Published : 31 Oct 2014 02:32 PM
Last Updated : 31 Oct 2014 02:32 PM

படம் பேசும்

ஒளியில் கலந்த கலைஞன்

‘நெஞ்சைத்தை கிள்ளாதே’ படத்தின் பருவமே... என்ற பாடல் புகழ்பெற்ற ஒன்று. பனிவிழும் ‘மம்மல்’ பொழுதில் செயற்கை ஒளி இல்லாமல் அந்தப் பாடலைப் படமாக்கிய அசோக்குமார் அதற்காகத் தேசிய விருதும் பெற்ற ஒளிக்கலைஞர். மலையாளப் பட உலகிலிருந்துவந்து மகேந்திரன் சித்திரித்த உலகத்துக்கு உயிரூட்டிய இவர், கடைசியாக ஒளிப்பதிவு செய்த படம் ‘பவந்தர்’. 2000-ம் ஆண்டில் வெளியான இந்த இந்திப் படம்.

ஒளிப்பதிவுக்காக உலக அளவில் கவனிக்கப்பட்டது. இதன் பிறகு ஓய்வுபெற்ற அசோக்குமார், தலைமுறைகளைக் கடந்து நவீனத் தொழில்நுட்பங்களில் வெற்றிகண்ட சாதனையாளர். ஜானி படப்பிடிப்பில் ஒளிப்பதிவு உதவியாளராகப் பணியாற்றிய சுஹாசினி, அசோக்குமாரின் மீது விழும் ஒளியின் அளவை அளக்கிறார். அப்போது க்ளிக்கியவர் ஸ்டில்ஸ் ரவி.

செல்ஃபி விஜய்

லைகா பிரச்சினை, ஓரணியாகத் திரண்டு எதிர்த்த சில தமிழ் அமைப்புகள் ஒரே இரவில் மவுனிகளாக மாறியது, படம் வெளியான பிறகு ஏ.ஆர். முருகதாஸின் ஏடாகூடப் பேட்டி, 2 ஜி வசனத்துக்காக வழக்கு என்று கத்தி படத்தின் மீதான சர்ச்சைகள் குறைந்தபாடில்லை. இத்தனைக்கு மத்தியிலும் பத்திரிகையாளர்களைச் சந்தித்து நன்றி சொல்ல வந்தார் விஜய். நிகழ்ச்சியின் முடிவில் அவரோடு செல்ஃபி புகைப்படம் எடுத்துக்கொள்கிறார்கள் இந்த இளம் புகைப்படக்காரர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x