Last Updated : 14 Feb, 2014 12:00 AM

 

Published : 14 Feb 2014 12:00 AM
Last Updated : 14 Feb 2014 12:00 AM

நல்ல எதிர்காலம் தரும் கணித மேற்படிப்புகள்

பி.எஸ்சி. கணிதம் படித்து முடித்ததும் எதிர்காலத்தில் எந்த துறையில் பணியாற்ற வேண்டும் என்பதை முடிவு செய்து, அகற்கேற்ற வகையில் பட்டமேற்படிப்புகளை தேர்வு செய்ய வேண்டும். ஆசிரியர் பணிக்கு செல்ல விரும்புபவர்கள் எம்.எஸ்சி., பிஎட், எம்எட் போன்றவற்றை தேர்வு செய்யலாம். பிற துறைகளுக்கு செல்பவர்களுக்கு பல வாய்ப்புகள் உள்ளன. தமிழகத்தைவிட, வட மாநிலங்களில் உள்ள கல்லூரிகளில் சிறப்பு பாடப்பிரிவுகள் அதிகம் உள்ளன. எம்.எஸ்சி. பைனான்சியல் மேத்தமேடிக்ஸ், ஆபரேஷனல் ரிசர்ச் அண்ட் பைனான்ஸ், அப்ளைடு மேத்தமேடிக்ஸ் அண்ட் சயின்டிபிகல் கம்ப்யூட்டிங், எம்.எஸ்சி. இன் பயோ ஸ்டேட்டிஸ்டிக்ஸ் உள்ளிட்ட பட்டமேற்படிப்புகள் உள்ளன. ஐஐடியில் எம்.எஸ்சி. படிக்க விரும்புபவர்கள் JAM நுழைவுத் தேர்வு எழுத வேண்டும். கணிதம், பொருளியல் கலந்த படிப்பான எம்.எஸ்சி. மேத்தமேடிகல் எகனாமிக்ஸ் முடிப்பவர்களுக்க நல்ல வாய்ப்புகள் உள்ளன.

எம்.எஸ்சி. பிசினஸ் ஸ்டேட்டிஸ்டிக்ஸ், பயோ ஸ்டேட்டிஸ்டிக்ஸ் உள்ளிட்ட படிப்புகள் மும்பையில் உள்ள டாடா இன்ஸ்டிடியூட் ஆப் ஃபண்டமென்டல் ரிசர்ச் கல்வி நிறுவனத்தில் உள்ளன. நுழைவுத் தேர்வு எழுதி சேரலாம். எம்.எஸ்சி. கம்ப்யூடேஷன் மேத்தமேடிக்ஸ் படிப்பை சென்னை மேத்தமேடிகல் இன்ஸ்டிடியூட், தி இன்ஸ்டிடியூட் ஆப் மேத்தமேடிகல் கல்வி நிறுவனங்களில் படிக்கலாம்.

பெங்களூரில் உள்ள இந்தியன் ஸ்டேட்டிஸ்டிகல் இன்ஸ்டிடியூட் கல்வி நிறுவனத்தில் கணிதம், புள்ளியியல் சார்ந்த பட்டமேற்படிப்புகள் உள்ளன. கோல்கத்தா, பெங்களூரில் உள்ள ஐஐஎஸ்இ, இன்டகிரேட்டட் எம்.எஸ்சி. அண்ட் பிஎச்டி பட்டபடிப்பை அளிக்கிறது. இதற்கும் JAM நுழைவுத் தேர்வு அவசியம். இந்த தேர்வில் வெற்றி பெறுபவர்கள் சென்னை, மும்பை, கான்பூர், கரக்பூர், டெல்லி உள்ளிட்ட இடங்களில் உள்ள ஐஐடி கல்வி நிறுவனத்தில் எம்.எஸ்சி. மேத்தமேடிக்ஸ் படிப்பில் விரும்பிய ஒரு பாடப்பிரிவை மட்டும் தேர்வு செய்து பயிலலாம். ரூர்கி ஐஐடியில் எம்.எஸ்சி. அப்ளைடு மேத்தமேடிகல் அண்ட் இண்டஸ்ட்ரியல் மேத்தமேடிக்ஸ் உள்ளது.

திருச்சி நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தில் எம்.எஸ்சி. ஆபரேஷன் ரிசர்ச் அண்ட் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் புதுமையான பட்டமேற்படிப்பாகவும், யுனிக் காம்பினேஷன் கொண்டதுமானது. இக்கல்வி நிறுவனம் நடத்தும் நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று சேரவேண்டும். இப்படிப்பு முடித்தவர்களுக்கு ஐ.டி. நிறுவனங்கள் 100 சதவீத பணி வாய்ப்பு அளிக்கின்றன.

கோழிக்கோடு என்ஐடி கல்வி நிறுவனத்தில் எம்.எஸ்சி. எம்.டெக். புரோகிராம் இன் மேத்தமேடிக்ஸ் பட்டமேற்படிப்பு உள்ளது. ஆராய்ச்சி படிப்பு படிப்பவர்களுக்கு ஏற்றது. இதற்கும் நுழைவுத் தேர்வு உண்டு.

தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் எம்.எஸ்சி. பட்டமேற்படிப்பு படிப்பவர்களுக்கு நேஷனல் போர்ட் ஆப் ஹையர் மேத்தமேடிக்ஸ் (NBHM) மூலம் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதை பெற விரும்பினால் பிஎஸ்சி இறுதியாண்டு படிக்கும்போதே www.nbhm.dac.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். கணித பட்டமேற்படிப்பு முடித்தவர்கள் டேட்டா அனலைஸ், பிசினஸ் அனலைஸ், புள்ளியியல் துறை, வங்கி, நிதி நிறுவனங்கள் என பல்வேறு துறைகளில் பணிக்கு செல்லக்கூடிய வாய்ப்புகள் உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x