Published : 12 May 2015 12:47 PM
Last Updated : 12 May 2015 12:47 PM

வெற்றி நூலகம் - 12/05/15

நீதி நூல்களில் கல்வி

நீதி நூல்கள் எனச் சொல்லப்படும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் கல்வி குறித்துத் தெரிவிக்கப்பட்டுள்ள செய்திகளை எடுத்துக்காட்டி கல்வியின் அவசியத்தை வலியுறுத்தும் நூல் இது. மாணவர்கள், ஆசிரியர்கள் என இரு தரப்பு குறித்தும் நீதி நூல்களில் காணப்படும் குறிப்புகளை ஆராய்ந்து இந்த நூலை எழுதியுள்ளார் ஆசிரியர். பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் பற்றிய எளிய அறிமுகக் குறிப்புகளும் உள்ளன.

கீழ்க்கணக்கு நூல்களில் கல்விச் சிந்தனைகள்

பத்மகவி குற்றாலதாசன்

விலை: ரூ. 75 வெளியீடு: ஸ்ரீ கிருஷ்ண மணி நிலையம்

கட்டிமாங்கோடு 629806, கைபேசி: 9445209368

ஊக்கம் தரும் சொற்கள்

வெற்றிக்கு அடிப்படை நம்பிக்கை. வெற்றிபெற முடியும் எனும் நம்பிக்கை ஒவ்வொருவருக்கும் அவசியம். அந்த நம்பிக்கையே வெற்றியை நோக்கி மனிதரை நகர்த்த வல்லது. மனிதருள் ஆழப்புதைந்து கிடக்கும் நம்பிக்கையைத் தூசு தட்டி துலக்கம்பெறச் செய்ய சில தூண்டுகோல்கள் தேவை. அப்படியான தூண்டுதலைத் தருகின்றன இந்த நூலில் உள்ள 20 கட்டுரைகள். கதைகள், அனுபவங்கள் வழியே தன்னம்பிக்கையின் விதையை வாசிப்பவரின் மனங்களில் தூவும் முயற்சி இந்த நூல்.

மூன்றாம் கை எனும் நம்பிக்கை!

பேராசிரியர் க.இராமச்சந்திரன்

விலை ரூ: 70 வெளியீடு: நர்மதா பதிப்பகம்

சென்னை- 600017, தொலைபேசி: 044-24334397

அறிவொளி தரும் அறிஞர்கள்

சரித்திரத்தில் அநேக அறிஞர்கள் வலம் வருகிறார்கள். இவர்களைப் பற்றி அறிந்துகொள்வதன் மூலம் சமூகம் சில அடிகள் முன்னேற வாய்ப்புள்ளது. சிறு வயதில் மனதில் வந்துவிழும் கதைகளும் வரலாறும் மாணவர்களைப் பெரிய ஆளுமைகளாக மாற்றுவதில் பங்காற்றுகின்றன. இந்த ஆழமான நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டே இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், எழுத்தாளர் மண்ட்டோ உள்ளிட்ட ஒன்பது அறிஞர்களைப் பற்றி எளிய நடையில் எழுதப்பட்டுள்ள நூல் இது.

வரலாறு படைத்த மாமனிதர்கள்

சி.எஸ்.தேவநாதன் விலை ரூ.90

வெளியீடு: நேஷனல் பப்ளிஷர்ஸ்

சென்னை-600017 தொலைபேசி: 044-28343385

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x