Last Updated : 27 Jun, 2015 12:26 PM

 

Published : 27 Jun 2015 12:26 PM
Last Updated : 27 Jun 2015 12:26 PM

சலுகை விலையில் வீடுகள்

ஆன்லைன் வர்த்தகத்தைதான் இப்போது பெரும்பாலானவர்கள் தேர்வுசெய்கிறார்கள். ஒரு கைக்குட்டை வாங்குவதிலிருந்து எல்லாம் ஆன்லைனில் என்று ஆகிவிட்டது. முதலின் ஆன்லைன் மூலம் செல்போன், மெமரி கார்டு போன்ற மின்னணுப் பொருட்களைத்தான் வாங்கிவந்தனர்.

இந்த ஆன்லைன் வர்த்தகத்தின் மூலம் தள்ளுபடிப் புரட்சிகளை சில ஆன்லைன் நிறுவனங்கள் செய்தன. அதாவது சில குறிப்பிட்ட மணி நேரத்துக்குள் ஒரு விற்பனைப் பொருள் ஆன்லைனில் வாங்குவதற்குப் பதிவுசெய்தால் சலுகை விலை வீட்டுக்கே அனுப்பிவைக்கப்படும். சலுகை என்றால் நினைத்துப் பார்க்க முடியாதபடியான சலுகை விலை. இந்தச் சலுகைப் புரட்சி பல நாட்கள் வரை மக்களின் பேசுபொருளாக இருந்தது.

ஃபிளாஷ் விற்பனை

இந்த மாதிரியாக குறிப்பிட்ட மணி நேரத்துக்குள் சலுகை விலையில் அளிப்பதை ஃபிளாஷ் விற்பனை (flash sale) என்கின்றனர். அதாவது 24 மணி நேரத்துக்குள் அல்லது 48 மணி நேரத்துக்குள் ஆன்லைனில் வாங்குவதைப் பதிவுசெய்துவிட வேண்டும். அந்தக் குறிப்பிட்ட நேரத்தைக் கடந்துவிட்டால் இந்தச் சலுகை செல்லாது. இம்மாதிரியான ஃபிளாஷ் விற்பனையின் மூலம் சில மணி நேரங்களுக்குள் அதிகமான பொருளை விற்றுவிட முடியும். விலை குறைவாகத் தந்தால் போட்டி போட்டுக்கொண்டு முந்தி வாங்குவார்கள். லாபம் குறைவாக இருந்தால் வெகு சீக்கிரத்திலேயே விற்பனை பன்மடங்கு அதிகரிக்கும். இப்போது இந்த ஃபிளாஷ் விற்பனை ரியல் எஸ்டேட் துறைக்கும் வந்துள்ளது.

தனியான இணையம்

கடந்த சில ஆண்டுகளாகவே வீடுகள் விற்பனைகள் இந்திய அளவிலேயே சற்றுக் குறைவாகத்தான் உள்ளது. கட்டுமானப் பொருள்களின் விலையேற்றம் போன்ற பல்வேறு காரணங்களால் ரியல் எஸ்டேட் துறையில் மந்த நிலை நிலவியது. இதற்கிடையில் மந்த நிலையிலும் நிலப் பரிமாற்றங்களும் வீடு விற்பனைகளும் நடந்து வருகின்றன.

ஆனாலும் பெரிய அளவில் இல்லை எனலாம். இந்தப் பின்னணியில்தான் ஃபிளாஷ் விற்பனை அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். இதை ஆன்லைன் விற்பனை நிறுவனமான 99ஏக்கர், அமூரா மர்க்கெட்டிங் டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து தொடங்கியுள்ளது. இதற்காகத் தனியாக இணைய தளமும் தொடங்கப்பட்டுள்ளாது. >https://www.irfs.in என்ற இந்த இணைய தளத்தில் ஆன்லைன் ஃபிளாஷ் விற்பனை குறித்த தகவல்கள் உள்ளன.

15% வரை தள்ளுபடி

மும்பை, டெல்லி, கொல்கத்தா, பெங்களூரு, கோவா, அகமதாபாத், லக்னோ, புனே உள்ளிட்ட இந்தியாவின் பல நகரங்களில் உள்ள வீடுகள் இந்தத் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர் நகரங்களும் இடம்பெற்றுள்ளன. மொத்தம் 250 வீட்டுத் திட்டங்கள் இந்த விற்பனைக்குள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த வீட்டுத் திட்டத்தின் மூலம் 15 சதவீதம் வரை தள்ளுபடி பெற முடியும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. காத்ரேஜ் ப்ராபர்டீஸ், டாடா ஹோம்ஸ், ட்ரூ வேல்யூ ஹோம்ஸ், ஸ்ரீராம் ப்ராபர்டீஸ் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்கள் இந்த விற்ப்னையில் இணைக்கப்பட்டுள்ளன.

இந்தத் திட்டத்தின் கீழ் வீடுகள் வாங்கு மூன்று நிலையான பதிவுகளை மேற்காணும் இணைய தள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ளன. இந்தச் சலுகை நாளைக்குள் (28.06.2015) முடிவடைய இருப்பதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. வீடுகள் விற்பனை மந்தமாக உள்ள நிலையில் இதுமாதிரியான திட்டங்கள் அத்துறை செழிக்க வழிவகை செய்யும் வாய்ப்புள்ளது. மக்களும் பயன் அடைவார்கள். ஆனால் சலுகை விற்பனை சாதனை படைக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x