Published : 05 Nov 2014 10:27 AM
Last Updated : 05 Nov 2014 10:27 AM

டிஎன்பிஎஸ்சி குரூப் - IV மாதிரி வினா - விடை 8

பொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள்

191. தபால்துறை மூலம் உலகின் எந்த பகுதிக்கும் உடனடியாக பணம் அனுப்பும் திட்டத்தின் பெயர் என்ன?

192. அமெரிக்காவில் எத்தனை மாநிலங்கள் உள்ளன?

193. இந்தியாவில் ஒரேயொரு கிராமத்தில் மட்டும் அனைத்து வீடுகளுக்கும் இண்டர்நெட், இ-மெயில் ஐடி வசதி பெறப்பட்டுள்ளது. அந்த கிராமம் எது?

194. இந்தியாவில் முதல் மருத்துவக் கல்லூரி எங்கு தொடங்கப்பட்டது?

195. இந்திய ரயில்வேயில் தினமும் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை எவ்வளவு?

196. விமானப்படை பயிற்சி கல்லூரி அமைந்துள்ள இடம் எது?

197. இந்திய ராணுவக் கல்லூரி எங்கு அமைந்துள்ளது?

198. நீல மலைகள் என அழைக்கப்படுவது எது?

199. ஏழு குன்றுகளின் நகரம் எனப்படுவது எது?

200. மோட்டார் கார் நகரம் என அழைக்கப்படும் நகரம் எது?

201. ஸ்பீடு போஸ்ட் சர்வீஸ் என்ற விரைவு தபால் சேவை திட்டம் எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது?

202. பின்கோடு திட்டத்தின்படி நாடு எத்தனை மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது?

203. முதல் இந்திய விண்வெளி வீரர் யார்?

204. மக்களவையை கலைக்கும் அதிகாரம் பெற்றவர் யார்?

205. இந்திய குடியரசு தலைவர் எந்த தேர்தல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்?

206. எந்த ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்தியா கடைசியாக தங்கப் பதக்கம் வென்றது?

207. தமிழ்நாட்டில் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை எங்குள்ளது?

208. இந்திய ரிசர்வ் வங்கி எப்போது தோற்றுவிக்கப்பட்டது?

209. தமிழ்நாட்டின் நுழைவு வாயில் எது?

210. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் ("இஸ்ரோ ") தலைவர் யார்?

211. ரிசர்வ் வங்கியின் கவர்னர் யார் ?

212. இந்திய தலைமை தேர்தல் ஆணையர் யார்?

213. கார்கில் போர் எப்போது நடந்தது?

214. "Wealth of Nations" என்ற நூலை எழுதியவர் யார்?

215. தனியார் பள்ளிகளின் கல்விக்கட்டணத்தை நிர்ணயம் செய்ய அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் யார்?

216. 31-வது ஒலிம்பிக் போட்டி நடைபெறும் நாடு எது?

217. இந்தியாவில் மெட்ரோ ரயில் முதன்முதலாக எங்கு அறிமுகமானது?

218. சென்னையில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் திட்டம் எந்த நாட்டு உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது?

219. கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் முழு சுகாதார திட்டம் தற்போது எவ்வாறு பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது?

220. அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு மத்திய அரசு அறிவித்துள்ள புதிய ஓய்வூதிய திட்டத்தின் பெயர் என்ன?

221. மதிப்பு கூட்டுவரி (Value Added Tax-VAT) எந்த ஆண்டு அமலுக்கு வந்தது?

222. சர்வதேச தொழிலாளர் நிறுவனம் (International Labour Organization-ILO) எங்குள்ளது?

223. பிரதம மந்திரி கிராமோதயா திட்டம் எப்போது அமல்படுத்தப்பட்டது?

224. இந்தியாவில் ஆண்களின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு?

225. ஒரு ரூபாய் நோட்டில் கையெழுத்திடுபவர் யார்?



விடைகள்

191. யூரோ-ஜூரோ திட்டம்

192. 50

193. பலாஹி (பஞ்சாப்)

194. 1835, சென்னை

195. 18 லட்சம்

196. ஜோத்பூர்

197. டெஹ்ராடூன்

198. நீலகிரி

199. ரோம்

200. டெட்ராய்டு (அமெரிக்கா)

201. 1986

202. 8 மண்டலங்கள்

203. ராகேஷ் சர்மா

204. குடியரசுத் தலைவர்

205. மறைமுகத் தேர்தல்

206. மாஸ்கோ (1980)

207. மணலி (சென்னை)

208. 1935

209. தூத்துக்குடி

210. கே.ராதாகிருஷ்ணன்

211. ரகுராம்ராஜன்

212. வி.எஸ்.சம்பத்

213. 1999

214. ஆதம் ஸ்மித்

215. நீதிபதி எஸ்.ஆர்.சிங்காரவேலு

216. பிரேசில் (2016)

217. கொல்கத்தா (1973)

218. ஜப்பான்

219. சுகாதார பாரத் இயக்கம்

220. ஸ்வாலம்பன்

221. 2003

222. ஜெனீவா

223. 2000

224. 63

225. மத்திய அரசின் நிதித்துறைச் செயலாளர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x