Published : 09 Mar 2015 12:00 pm

Updated : 09 Mar 2015 12:00 pm

 

Published : 09 Mar 2015 12:00 PM
Last Updated : 09 Mar 2015 12:00 PM

துணிவே தொழில்: நேரம் சரியாக இருக்க வேண்டும்!

தலைப்பைப் படித்தவுடன், சரி தொழில் தொடங்குவதற்கு நல்ல நேரம் எது என்று கேட்க ஜோதிடரைப் பார்க்கச் செல்ல வேண்டாம். நீங்கள் தொடங்கப் போகும் தொழில் அல்லது அளிக்கப் போகும் சேவை உரிய காலத்துக்கு (டைமிங்) ஏற்றதாக இருக்க வேண்டும்.

கடந்த வாரம் பூ, காய், கனி டாட் காம் பற்றி விவரித்திருந்தேன். அதைத் தொடங்கிய காலம் சரியானதாக இருக்கவில்லை. அதனால்தான் அதைத் தொடர முடியாமல் போனது. இப்போதைய சூழலில் கோடிக்கணக்கில் முதலீடு செய்து பிக்பேஸ்கெட் டாட் காம் எனும் நிறுவனம் மளிகை சாமான்களை ஆன்லைன் மூலம் வீடுகளுக்கு சப்ளை செய்ய திட்டமிட்டுள்ளது.


பெங்களூரில் பிரபலமாக உள்ள இந்நிறுவனம் இப்போது தமிழகத்திலும் தடம் பதிக்கிறது. இதிலிருந்தே ஒரு விஷயம் தெளிவாகியிருக்கும், அதாவது உரிய சூழல் இருக்க வேண்டும் என்பது.

பூ காய் கனி டாட் காம் மூலம் இணையதளத்தில் பிரெஷ்ஷாக காய், கனிகளை அளிக்க வேண்டும் என்ற சிந்தனை சரியானதே. ஆனால் அது காலத்துடன் பொருந்தாமல் போனதால் வெற்றிகரமான தொழிலாக அமையவில்லை. ஆனால் அந்த சிந்தனை தவறானது என்று அர்த்தமல்ல. அது காலத்துடன் பொருந்தவில்லை என்பதுதான் காரணம்.

பூ காய் கனி டாட் காம் மூலம் இணையதளத்தில் பிரெஷ்ஷாக காய், கனிகளை அளிக்க வேண்டும் என்ற சிந்தனை சரியானதே. ஆனால் அது காலத்துடன் பொருந்தாமல் போனதால் வெற்றிகரமான தொழிலாக அமையவில்லை. ஆனால் அந்த சிந்தனை தவறானது என்று அர்த்தமல்ல. அது காலத்துடன் பொருந்தவில்லை என்பதுதான் காரணம்.

தொழில் தொடங்கி வெற்றிகரமான, சாதனையாளராக உருவாக வேண்டும் என நினைப்போர் அனைவருமே தாங்கள் தொடங்கப் போகும் தொழில் அல்லது அளிக்கப் போகும் சேவை மக்களின் தேவையைத் தீர்ப்பதாக இருக்க வேண்டும். அத்துடன் அது காலத்துடன் பொருந்தக் கூடியதாக இருக்க வேண்டும்.

தமிழகத்தில் ஆட்டோவில் பயணம் செய்து எவருக்காவது சுகமான அனுபவம் கிடைத்திருக்கிறதா என்றால் இல்லை என்பதே பெரும்பாலானவரின் பதிலாக இருக்கும். இதற்குக் காரணம் ஆட்டோ ஓட்டுநருடன் வாக்குவாதம் இல்லாத பயணமே எவருக்கும் கிடைக்கவில்லை என்பதுதான்.

சரி டாக்ஸி சவாரி செளகரியமாக இருக்குமா என்றால் அதுவும் நடுத்தர மக்களுக்கு கட்டுப்படியாகவில்லை. இத்தகை சூழலில் வந்ததுதான் கால் டாக்சி எனும் புதிய அணுகுமுறை.

ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநர்களின் அடாவடியில் அதிருப்தி அடைந்த ஒரு தொழில்முனைவோர் அல்லது தொழிலதிபரின் சிந்தனையில் உருவானதுதான் கால் டாக்ஸி எனும் புதிய யோசனை.

போன் செய்தால் போதும், உங்களது வீடு தேடி கார் வந்து நிற்கும். குடும்பத்தோடு பயணிக்க இது சௌகர்யமாக இருந்தது. மேலும் மீட்டர் மற்றும் வாக்குவாதம் கிடையாது என்ற நிம்மதியே கால் டாக்ஸி வெற்றிகரமானதற்கு காரணமாக இருந்தது.

ஆனால் இப்போதோ மொபைல் போனில் தொடர்பு கொண்டு வாடகைக் காரை வரவழைக்க முடியும். ஓலா கேப்ஸ் மற்றும் டாக்ஸி பார் ஷியூர், உபேர் போன்ற கணக்கிலடங்கா நவீன வாடகைக் கார் நிறுவனங்கள் வந்துவிட்டன.

சில நிறுவனங்கள் தங்களது ஆப்ஸை டவுன்லோட் செய்தால் ஒரு முறை பயணத்தை இலவசமாக அளிப்பதாக அறிவித்தது.

இவையெல்லாம் எதைக் காட்டுகிறது, மாறிவரும் சூழலுக்கேற்ப சேவைகளும் மாற வேண்டும் என்பதைதான். இப்போது போன் செய்து கால் டாக்ஸிகளை அழைக்கும் போக்கு குறைந்து வருகிறது.

ஆட்டோக்கள் கூட இப்போது இதுபோல வரத் தொடங்கிவிட்டன.

வாடிக்கையாளர்கள் தொகை அதிக மாக இருந்தாலும் பேரம் பேசு வதை விரும்புவதில்லை. கட்டணம் வெளிப் படையாக தெரிய மீட்டர் இருப்பதை பெரும்பாலும் விரும்புகின்றனர். இவற்றை பூர்த்தி செய்ததே கால் டாக்ஸி, ஓலா கேப்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் வெற்றிக்குக் காரணமாகும்.

எந்த ஒரு தொழிலும் கால மாற்றத்துக்கு ஈடு கொடுக்க முடியாவிட்டால் அது காணாமலே போகும்.

தொழில் தொடங்கும் முன்பே எந்தத் தொழிலில் நீண்ட காலம் நிலைக்க முடியும், மாற்றங்களுக்கேற்ப மாற முடியும் என்பதை திட்டமிட்டுத் தொடங்குங்கள். வெற்றிகரமான தொழில்முனைவோர் பட்டியலில் நீங்கள் இடம்பெறுவது நிச்சயம்.

கே.சுவாமிநாதன் aspireswaminathan@gmail.com


துணிவே தொழில்தொழிலில் வெற்றி பெறவாடிக்கையாளரின் தேவைதொழில் முனைவோர்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x