Published : 04 May 2015 12:17 PM
Last Updated : 04 May 2015 12:17 PM

புத்தக அலமாரி- 04.05.2015

Title: Handbook for First-Time Managers

Author: Joseph and Susan Berk

Publisher: Jaico Publishing House

முதல் முறை மேலாளர்களுக்கான அடிப்படை மேலாண்மை நுணுக்கங்களைச் சொல்லித்தருகின்றது இந்த புத்தகம். ஆசிரியர்களின் தனிப்பட்ட அனுபவம் மற்றும் புதிய மேலாளர்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்கள் ஆகியவற்றின்மூலம் இதற்கான கருத்துக்களும் நுணுக்கங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.

நிர்வாகவியல் தொடர்பான கோட்பாடுகள் மட்டுமின்றி அதன் கலையம்சங்கள் பற்றியும் சொல்லித்தருகின்றது.

Title: Becoming a Successful Manager

Author: Jack H Grossman and J Robert Parkinson

Publisher: Tata McGraw-Hill

வெற்றிகரமான மேலாளராக நம்மை தயார்படுத்திக்கொள்ளத் தேவையான வழிமுறைகளைச் சொல்லும் புத்தகம். நம்மை கையாளும் நிலையிலிருந்து மற்றவர்களை நிர்வகிக்கும் நிலைக்கு மாறுவதற்கான எளிமையான உத்திகளைச் சொல்கின்றது.

ஒரு திறமையான மேலாளராக செயல்படுவதற்கான ஆலோசனைகளையும், திறன்களை வளர்த்துக்கொள்வதற்கான பயிற்சிகளையும் சொல்லித்தருகின்றார்கள் ஆசிரியர்கள். மேலும், திறமையானவர்களைக் கண்டறிந்து பணியமர்த்தல் போன்ற விஷயங்களைப்பற்றியும் பேசுகின்றது.

Title: Skills for New Managers

Author: Morey Stettner

Publisher: Tata McGraw-Hill

ஒரு சாதாரண பணியாள் எவ்வாறு தன்னை நிர்வாகப் பொறுப்பிற்கு கொண்டுச்செல்வது என்று சொல்லிதரும் புத்தகம் இது. புதிய மேலாளர்களுக்குத் தேவையான திறன்கள் என்ன? என்பதைப்பற்றியும் அவற்றை மேம்படுத்திக்கொள்வதைப்பற்றியும் பேசுகின்றது இந்த புத்தகம். திறமையான தகவல்தொடர்பு, சிறந்த வழிகாட்டுமுறைகள், தலைமைப்பண்பு, பிரச்சினைகளைக் கையாளுதல் மற்றும் பயிற்சிகள் போன்றவற்றைப் பற்றிய ஆழமான கருத்துகளைக் கொண்டுள்ளது.

Title: The 100 Minute Manager

Author: Nag A

Publisher: Vikas Publishing House

நிர்வாகம் தொடர்பான கதைகள் மற்றும் அனுபவங்களின் மூலம் மேலாண்மையியலின் அடிப்படை விஷயங்களைக் கற்றுக்கொடுத்து அதன்மூலம், தினசரி செயல்கள், சிக்கல்கள் மற்றும் பிரச்சினைகள் ஆகியவற்றிற்கான தீர்வுகளைச் சொல்லும் புத்தகம் இது.

பதவி, உயர் பொறுப்பு, நேர்மறை எண்ணங்கள், நேர மேலாண்மை, அறம் மற்றும் தலைமைப்பண்பு போன்ற நிர்வாகவியலின் முக்கிய பகுதிகளைப்பற்றிய விரிவான கருத்துகளைக் கொண்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x