Last Updated : 12 Jun, 2015 02:32 PM

 

Published : 12 Jun 2015 02:32 PM
Last Updated : 12 Jun 2015 02:32 PM

தொடர்ந்து வா, அன்பே...

காதலியின் கையைப் பிடித்தபடி, உலகின் விளிம்பு வரை செல்லலாம் என்று நிரூபித்துள்ளது முரத் ஓஸ்மான் மற்றும் நடாலி ஜக்கரோவா ஜோடி. அமெரிக்காவின் புகழ்பெற்ற ஹாலிவுட் ஸ்டுடியோ, பாலி தீவுகள் முதல் இந்தியாவின் புனித நகரம் காசிவரை காதலி கைப்பிடிக்க, ‘ஃபாலோ மீ டூ’ என்ற பெயரில் முரத் ஓஸ்மான் தன் ஒளிப்படங்களை இன்ஸ்டாகிராம் வழியாக எடுத்துத் தள்ளியுள்ளார்.

இவருக்கு 26 லட்சம் பார்வையாளர்கள் உள்ளனர். உலக வரைபடத்தில் குறுக்குமறுக்காக அனைத்து மூலைகளுக்கும் கரம்பிடித்த படி சென்ற இந்த அழகிய ஜோடி, சில நாட்களுக்கு முன்னர் தங்கள் வாழ்வின் மிகப்பெரிய பயணத்திட்டம் ஒன்றுக்கு ஆயத்தமாகியுள்ளனர். ஆம்! அவர்கள் திருமணம் செய்துள்ளனர்.

முந்திவிடும் காதலியைப் பிடிக்க மாப்பிள்ளை முரத் ஓஸ்மானின் கரங்களுக்குள் அன்னம் போன்ற வெள்ளுடையில் அழகிய தேவதையான மணப்பெண்ணாக நிற்கிறார் நடாலியா ஜக்கரோவா. இந்த ஒளிப்படத்தை எடுத்திருப்பவர் நிகோலய் ஜ்வெர்கோவ். அவர்கள் திருமண ஒளிப்படத்தைப் பார்த்து லட்சக்கணக்கான ரசிகர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

உலக அளவில் இன்ஸ்டாகிராம் ரசிகர்களிடையே புகழ்பெற்ற ‘ஃபாலோ மீ டூ’ புகைப்பட வரிசையை எடுப்பதற்கு முரத் ஓஸ்மான் எப்படி உந்துதல் பெற்றார்?

உலக நாடுகளுக்கு விடுமுறையில் முரத் ஓஸ்மான், நடாலியாவுடன் பயணிக்கும்போதெல்லாம், நடந்து போகும்போது நடாலியா அவசரத்தில் முரத் ஓஸ்மானை முந்திவிடுவார். அவரைப் புகைப்படம் எடுப்பதற்கு ஒவ்வொரு முறையும் முரத் ஓஸ்மான் அவரைக் கூப்பிட்டு நிறுத்த வேண்டியிருந்தது.

இந்தச் சூழ்நிலையில்தான் நடாலியாவின் கையைப் பிடித்தபடி அவர் செல்லும் இடங்களை ஒளிப்படம் எடுத்துப் பார்த்தால் எப்படி இருக்கும் என்பதைச் சோதித்துப் பார்த்தார் ஓஸ்மான். நடாலியாவின் கையைப் பிடித்திருந்தாலும் அவரை புகைப்படமெடுப்பதை ஓஸ்மான் நிறுத்தவில்லை. அதன் அழகிய விளைவே இந்த ஒளிப்படங்கள். அதன் பலன்தான் இவ்வளவு அழகிய படங்கள்.

போட்டோஷாப் அல்ல!

சமீபத்தில் இந்த ஜோடி இந்தியாவுக்கு வந்திருந்த போது அணிந்திருந்த உடைகள் மிகவும் விசேஷமான இந்திய மணப்பெண் உடைகள். ஒளிப்படத்தில் நடாலியா அணிந்திருக்கும் உடைகள் எதுவும் போட்டோஷாப் செய்யப் பட்டது அல்ல என்று அடித்துக் கூறுகிறார் முரத் ஓஸ்மான்.

“ஹை டைனமிக் ரேஞ்ச் இமேஜிங் விளைவை நான் எனது ஒளிப்படத்தில் அதிகம் பயன்படுத்துவதாகச் சொல்கிறார்கள். ஆனால் அது உண்மையல்ல. போட்டோஷாப்பில் மைக்ரோ கான்ட்ராஸ்டை மட்டும்தான் அதிகப்படுத்தினேன்” என்கிறார் முரத் ஓஸ்மான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x