Last Updated : 17 Jan, 2017 10:39 AM

 

Published : 17 Jan 2017 10:39 AM
Last Updated : 17 Jan 2017 10:39 AM

ஆங்கிலம் அறிவோமே - 143: ரயிலும் மயிலும்!

கேட்டாரே ஒரு கேள்வி

ஓர் அரசியல்வாதியைக் குறிப் பிட்டு “He is in the middle of the road” என்று ஒரு ஆங்கில நாளிதழ் வர்ணித்திருந்தது. ஆனால் அவர் அப்படியொன்றும் ஏழையாகத் தெரியவில்லை. ஏன் இந்த முரண்?

--------------------

“Teeth என்ற வார்த்தை தொடர்பான idioms-ஐ இந்தப் பகுதியில் விளக்கியிருந்தீர்களே. Tongue குறித்தும் idioms உண்டே. அவற்றை விளக்கியிருக்கக் கூடாதா?” என்கிறார் ஒரு வாசகர்.

வாசகர் ஒருவர் இப்படிக் கேட்ட பிறகு “யாகாவாராயினும் நாகாக்க” என்றபடி, இது குறித்து tongue tied-ஆக இருக்க மனமில்லை.

To have a sharp tongue என்றால் சுருக்கென்று பேசுதல். வளவளவென்று இல்லாமல் பேசுவதையும் இப்படிக் குறிப்பிடுவதுண்டு.

With his tongue in cheek என்றால் போலித்தனமாகப் பேசுவது. நேரில் பாராட்டிவிட்டு பின்னால் தவறாகப் பேசுவதையும் இப்படிக் குறிப்பிடுவதுண்டு.

ஒருவரைப் பற்றி அவர் முதுகுக்குப் பின்னால் பேசுவதை ‘to wag one’s tongue’ என்று குறிப்பிடுவதுண்டு.

I hold my tongue என்றால் நான் எதுவும் பேசவில்லை என்று அர்த்தம்.

A slip of the tongue என்றால் தவறாகப் பேசுவது என்று அர்த்தம். இதிலும் ஒரு சூட்சுமம் உண்டு. ஆங்கிலம் அறிவோமே என்று சொல்வதற்குப் பதிலாக ஆங்கிலம் அறியலாமே என்றோ ஆங்கிலம் தெரிவோமே என்றோ கூறிவிட்டால் அதை slip of the tongue என்பதில்லை. மாறாக ஆங்கிலம் எறிவோமே என்று தவறாகச் சொல்லிவிட்டால் அது slip of the tongue. அதாவது சொல்ல நினைத்ததற்கு நேரெதிர் பொருள் தரும் வார்த்தைகளைக் கூறிவிடுவது.

He has a dirty tongue என்றால் அவருக்கு ஒரு ‘tongue cleaner’ வாங்கிக் கொடுக்க வேண்டும் என்பதில்லை. அவர் கூறத்தகாத வார்த்தைகளைக் (bad language) கூறுகிறார் என்று பொருள்.

Tongue twister என்பது நாக்குக்கு சோதனை தரும் விஷயம். She sells seashells on the seashore என்பதை ஐந்து முறை வேகமாகச் சொல், என்பதெல்லாம் இந்த tongue twister வகைதான்.

--------------------

கேட்டாரே ஒரு கேள்வியில் காணப்படும் தகவல் எந்த விதத்திலும் முரண் அல்ல. அது ஆங்கிலப் பயன்பாடுகளைத் தமிழில் யோசிப்பதால் உண்டாகும் முரண் என்று கூறலாம். Idioms-ஐப் பொருத்தவரை வார்த்தைக்கான அர்த்தங்களை அப்படியே எடுத்துக் கொள்ளக் கூடாது. அவன் தீயாக வேலை செய்தான் என்றால் சுற்றுப்புறத்தைச் சாம்பலாக்கினான் என்றா அர்த்தம்?

“நான் நடுத்தெருவில் நிற்கிறேன்” என்று ஒருவர் கூறினால், அவர் தன் செல்வதையெல்லாம் தொலைத்துவிட்டார் என்று அர்த்தம் கொள்ளலாம். ஆனால் ஆங்கிலத்தில் ‘in the middle of the road’ என்றால் எந்தவொரு தீவிரமான முடிவும் எடுக்காமல் பாதுகாப்பாக இருப்பது என்று பொருள். கொஞ்சம் மதில்மேல் பூனைபோல என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

--------------------

We enclose herewith an attachment என்பது சரிதானே என்று வினவுகிறார் ஒரு நண்பர். Enclose செய்வது என்றாலே attach ஆகியிருக்கிறது என்றுதான் அர்த்தம். Herewith என்பதுகூட அவசியமில்லாத அதிகப்படி வார்த்தை. We enclose அல்லது we attach என்பதே போதுமானது.

தோகை என்பதன் ஆங்கிலப் பெயர் என்ன? Feather என்பது இறகா, இறக்கையா?

ரயில், பயிற்சி அளித்தல் ஆகிய இரண்டுக்கும் பொருந்தக் கூடிய ஓர் ஆங்கில வார்த்தையைச் சொல்லுங்கள். அதுதான் தோகை என்பதற்குமான ஆங்கிலச் சொல்.

