Last Updated : 12 Jul, 2016 12:07 PM

 

Published : 12 Jul 2016 12:07 PM
Last Updated : 12 Jul 2016 12:07 PM

ஆங்கிலம் அறிவோமே - 118: சைமன் எழுதிய கடிதம்

நண்பர் ஒருவர், “சிகரெட் பெட்டிகளின் மீது எச்சரிக்கைப் படங்களைப் போட வேண்டும் என்பதை அரசு கட்டாயமாக்கியிருக்கிறது. அதைப் போல திருக்குறளில் ‘கள்ளாமை’ என்று ஓர் அத்தியாயம் இருக்கிறதே அதன் பத்து குறள்களையும் டாஸ்மாக் கடைகளில் வாசலில் தொங்கவிட்டால் என்ன?” என என்னிடம் கேட்கிறார்.

மதுவுக்கு அடிமையானவர் டாஸ்மாக் கடையை அடைகிறார். குறள்களைப் படித்துவிட்டு மனம் மாறுகிறார். மதுவை வாங்காமல் வீடு திரும்புகிறார். இந்தக் கற்பனைக் காட்சியை நினைக்கவே இன்பமாக இருக்கிறது. ஆனால் நடைமுறை சாத்தியம்?

இப்படி நினைத்த அடுத்த நொடியில்தான் வேறொரு விஷயம் மனதில் தைத்தது. ‘கள்ளாமை’ என்பது கள் உண்ணாமை அல்ல. ஏமாற்று வேலைகளில் ஈடுபடாதது என்பதுதான் அதன் பொருள். அதாவது shunning fraud.

சில திருக்குறள் அத்தியாயங்களின் பெயர்கள் கீழே உள்ளன. அவற்றை ஆங்கிலத்தில் எப்படி மொழிபெயர்க்கலாம் என்று யோசியுங்களேன்.

1. துறவு

2. விருந்தோம்பல்

3. கல்லாமை

4. சொல்வன்மை

5. ஈகை

6. அறிவுடைமை

7. ஒற்றாடல்

8. தீ நட்பு

9. குறிப்பறிதல்

10. அரண்

சைமன் என்று ஒரு அமெரிக்க மாணவன், அவனுக்குத் தன் அப்பாவிடமிருந்து பணம் தேவைப்பட்டது. அதை நேரடியாக எழுதாமல் புத்திசாலித்தனமாக வேறு விதத்தில் எழுதினான். இதோ அந்தக் கடிதம்.

Dear Dad,

The $chool is $uper. I am $tudying well and I will $core the highest mark. Ju$t $end me a mail a$ $oon as po$$ible.

Your$,

$imon

இது எப்புடி?

*******

Fancy என்றால் நாகரிகம்தானே என்பது ஒரு வாசகரின் கேள்வி. ஒருவேளை அவர் fashion என்ற வார்த்தையை நினைத்துக்கொண்டாரோ என்னவோ! Fancy என்றால் தோற்றப் பொலிவுக்கு உதவுகிற அல்லது அலங்காரமான எனும் அர்த்தம். Fancy Stores.

Fancy என்றால் ‘கற்பனை செய்துகொள்ளுதல்’ என்றும் ஒரு அர்த்தம் உண்டு. கடற்கரைப் பகுதியில் தான் விற்க முயற்சிக்கும் வீட்டு மனைகளுக்கு உங்களை அழைத்துச் செல்லும் ரியல் எஸ்டேட்காரர் “Fancy a house at the backdrop of this beautiful sea” என்று கூறலாம். (பின்னே என்ன Fancy a house at the backdrop of tsunami’’ என்றா கூற முடியும்?).

Fancy having another baby at his age!

Fancy என்பதை adjective ஆகப் பயன்படுத்தும்போது அழகுபடுத்தப்பட்ட அல்லது அலங்காரமான என்று அர்த்தம். (Fancy dress competition என்பதற்கான தமிழ்ப் பயன்பாடை கேட்டுக் கேட்டு Fancy என்றால் மாறுவேடம் என்று சிலர் பொருள்படுத்திக்கொள்வதுண்டு.

*******

திருக்குறள் அத்தியாயங்களுக்கான ஆங்கில வடிவங்கள், (பொருத்தமான வேறு விடைகளும் இருக்கலாம்)

1.Renunciation

2.Hospitality

3.Illiteracy or Ignorance

4.Eloquence

5.Charity

6.Wisdom

7.Spying

8.Bad company

9.Empathy

10. Fortress

மேலும் சில திருக்குறள் அத்தியாயத் தலைப்புகளை கீழே கொடுத்திருக்கிறேன். அவற்றின் ஆங்கில ஆக்கங்களை நீங்கள் மூன்று நாட்களுக்குள் உங்கள் பெயர் மற்றும் உங்கள் ஊரின் பெயரோடு எழுதி அனுப்பலாமே.

