Published : 06 Mar 2014 02:55 PM
Last Updated : 06 Mar 2014 02:55 PM

12 லட்சம் பேர் எழுதிய குரூப்-4 தேர்வு முடிவு வெளியீடு- மார்ச் 24-ம் தேதி முதல் சான்றிதழ் சரிபார்ப்பு

12 லட்சம் பேர் எழுதிய குரூப்-4 தேர்வு முடிவு புதன்கிழமை மாலை வெளியிடப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மார்ச் 24-ம் தேதி தொடங்குகிறது.

குரூப்-4 தேர்வு முடிவு

இளநிலை உதவியாளர், தட்டச் சர், சுருக்கெழுத்து தட்டச்சர், பில் கலெக்டர், வரைவாளர் ஆகிய பதவிகளில் 5,566 காலியிடங் களை நிரப்புவதற்காக கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் குரூப்-4 தேர்வு நடத்தப்பட்டது. தமிழ கம் முழுவதும் 12 லட்சத்து 22 ஆயிரத்து 272 பேர் இந்தத் தேர்வை எழுதினர்.

இந்நிலையில், டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன் தேர்வு முடிவை சென்னையில் புதன் கிழமை மாலை வெளியிட்டார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறிய தாவது:

ரேங்க் பட்டியல்

குரூப்-4 தேர்வு ரேங்க் பட்டியல் இப்போது வெளியிடப்பட்டுள்ளது. புதிய முறையில் ஒட்டுமொத்த ரேங்க், இடஒதுக்கீட்டு ரேங்க், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட சிறப்பு பிரிவு ரேங்க் என 3 விதமான ரேங்க் பட்டியலை தெரிந்து கொள்ளலாம். தேர்வு எழுதிய அனைவரும் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் (www.tnpsc.gov.in) தங்கள் பதிவு எண், பிறந்த தேதி ஆகியவற்றைக் குறிப்பிட்டு தங்கள் தரவரிசையை அறிந்துகொள்ளலாம். குறைந்த பட்ச மதிப்பெண் 90 மற்றும் அதற்கு மேல் எடுத்த 11 லட்சத்து 50 ஆயிரத்து 47 பேருக்கு ரேங்க் வழங்கப்பட்டுள்ளது. 90-க்கு கீழ் பெற்றவர்களுக்கு அவர்களின் மதிப்பெண்ணை தெரிந்துகொள்ள முடியும். தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடும்போது காலியிடங்கள் 5,566 ஆக இருந்தன. தற்போது காலியிடங்களின் எண்ணிக்கை 5,855 ஆக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

சான்றிதழ் சரிபார்ப்பு

தேர்வில் வெற்றி பெற்றவர் களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மார்ச் 24-ம் தேதி தொடங்குகிறது. இதுகுறித்த தகவல் அவர்களுக்கு நாளை (இன்று) முதல் இ-மெயில், செல்போன் எஸ்.எம்.எஸ். மூலமாக தெரிவிக்கப்படும். தினசரி 300 பேர் அழைக்கப்படுவர். முதல் நாளன்று சான்றிதழ் சரிபார்ப்பும், அடுத்த நாள் கலந்தாய்வும் நடத்தப்படும்.

நேர்முகத்தேர்வு அல்லாத பணி யிடங்களுக்கான குரூப் 2-ஏ தேர்வுக்கு இதுவரை 6 லட்சத்து 5 ஆயிரத்து 96 பேர் விண்ணப் பித்துள்ளனர். இதற்கான எழுத்துத் தேர்வு மே மாதம் 18-ம் தேதி நடைபெற உள்ளது. இவ்வாறு நவநதீகிருஷ்ணன் கூறினார்.

பேட்டியின்போது, டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் மா.விஜய குமார், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா ஆகியோர் உடனிருந்தனர்.

தேர்தல் விதிகள் பொருந்துமா?

2014-15-ம் ஆண்டில் நடத்த வேண்டிய தேர்வுகள் குறித்த வருடாந்திர தேர்வுபட்டியலை டி.என்.பி.எஸ்.சி. ஏற்கெனவே வெளியிட்டுவிட்டது. குரூப்-2 தேர்வு உள்பட பல்வேறு தேர்வுகளை நடத்தி முடிவுகளை வெளியிட வேண்டியுள்ளது. அதுமட்டு மல்லாமல் வருடாந்திர தேர்வுபட்டி யலின்படி, வி.ஏ.ஓ. தேர்வு உள்பட பல்வேறு தேர்வுகள் குறித்த அறிவிப் பையும் அது வெளியிட வேண்டும்.

இந்த நிலையில், நாடாளுமன்றத் துக்கான தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் புதன்கிழமை காலை வெளியிட்டது.

எனவே, தேர்தல் நடத்தை விதிகள் உடனடி யாக அமலுக்கு வந்துள்ளன. இந்த சூழ்நிலையில், நடத்தை விதி களால் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முடிவுகளை வெளியிடுவதும், புதிய தேர்வுகளுக்கான அறிவிப்புகளை வெளியிடுவதும் பாதிக்கப்படுமா என்று டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் மா.விஜயகுமாரிடம் கேட்டோம். அதற்கு பதிலளித்த அவர், “என்னென்ன தேர்வுகளுக்கு எப்போது அறிவிப்பு வெளியிடப் படும், எப்போது தேர்வுகள் நடத்தப்படும் என்பது தொடர்பான வருடாந்திர தேர்வுபட்டியலை முன்னரே வெளியிட்டுவிட்டோம். எனவே, தேர்தல் நடத்தை விதிகள் அவற்றை கட்டுப்படுத்தாது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x