Train எனப்படும் மயில் தோகையிலுள்ள ஒவ்வொரு இறகிலும் (அதாவது featherலும்) நடுவே காணப்படும் பகுதியை eyespot என்பார்கள். பெரிய தோகை உள்ள மயில்கள் பெரும்பாலும் பலம் மிக்கவையாக இருக்கும். எல்லா மயில்களும் peacocks அல்ல. பெண் மயில்களை peafowls என்பார்கள்.

Peacocks have been reported to roost both solitary and communal. இந்த வாக்கியம் தொடர்பாக சில விளக்கங்கள் சிலருக்குத் தேவைப்படலாம். இங்கு roost என்பது verb ஆகப் பயன்படுகிறது. (Rooster என்பது noun - சேவல்). Solitary என்றால் தனியாக. Communal என்றால் ஒரு சமூகமாக. அதாவது மயில்கள் தனியாகவும் தூங்கும். தன் இனத்தைச் சேர்ந்த பிற மயில்களுடனும் தூங்கும்.

ஒரு தோகையில் எவ்வளவு feathers இருக்கும் தெரியுமா? ‘150லிருந்து 200 வரை’.

--------------------

போட்டியில் கேட்டுவிட்டால்?

Despite being in the battle, the soldier fought on and was awarded a medal for bravery.

a)bruised

b)wounded

c)enraged

d)flawed

e)defeated

Despite என்றால் inspite of என்று பொருள். கொடுக்கப்பட்ட வாக்கியத்தைப் படித்தால் போர்க்களத்தில் எதிர்மறையான ஏதோ ஒன்று நிகழ்ந்தபோதும் மிகவும் துணிவுடன் ஒரு போர் வீரர் போர் புரிந்தார். அந்த வீரத்துக்காக அவருக்கு விருது வழங்கப்பட்டது என்ற பொருள் வருகிறது.

இப்போது கொடுக்கப்பட்டுள்ள விடைகளை ஒவ்வொன்றாக கோடிட்ட இடத்தில் பொருத்திப் பார்க்கலாம்.

Defeated என்பது பொருந்தவில்லை. ஏனென்றால் தோல்வியடைந்த பிறகும் தொடர்ந்து போரிடுவது என்பது முழுமையாக ஒத்துப்போகவில்லை.

போரின்போது ஆக்ரோஷத்துடன் செயல்படுவது இயல்பு. எனவே கோபம் அல்லது ஆக்ரோஷம் அடைந்தும்கூட என்ற பயன்பாடு சரியில்லை. எனவே enraged என்பது பொருந்தவில்லை.

Flaw என்றால் குறைபாடு. கோடிட்ட இடத்தில் flawed என்ற வார்த்தையை நிரப்புவது ஒழுங்கான அர்த்தத்தைக் கொடுக்கவில்லை.

Bruised, wounded ஆகிய இரு வார்த்தைகளும் கோடிட்ட இடத்தில் உரிய அர்த்தம் கொடுப்பவையாக உள்ளன. Bruise என்றால் சிராய்ப்பு. Wound என்றால் காயம்.

சிராய்ப்பு உண்டானபோதும் தொடர்ந்து போரிட்டதற்காக ஒருவருக்கு விருது தந்துவிட மாட்டார்கள்.

எனவே Despite being wounded in the battle, the solider fought on and was awarded a medal for bravery என்பதுதான் சரி.

--------------------

“தராசு என்பதற்கான ஆங்கில வார்த்தை scale-ஆ இல்லை Balance-ஆ?”

Balance என்பது தராசு. இருவித எடைகளை balance செய்வதால் இந்தப் பெயர்.

Weighing scale என்று பிரிட்டனில் தராசைக் குறிப்பிடுகிறார்கள். தெற்காசிய நாடுகளில் Weighing Machine என்கிறோம். அமெரிக்காவில் scale என்றால் தராசு.

Turning the scales என்றால் ஒன்று நடக்கப் போகிறது என்று பெரிதும் கணிக்கப்பட்ட நிலையில் அந்தக் கணிப்பை புரட்டிப் போடுவது. சில சமயம் தலைவர்களின் இறப்போ, கூட்டணியோ தொடரும் தேர்தல் முடிவுகளைப் புரட்டிப் போடலாம்.

--------------------

“மேலதிகாரிக்கு அனுப்பிய ரிப்போர்ட் ஒன்றில் தவறான தகவலை குறிப்பிட்டுவிட்டேன். அதை அவர் சுட்டிக் காட்டுகிறார். எழுத்து வடிவில் என் மன்னிப்பை எப்படிக் கோரலாம்?” என்று கேட்கிறார் ஒரு வாசகர்.

இதோ சில ஆலோசனைகள்.

# l Sorry about the inaccuracy in the report.

# I profusely repent about the misinformation in the report.

# Thank you for letting me know about the fallacy in the report. I am embarrassed and perplexed about how that could have happened. Sorry.

# I will get the team together and we will review and report again after two days.

# I will determine where and why I went wrong and get back to you immediately.

(தொடர்புக்கு - aruncharanya@gmail.com)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x