1.வான் சிறப்பு

2.அறன் வலியுறுத்தல்

3.கண்ணோட்டம்

4.நடுவு நிலைமை

5.கயமை

*******

DIFFERENCE INDIFFERENCE DEFERENCE

Difference என்றால் வேறுபாடு.

Indifference என்றால் அலட்சியம்.

Deference என்றால் பணிவு.

# `இவர் நடிப்புக்கும், அவர் நடிப்புக்கும் உள்ள முக்கிய differences என்ன தெரியுமா?

lபடிச்சுப்

படிச்சு சொல்லியும் அவரை சந்திக்காமல் இருந்திருக்கிறாயே. உனக்கு இவவளவு indifference ஆகாது.

# அவர் வயதில் மூத்தவர், எனவே we should address him with deference

*******

சைமன் எழுதிய கடிதத்தைக் குறிப்பிட்டேன். அவன் அப்பாவும் புத்திசாலிதான். மகன் ஆடம்பரச் செலவுக்காகப் பணம் கேட்கிறான் என்பது அவருக்குப் புரிந்துவிட்டது. அவர் எழுதிய பதில் கடிதம் கீழே.

Dear Son,

I kNOw that you study well and your kNOwledge is expanding. This is

indeed a NOble task. Study well eNOugh to reach higher levels.

Yours loving,

Daddy,

*******

Protean என்றால் மிக வேகமாகவோ எளிதாகவோ மாற்றம் காணக்கூடிய என்று அர்த்தம். It is difficult to understand the whole of this protean subject.

பல விஷயங்களை விதவிதமாக சிந்திக்கக்கூடிய தன்மையையும் protean என்கிறார்கள். Protean thinkers are needed to solve the multiple problems of this society. Protean என்பது adjectiveதான். Noun அல்ல என்பதையும் மனதில் கொள்ளுங்கள்,

Proteus என்ற வார்த்தையிலிருந்து உருவானது protean. Proteus என்பது உருமாறக்கூடிய ஒரு பாக்டிரீயம் (பாக்டீரியா என்பதன் singular). இது விலங்குகளின் குடல்களிலும் மண்ணிலும் இருக்கக் கூடும்,

*******

ஒரு phrase-ல் primary, secondary என்றெல்லாம் இருக்கலாம் என்கிறார்களே, அது என்ன? என்று கேட்டிருக்கிறார் ஒரு வாசகர்.

Terribly cold weather என்பதை எடுத்துக்கொள்வோம். இதில் weather என்பது அடிப்படையான வார்த்தை. எனவே, அது primary. Cold என்பது அந்த அடிப்படை வார்த்தையை விளக்குகிறது. எனவே, அது secondary. இந்த secondary வார்த்தையின் தன்மையை மேலும் விளக்குகிறது terribly என்ற வார்த்தை. எனவே அது tertiary.



# Hypocrite என்பதற்குச் சமமான இன்னொரு வார்த்தை?

Imposter. அதாவது உண்மையை மறைத்து வேறு மாதிரி நடந்துகொள்பவர்.

# Hoard என்றால் பதுக்குதல். Horde என்றால் என்ன?

அது கூட்டத்தைக் குறிக்கும் ஒரு சொல். A horde of cheerfu#cricket fans.

# Stampede என்பதன் அர்த்தத் தைக் கேட்டிருக்கிறார் ஒருவர்.

ஏதோ ஒரு உந்துதலால் திடீரென்று பெரும் மக்கள் கூட்டம் ஓரிடத்தில் நெருக்கியடித்துக் கொள்வதை இப்படிக் குறிப்பிடுவார்கள். மக்கள் மட்டுமல்ல ஏதோ திடீர் அதிர்ச்சி காரணமாக விலங்குகள் கூட்டமாக வந்து முண்டியடித்துக்கொள்வதையும் stampede என்பார்கள்.

STAMPEDE

1,2,3 என்ற வரிசையில் எழுத்துகள் அமைந்த வார்த்தைகளைக் கொண்டு வாக்கியங்களை அமைக்க முடியுமா என்று கேட்டிருந்தேன். வந்தவற்றில் தேர்வு செய்யப்பட்டவை -

என்.சுவாமிநாதன் :

1. I am not very happy seeing dutifu#officers belittled, humiliated.

2. A is too busy madly making himself sensibly, correctly understood.

அருண் டி.எஸ்.:

I, We, You, They....great topics needing focussed undivided, thoughtful, enlightened, intellectua#introspection.

கீழ்க்கண்ட இரு மாணவிகளின் முயற்சிகளையும் ஊக்குவிக்கத்தான் வேண்டும்,

எம். பூவிழி - I do the work daily neatly without mistakes.

தயா - I am the best story teller

நான்தான் proteus.

அப்பப்போ நிறத்தை மாத்திக்கிறேனே, அப்படின்னா நானும் proteanதானா?

தொடர்புக்கு: aruncharanya@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x