Published : 07 Jun 2016 12:29 pm

Updated : 14 Jun 2017 12:43 pm

 

Published : 07 Jun 2016 12:29 PM
Last Updated : 14 Jun 2017 12:43 PM

ஆங்கிலம் அறிவோமே - 113: எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் தெரியுமா?

113

நண்பர் ஒருவர் ஆதங்கத்தோடு, “என்னைப் பாராட்டும் போது அலுவலக மேலதிகாரி qudos என்கிறார். இதற்கு என்ன பொருள்? அகராதியிலும் சிக்கவில்லை” என்றார்.

சிக்காது. ஏனென்றால் அந்த வார்த்தையின் எழுத்துகள் kudos. Kudos என்ற வார்த்தை congratulations என்ற வார்த்தைக்கு இணையானது. Kydos என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து உருவானது kudos. இந்த கிரேக்க வார்த்தைக்குப் பொருள் ‘பாராட்டுதல்’ என்பதாகும்.


Kudos என்பது பாராட்டு என்கிற அர்த்தத்தில் பய​ன்படுத்தப்படுகிறது. இதில் தவறில்லை. எனினும் இந்தப் பாராட்டு ஒரு சாதனைக்காக அளிக்கப்படும் கவுரவம் என்றும் கருதப்படுகிறது.

இந்த இடத்தில் வேறொன்றையும் கவனிக்க வேண்டும். Congratulations என்பது தனது கடைசி எழுத்தை இழந்து ஒருமையிலும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் kudos-தான் - ஒருமையோ பன்மையோ. எனவே She received many kudos என்று கூறக் கூடாது. She received much kudos என்றுதான் கூற வேண்டும்.

Facilitate, felicitate இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை முன்பு ஒரு நண்பர் கேட்டிருந்தார். அதுகூட இப்போது நாம் பகிர்ந்துகொண்டிருக்கும் விஷயத்தோடு தொடர்புடையதுதான். Felicitate என்றால் ‘மகிழ்ச்சிப்படுத்துதல்’ என்று பொருள். Congratulations என்பதற்குப் பதிலாக felicitations என்று கூறுபவர்கள் உண்டு. என்றாலும் யாருக்காவது பாராட்டுவிழா போன்ற ஒன்றை நடத்தும்போது felicitation என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது அதிகம். Facilitate என்றால் ஒன்றைச் சுலபமாக்குதல் என்ற அர்த்தம். When I was preparing for the examinations, he facilitated me by fetching the book I required.

பாராட்டுதலைக் குறிக்க ‘hats off’ என்றும் கூறுவதுண்டு. யாரையாவது அறிமுகப்படுத்தும்போது (முக்கியமாக சீமாட்டிகளை) தன் தொப்பியைக் கழற்றுவது அந்தக் கால பிரிட்டிஷ் பழக்கம். இது மரியாதையைக் குறிக்கிறது. Hats off என்பது ஒரு சாதனைக்கான அங்கீகாரம். மரியாதை கலந்த பாராட்டுதல்.

***

‘எல்லாம் தெரிந்த ஏகாம்பரம்’ என்பதை ஆங்கிலத்தில் எப்படிக் கூறலாம்?

Jack of all trades.

சில சமயம் கொஞ்சம் கிண்டலாகவும் ‘எல்லாம் தெரிந்த ஏகாம்பரம்’ பயன்படுத்தப்படுகிறது. அதாவது அப்படியொன்றும் விஷயம் தெரியாது. ஆனால் எல்லாம் தெரிந்தவன்போல நடிப்பு. ஆங்கிலத்தில்கூட ‘Jack of all trades but master of none’ என்பார்கள்.

தெரியாத விஷயத்தைத் தெரிந்ததுபோல் காட்டிக்கொள்பவரை ஆங்கிலத்தில் charlatan, mountebank ஆகிய வார்த்தைகளிலும் குறிப்பிடுவதுண்டு. நடைமுறையில் மேஜிக் செய்பவர்களை charlatan என்பதுண்டு. அதாவது நடக்காத ஒன்றை நடந்தது போல் காட்டி ஏமாற்றும் நபர். உதாரணமாக, மனிதனைப் படுத்த வாக்கில் மேலெழும்ப வைப்பது, ரம்பத்தால் ஓர் உடலை அறுத்துப் பின் உயிர்ப்பிப்பது என்பது போல.

