Published : 28 Apr 2015 01:14 PM
Last Updated : 28 Apr 2015 01:14 PM

ஆராய்ச்சி மையமாகத் திகழும் ஜிப்மர்

இந்தியாவின் தலைசிறந்த மருத்துவக் கல்லூரிகளில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது புதுச்சேரியின் ஜிப்மர் மருத்துவமனை எனப்படும் ஜவஹர்லால் மருத்துவப் பட்டமேற்படிப்புகள் மற்றும் ஆராய்ச்சிக்கான நிலையம். கோரிமேடு பகுதியில் 950 ஏக்கர் பரப்பளவில் பல பெருமைகளோடு விரிந்து கிடக்கிறது.

1823 ல் பிரெஞ்சு அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்டது. 1956-ல் மருத்துவக் கல்லூரியாக உயர்ந்தது. முன்னதாகத் தன்வந்திரி மருத்துவமனை என அழைக்கப்பட்டது. 1964 முதல் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்கு வந்தது.

இந்திய மருத்துவக் கவுன்சில் ,இந்திய நர்ஸிங் கவுன்சில் ஆகிய நிறுவனங்களால் அங்கீகரிக்கப்பட்ட 32 வகையான மருத்துவப்பட்டப் படிப்புகள் இங்கே உள்ளன.

சிறப்புப்பாடப் பிரிவுகளாக, இதய அறுவைசிகிச்சை,நரம்பியல்,உள்ளிட்டவை உள்ளன. ஆறு பாடப்பிரிவுகளுக்கு மேற்படிப்பான பி.எச்டி படிக்கும் வாய்ப்புகள் இங்கே உள்ளன. குறிப்பிட்ட பாடப்பிரிவுகளுக்குக் கல்வி உதவித்தொகையும் கிடைக்கும்.

பிளஸ் 2 தேர்ச்சி பெறும் மாணவர்களை நுழைவுத்தேர்வு மூலம்தான் ஜிப்மர் தேர்வு செய்கிறது.பட்டமேற்படிப்புகளுக்கு விண்ணப்பிப்பவர் எம்.பி.பி.எஸ் முடித்திருக்க வேண்டும். நுழைவுத்தேர்வும் தனியாக நடத்தப்படும். விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: >www.jipmer.edu.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x