Published : 05 May 2014 12:00 AM
Last Updated : 05 May 2014 12:00 AM

வேலை வேண்டுமா? | 05.05.2014

பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு மத்தியப் பாதுகாப்புப் படையில் பணி

மத்திய விரைவுப் படை, மத்தியத் தொழில் பாதுகாப்புப் படை, எல்லைப் பாதுகாப்புப் படை ஆகியவற்றில் உதவி கமாண்டண்ட் (Assistant Commandant) பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 136

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகப் பட்டப் படிப்பு

வயதுத் தகுதி: 25 வயதிற்குள் மத்திய அரசின் வயது வரம்புச் சலுகைகளும் உண்டு.

தேர்ந்தெடுக்கும் முறை: எழுத்துத் தேர்வு, உடல் தகுதித் தேர்வு, மருத்துவத் தகுதித் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூபாய் 200. எஸ்.சி./எஸ்.டி. மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டண விலக்கும் உண்டு.

விண்ணப்பிக்கும் முறை:>http://www.upsconline.nic.in/mainmenu2.php இந்த முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

கடைசித் தேதி: 12-05-2014, 11:59 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலதிகத் தகவலுக்கு:

>http://www.upsc.gov.in/exams/notifications/2014/capf/CAPF-2014%20%281%29.pdf

ஐடிஐ படித்தவர்களுக்கு ஆயுதத் தயாரிப்புத் தொழிற்சாலையில் பணி

கான்பூரில் உள்ள ஆயுதத் தயாரிப்புத் தொழிற்சாலை பிட்டர், மெஷினிஸ்ட், டர்னர் ஆகிய பணிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.

பணியிடங்கள்: 267

கல்வித் தகுதி: சம்பந்தப்பட்ட படிப்பில் அங்கீகரிக்கப்பட்ட ஐடிஐ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 33 வயதிற்குள் மத்திய அரசின் வயது வரம்புச் சலுகைகளும் உண்டு.

தேர்ந்தெடுக்கும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூபாய் 50. எஸ்.சி./எஸ்.டி. மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டண விலக்குண உண்டு.

விண்ணப்பிக்கும் முறை:

>http://www.ofkanpur.gov.in/recruitment/candidate/candviewfrm.php என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x