***

“ஒன்றைச் சேர்ப்பதற்கு and என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறோம். ஒன்றை விலக்குவதற்கு except என்ற ஒரே வார்த்தையை மட்டும்தான் பயன்படுத்த முடியுமா?” என்று கேட்டிருக்கிறார் ஒரு வாசகர்.

ஒன்றைச் சேர்க்க வேண்டுமானால் ‘and’ மட்டுமல்ல வேறு சில வார்த்தைகளையும் பயன்படுத்தலாம். கீழே உள்ள வாக்கியங்களைக் கவனியுங்கள்.

They provided not only laptop but also internet connectivity.

In addition to Deepavali, two more festivals fall in this month.

Andrew as well as Raja attended the conference.

Besides mathematics, you should have taken physics as one of your subjects, to join this course.

ஆக additions-ஐக் குறிக்க “not only…but also, in addition to, as well as, besides” போன்றவையும் பயன்படுத்தப்படுகின்றன.

அதே போல, exceptions-ஐக் குறிக்க ‘except’ என்ற வார்த்தை மட்டுமல்ல வேறு சில வார்த்தைகளும் உண்டு. இதோ சில வாக்கியங்கள்.

I have a bit of stomach ache but otherwise I am fine.

Mumbai seems to be India’s capital in everything but name.

Everyone joined the picnic apart from Rahul.

மேலே உள்ள வாக்கியங்களில் முறையே otherwise, but, apart from ஆகிய வார்த்தைகள் exceptions-ஐக் குறிக்கின்றன.

Additions, exceptions ஆகியவற்றைத் தவிர restrictions என்றும் ஒரு பிரிவு உண்டு. Only, just, merely, simply போன்ற வார்த்தைகள் மூலம் restrictions-ஐக் கொண்டுவர முடியும்.

***

Trade, Commerce ஆகிய இரண்டு வார்த்தைகளுமே ஒன்றைத்தானே குறிக்கின்றன என்று கேட்டிருக்கிறார் ஒரு வாசகர். தமிழில் வியாபாரம், வணிகம் இரண்டையும் பயன்படுத்துவதுபோல, இவற்றைப் பெரும்பாலும் ஒரே அர்த்தத்தில்தான் பயன்படுத்துகிறோம். ஆனால் இரண்டுக்குமிடையே வேறுபாடு உண்டு.

பொருட்களை வாங்குவது, விற்பது, அதற்குரிய மதிப்பை அளிப்பது, பெற்றுக்கொள்வது போன்றவற்றை trade என்கிறோம். Commerce என்பது அதற்கும் ஒரு படி மேலே. வியாபாரம் தொடர்பான விளம்பரம், காப்பீடு போன்ற சங்கதிகளையும் உள்ளடக்கியது. சுருக்கமாக இப்படியும் சொல்லலாம். Trade என்பது விற்பவர் வாங்குபவருக்கிடையே நடப்பது. Commerce என்பது தயாரிப்பாளருக்கும் வாடிக்கையாளருக்கும் இடையே நடைபெறுவது.

சிப்ஸ்

# Grotesque என்றால்?

சிதைக்கப்பட்ட அல்லது விகார மான. They saw some huge statues with grotesque faces.

# He was angry upon me without any reason என்பது சரிதானே?

Upon அல்ல. He was angry with me without any reason அல்லது He was angry with me for no reason.

# Dock என்றால்?

கப்பல்கள் கட்டப்படும் மற்றும் பழுது பார்க்கப்படும் இடம்.தொடர்புக்கு: aruncharanya@gmail.com


ஆங்கிலம் அறிவோமேஆங்கில அறிவுஆங்கில இலக்கணம்மொழிப் பயிற்சிஆங்கில பயிற்சிஆங்கிலம் அறிவோம்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

the-hundred

இனி செஞ்சுரிதான்!

இணைப்பிதழ்கள்
x