Published : 26 Mar 2017 11:52 AM
Last Updated : 26 Mar 2017 11:52 AM

சூட்டைத் தணிக்கும் பனங்கற்கண்டு

# ஒரு லிட்டர் தண்ணீரில் நன்றாகப் பொடித்த பனை வெல்லத்தூள் 150 கிராம், நான்கு டீஸ்பூன் எலுமிச்சை சாறு, இரண்டு சிட்டிகை ஏலக்காய்த் தூள் சேர்த்து நன்றாகக் கலந்து குடித்துவந்தால் கோடை தாகம் தணியும். சோர்வு நீங்கி உற்சாகம் ஏற்படும்.

# மோரில் சிறிதளவு சின்ன வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிச் சேர்த்துப் பருகிவந்தால் கோடையில் உண்டாகும் உடல் சூடு தணிந்து, உடல் குளிர்ச்சி பெறும்.

# எலுமிச்சை சாறு, வெள்ளரிச் சாறு, சீரகத் தூள் சேர்த்துக் குடித்தால் சிறுநீர்க் கடுப்பு நீங்கும்.

# கேரட்டைச் சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் விழுதாக அரைத்து, மோரில் கலந்து சிறிது உப்பிட்டுப் பருகினால் உடல் சூடு தணியும், புத்துணர்ச்சி ஏற்படும்.

- வி.ரமா, நாகர்கோவில்.

# அன்னாசி அல்லது மாதுளம் பழச்சாறைத் தினமும் குழந்தைகளுக்குக் கொடுத்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். வயிற்றுப் போக்கு, வாந்தி, மயக்கம், சோர்வு வராது.

# பள்ளிக்குச் சென்று வரும் குழந்தை களுக்குக் கொய்யா, வாழைப் பழம் கொடுத்து வந்தால் மலச்சிக்கல், மனச்சிக்கல் நீங்கும்.

# தேங்காய்ப்பால், வெங்காயச்சாறு, எலுமிச்சைச் சாறு போன்றவற்றை நீரில் கலந்து தலையில் தேய்த்துக் குளிக்க உடல் குளிர்ச்சி ஏற்படும். பேன், பொடுகு, தொல்லை வராது. முடி உதிர்வது நிற்கும். கூந்தல் ஆரோக்கியம் பெறும்.

# ஷாம்பு போட்டுக் குளிக்காமல் ஊறவைத்து அரைத்த வெந்தயம் அல்லது செம்பருத்தி இலை விழுதைத் தேய்த்துக் குளித்தால் கூந்தல் ஆரோக்கியம் பெறுவதோடு அடிக்கடி தலைவலி வராது.

# புதினா, மா இலை, கொய்யா இலை பொடிகளுடன் உப்புச் சேர்த்துப் பல் துலக்கினால் பல் கூச்சம் மறைவதோடு, பளீர் பற்கள் நிச்சயம்.

# முருங்கைக் கீரையின் நூனிக்காம்பை நசுக்கிச் சாறெடுத்து, தக்காளி, பருப்பு தண்ணீர், பூண்டு, மிளகு சேர்த்து ரசம் வைத்துக் குடித்தால் மூட்டு வலி நீங்கி ரத்த ஓட்டம் சீராகும்.

-. நவீனா தாமு, திருவள்ளூர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x