Published : 05 Nov 2014 10:00 AM
Last Updated : 05 Nov 2014 10:00 AM

நீங்களே செய்யலாம் - அசைந்தாடும் வாழை மரம்

தோட்டத்தில் பச்சைப் பசேலென வளர்ந்து நிற்கும் வாழை மரத்தைப் பார்த்திருப்பீர்கள். தோட்டத்தில் வளர்க்கப்படும் அந்த வாழைமரத்தை நீங்கள் வீட்டிலேயே செய்யலாம் தெரியுமா? செய்து பார்க்கிறீர்களா?

தேவையான பொருள்கள்:

தடிமனான அட்டை, பச்சை நிற அட்டை, கறுப்பு நிற ஸ்கெட்ச் பேனா, காம்பஸ், பசை.

செய்முறை:

1 - பச்சை நிற அட்டையிலிருந்து ஏழு செண்டிமீட்டர் அகலமும் நீளமும் கொண்ட சதுர வடிவ அட்டையை வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள். படத்தில் காட்டியுள்ளபடி ஒரு மூலையில் இருந்து ஒரு செ.மீ. தூரத்திலும் ஆறு செ.மீ தூரத்திலும் இரண்டு ஆரங்களை வரைந்து கொள்ளுங்கள்.

2 - கோடிட்ட பகுதியை வெட்டி எடுத்துவிட்டு அட்டையை நன்கு சுருட்டிக்கொள்ளுங்கள். இதுதான் வாழை மரத்தின் தண்டாகப் பயன்படுத்தப்படும்.

3 - பச்சை நிற அட்டையில் வாழை இலையைப் படம் வரைந்து நடுவில் கறுப்பு ஸ்கெட்ச் பேனாவால் கோடிட்டு, அதை வெட்டி எடுத்துக்கொள்ளுங்கள். இப்படிப் பல இலைகளை உருவாக்கிக்கொள்ளுங்கள்.

4 - இப்போது ஏற்கனவே வெட்டி எடுக்கப்பட்ட மரத்தின் தண்டுடன் பல பகுதிகளில் படத்தில் காட்டப்பட்டிருப்பது போல் வாழை இலையை ஒட்டி விடுங்கள்.

5 - தடிமனான அட்டையிலிருந்து உருவாக்கப்பட்ட சதுர வடிவ அடிப்பாகத்தில் இந்த வாழை மரத்தை வைத்துவிடுங்கள். கண்ணெதிரே வாழை மரம் அசைந்தாடுகிறதா?, அப்புறமென்ன, இதை வைத்து விளையாடலாம் இல்லையா?

© Amrita Bharati, 2014



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x