Last Updated : 05 Aug, 2016 11:03 AM

 

Published : 05 Aug 2016 11:03 AM
Last Updated : 05 Aug 2016 11:03 AM

மாயப் பெட்டி: பன்மொழிப் படம்

பன்மொழிப் படம்

ஜெயா மூவிஸ் சானலில் ரொம்ப வித்தியாசமான ஒரு திரைப்படத்தைக் காண நேர்ந்தது. மம்முட்டி, சீமா, சுமலதா போன்றோர் நடித்த ‘நினைவுகள் அழிவதில்லை’ (தடாகம் என்ற மலையாளப் படத்தின் தமிழாக்கம்). காஷ்மீரில் நடப்பதுபோன்ற கதை. ஒரு காட்சியில் சீமாவும் சுமலதாவும் தமிழில் பேசினார்கள். அடுத்த இரண்டு காட்சிகளில் கதாபாத்திரங்கள் இந்தியில் உரையாடினார்கள். தொடர்ந்து மம்முட்டி வாயசைக்க, பிறந்தது ஒரு மலையாளப் பாட்டு. அடடா இதுவல்லவோ தேசிய ஒருமைப்பாடு.

காதலும் கால இயந்திரமும்

WB (Warner Brothers) சானலில் திரையிடப்பட்டது 2002-ல் வெளியான ‘The Time Machine’ என்ற திரைப்படம். HG வேல்ஸ் என்ற பிரபல எழுத்தாளர் இதே பெயரில் எழுதிய கதையின் திரையாக்கம். விஞ்ஞானி ஒருவரின் காதலி கொல்லப்படுகிறாள். துயரத்தை மறைக்க ஆராய்ச்சிகளில் முழுக் கவனத்தைச் செலுத்தும் விஞ்ஞானி அலெக்சாண்டர் கால இயந்திரத்தைக் கண்டுபிடிக்கிறார். அதில் பின்னோக்கிப் பயணம் செய்து காதலியின் இறப்பைத் தடுக்க முடியுமா என்று முயல்கிறார். முடியவில்லை. நினைவிழந்த அவரை அந்த இயந்திரம் கி.பி. 701-க்குக் கொண்டுசெல்கிறது. நாகரிகம் என்ற வரம்/சாபம் சூழ்ந்திராத சமூகத்தில் வாழ்கிறான். அலெக்சாண்டரின் காதலி பெருமையுடன் ‘நூல் ஏணி செய்ய எனக்குத் தெரிந்துவிட்டது. இந்தக் கயிற்றைக் கொண்டு உனக்கு அதை எப்படிச் செய்வது என்பதை நான் கற்றுத் தருகிறேன். இது மாபெரும் கண்டுபிடிப்பு” என்கிறாள் கால இயந்திரத்தை உருவாக்கிய அந்த விஞ்ஞானியைப் பார்த்து.

மக்களின் ஆனந்த வாழ்வு

டைம்ஸ் நௌ சானலில் வெளியான சில கருத்துகள். ‘மாநிலங்கள் மாறுபடலாம். ஆனால் மக்களின் அவல நிலை எங்கும் அதேதான்’, ‘நீங்கள் அவஸ்தைப்படுங்கள். தலைவர்கள் ஆனந்த வாழ்வு வாழட்டும்’. அதாவது ஹரியானாவில் உள்ள குர்காவ் நகரில் கடும் மழை பெய்ய, இதைத் தொடர்ந்து சாலைகள் பெருமளவில் சேதமடைய ஆறு கிலோ மீட்டர் கடக்க நான்கு மணி நேரம் ஆனதாம். இது குறித்து பொது மக்கள் சானலுக்கு மெஸேஜ் செய்த வயிற்றெரிச்சல் வாசகங்கள்தான் அவை.

கிரிக்கெட் விளம்பரம்

ஜீ டி.வி சானலில் ‘டாப் 10’ நிகழ்ச்சியில் மகேந்திர சிங் தோனி கூறியதைக் குறிப்பிட்டார்கள். டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றதற்காகத் தான் வருத்தப்படுவதாகக் கூறினார். என்றாலும் அது ஒரு புத்திசாலித்தனமான முடிவுதான் என்றார். டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற பின் சில விஷயங்களில் அதிகக் கவனம் செலுத்த முடிகிறது என்றார். அவற்றில் விளம்பரங்களும் உண்டா என்பதை அவர் தெரிவிக்கவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x