Published : 27 Aug 2016 02:18 PM
Last Updated : 27 Aug 2016 02:18 PM

கட்டில் என்னும் கருப்பை

ஓய்வும் நிம்மதியும்தான் ஒவ்வொரு நாளையும் உற்சாகம் கொள்ளச் செய்கின்றன. ஒரு புதிய நாளை ஆற்றலுடன் எதிர்கொள்ள நிறைவான உறக்கம் ஒவ்வொருவருக்கும் அவசியம். அதனால்தான் காலம்காலமாகச் சிறப்பான குடும்ப வாழ்வின், தாம்பத்தியத்தின் ஒரு அத்தியாவசிய அங்கமாகக் கட்டில் திகழ்கிறது. அரசர் முதல் எளியவர் வரை அனைவரும் பார்த்துப் பார்த்து வாங்கும் வீட்டு உபயோகப் பொருட்களில் பிரதானமானது கட்டில்.

அட்ஜஸ்டபிள் பெட்

உடலுக்கு சவுகரியமாக இருக்கும் வகையில் வெவ்வேறு உயரங்கள் மற்றும் சாய்மானங்களை மாற்றிக்கொள்ளக்கூடிய வசதியைக் கொண்ட கட்டில் இது. இந்த வகை பெட்கள் பொதுவாக மருத்துவமனைகள் மற்றும் நர்சிங் ஹோம்களில் காணப்படும். ஆனால் தற்போது வீடுகளில் பயன்படுத்தப்படக்கூடிய சூழ்நிலை உள்ளது. ஏனெனில் பலவிதமான உடல்நலக் குறைபாடுகளிலிருந்து தீர்வைத் தருவதாக இந்த அட்ஜெஸ்டபிள் படுக்கைகள் உள்ளன. தசைப்பிடிப்புகள், முதுகு வலி போன்றவை இந்தக் கட்டிலைப் பயன்படுத்துவதன் மூலம் குறைகின்றன.

ஸ்டோரேஜ் பெட்

ஸ்டோரேஜ் தேவையையும் நிறைவேற்றும் படுக்கைகள் இவை. தோலுறையால் போர்த்தப்பட்ட கட்டில்கள் இவை. நிறைய பொருட்களை இந்தப் படுக்கையின் கீழே வைத்துக்கொள்ளலாம். தலையணைகள், போர்வைகள் ஆகியவற்றை இங்கேயே வைத்துக்கொள்ளலாம். வீடுகளில் இடப்பற்றாக்குறை என்பது அனைவரும் எதிர்கொள்ளும் பிரச்சினையாக இருப்பதால் அதற்குச் சரியான தீர்வாக இந்தக் கட்டில்கள் இருக்கின்றன.

ஃபோர் போஸ்டர் பெட்

கொசுவலையால் முழுதும் போர்த்தக்கூடிய வகையில் நான்கு பக்கமும் மரத்தூண்களைக் கொண்ட பாரம்பரியக் கட்டில் இது. தேக்கு போன்ற உயர் ரக மரத்தில், கலை வேலைப்பாடுகளுடன் செய்யப்படும் கட்டில் இது. பாரம்பரியத்தை நினைவுபடுத்துவதற்காகப் பழைய பாணியில் கட்டப்படும் வீடுகளுக்குப் பொருத்தமான தோற்றத்தை இவ்வகைக் கட்டில்கள் வழங்கும்.

திவான் படுக்கை

பெட்டி போன்ற அமைப்புடன் கால்கள் இல்லாத படுக்கை இது. படுக்கை மூன்றடி உயரத்தில் கட்டிலைவிடக் குறைவாக இருக்கும். வீட்டில் பொருட்கள் வைக்க இடமில்லாதவர்கள் இந்த திவானில் படுக்கைக்கு கீழே உள்ள டிராயர் போன்ற மரப்பெட்டியை இழுத்து பொருட்களை வைத்துவிடலாம். தற்போது தோலுறை போட்ட திவான்கள், உலோக திவான்களும் சந்தையில் உள்ளன.

ஸ்லீக் படுக்கை

படுக்கையறையையே கம்பீரமாக்கிவிடக்கூடிய கட்டில் இது. பயன்படுத்துபவரின் ரசனையைத் தெரியப்படுத்தும். அழகான, ஒல்லியான வளைவுகளுடன் மெல்லியதாகத் தோற்றமளிக்கும் கட்டில் இது. அதிநவீன அடுக்குமாடிக் குடியிருப்பு வீடுகளின் படுக்கையறையை அலங்கரிப்பதற்கு ஏற்றது. மரம், உலோகம், தோலுறை என பல்வேறு வகைக் கட்டில்கள் கிடைக்கின்றன.

பிளாட்பார்ம் பெட் அல்லது பேனல் பெட்

மரச் சட்டங்களை ஆதாரமாக வைத்து செய்யப்படும் கட்டில் இது. பாக்ஸ் ஸ்பிரிங் தேவையில்லாமலேயே, மெத்தைக்குப் போதுமான திடத்தை வழங்குகிறது. எளிமைக்காகவும் சவுகரியத்திற்காகவும் அமெரிகாகவில் மிகவும் பிரபலமான கட்டில்கள் இவை. அத்துடன் மரச்சட்டங்களுக்கிடையே இடைவெளி இருப்பதால் மெத்தையின் மீது காற்றுபட்டு, தேவையற்ற வாடை இருக்காது. இதனால் மெத்தைகள் நீண்ட காலம் உழைக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x