Published : 02 Apr 2014 12:05 PM
Last Updated : 02 Apr 2014 12:05 PM

அந்த நாள் ஞாபகம்: பிரான்ஸின் பெண் பிரதமர் ராஜினாமா செய்த நாள்

1992, ஏப்ரல் 2

பிரான்ஸ் நாட்டின் முதல் பெண் பிரதமர் எதித் க்ரசான். அவர் சோசலிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர். 1977-ல் ஒரு நகராட்சி உறுப்பினராக தேர்தலில் வென்றார். படிப்படியாக உயர்ந்து 1991-ல் அந்த நாட்டின் முதல் பெண் பிரதமர் ஆனார். அவர் 1991 மே 15 முதல் 1992 ஏப்ரல் 2 வரை அந்தப் பொறுப்பில் இருந்தார்.

1992-ல் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் சோசலிஸ்ட் கட்சி போதுமான அளவு வெற்றி பெறவில்லை. அதனால் பிரதமர் பொறுப்பில் இருந்து அவர் ராஜினாமா செய்த நாள் இன்று. பிரதமராக அவர் பதவி வகித்த காலகட்டத்தில் நகரில் வசிக்க அனைவருக்கும் உரிமை உண்டு என்ற அடிப்படையில் ஒரு சட்டத்தை அவர் கொண்டு வந்தார்.

ஜப்பானியர்களின் பொருளாதார கொள்கைகளை விமர்சிக்கும் போது "மஞ்சள் எறும்புகள் உலகத்தையே தனக்கு சொந்தமாக ஆக்கிக்கொள்ள நினைக்கின்றன" என்று அவர் பேசியது விமர்சனத்துக்குள்ளானது. ஹோமோசெக்ஸுவல் எனக்கு புதிராக இருக்கிறது என்று அவர் சொன்ன கருத்தும் விமர்சிக்கப்பட்டது.

பிரதமர் பதவியிலிருந்து விலகிய அவர், ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தில் ஆய்வு, விஞ்ஞானம், கண்டுபிடிப்புகளுக்கான ஆணையராக 1995 முதல் 1999 வரை பணியாற்றினார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x