour)

3. உதவி ஆணையர், இந்து அறநிலையத்துறை (Assistant Commissioner, HR&CE)

4. உதவி அரசுத் தரப்பு வழக்கறிஞர் (Assistant Public Prosecutor)

மேற்கண்ட அனைத்துப் பணிகளும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் போட்டித் தேர்வுகள் மூலமாக நிரப்பப்படுகின்றன.

தனியார் துறையைப் பொறுத்தமட்டில் இரண்டு ஆண்டு அனுபவம் பெற்றிருப்பின், பல்வேறு பணி வாய்ப்புகள் (காப்புரிமை, சட்ட அனுமதி, வரி விதிப்பு) உள்ளது. சட்டம் சார்ந்த மேற்கண்ட சேவைகள் செய்யும் தனியார் சட்ட நிறுவனங்களில் சேர்ந்து நல்ல ஊதியத்துடன் பணியாற்றலாம்.

மேலும், பொது அறிவு, உலக நடப்பு, பொருளாதாரம், அரசு கொள்கைகள் ஆகியவற்றை நாம் கல்லூரியில் படிக்கும்போதே நன்றாக அறிந்துகொண்டால் பெயர் பெறலாம். இவை அல்லாமல் தனித் திறன்களாகப் பேச்சாற்றல், ஆங்கில அறிவு, நினைவாற்றல், தர்க்கத் திறன் போன்ற திறன்களைப் வளர்த்துக்கொள்ளுதல் அவசியம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x