Published : 23 Nov 2013 12:00 AM
Last Updated : 23 Nov 2013 12:00 AM

தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. அரையாண்டு தேர்வு

தமிழகம் முழுவதும் பிளஸ்-2 அரையாண்டு தேர்வு டிசம்பர் 10-ம் தேதியும், எஸ்.எஸ்.எல்.சி. அரையாண்டு தேர்வு 12-ம் தேதியும் தொடங்கும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 ஆண்டுத் தேர்வுகள் மாநிலம் முழுவதும் பொதுத் தேர்வாக நடத்தப்படுவதைப் போல் காலாண்டு, அரையாண்டு தேர்வுகளையும் இதே போன்று நடத்தும் புதிய முறை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

அதற்கு முன்பு மாவட்ட அளவில்தான் தேர்வுகள் நடக்கும். காலாண்டு, அரையாண்டு தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான கேள்வியும் பயிற்சியும் கிடைக்க வேண்டும் என்பதுதான் இந்தப் புதிய திட்டத்தின் நோக்கம்.

கடந்த ஆண்டைப் போல் இந்தஆண்டும் பொதுத் தேர்வுமுறை பின்பற்றப்பட்டுக் காலாண்டு தேர்வும் ஒன்றுபோல் நடத்தப்பட்டது. தற்போது, பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. அரையாண்டு தேர்வுகளும் அதே போன்று தமிழகம் முழுவதும் ஒரே பொதுத் தேர்வாக நடத்தப்பட உள்ளன. இதற்கான தேர்வு அட்டவணையைப் பள்ளிக்கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:

பிளஸ் 2 அரையாண்டு தேர்வு



டிசம்பர் 10 (செவ்வாய்-) - மொழிப்பாடம் -- முதல் தாள்



டிசம்பர் 11 (புதன்) - மொழிப்பாடம் -- 2-ம் தாள்



டிசம்பர் 12 (வியாழன்) - ஆங்கிலம் -- முதல் தாள்

டிசம்பர் 13 (வெள்ளி) - ஆங்கிலம் -- 2-ம் தாள்

டிசம்பர் 16 (திங்கள்) - கணிதம், விலங்கியல், நுண்ணுயிரியல், ஊட்டச்சத்து, ஆடை வடிவமைப்பு, உணவு மேலாண்மை மற்றும் குழந்தை பராமரிப்பு, விவசாயம், அரசியல் அறிவியல், நர்சிங் (தொழில் பாடம்), நர்சிங் தியரி (பொது)

டிசம்பர் 17 ( செவ்வாய்) - வணிகவியல், மனையியல், புவியியல்

டிசம்பர் 18 (புதன்) - இயற்பியல், பொருளாதாரம், பொது இயந்திரவியல், எலெக்ட்ரிக்கல் மெஷின்ஸ் அண்டு அப்ளையன்சஸ், டிராப்ட்ஸ்மேன் சிவில், அலுவலக நிர்வாகம், கணக்கு பதிவியல் மற்றும் தணிக்கை, அலுவலக நிர்வாகம்

டிசம்பர் 19 (வியாழன்) - கம்யூனிகேட்டிவ் இங்கிலிஷ், இந்தியக் கலாசாரம், கணினி அறிவியல், உயிரி-வேதியியல், சிறப்பு தமிழ், தட்டச்சு (தமிழ் மற்றும் ஆங்கிலம்), புள்ளியியல்

டிசம்பர் 20 (வெள்ளி) - வேதியியல், கணக்கு பதிவியல்

டிசம்பர் 23 (திங்கள்)- உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிகக் கணிதம்

எஸ்.எஸ்.எல்.சி. அரையாண்டு தேர்வு

டிசம்பர் 12 (வியாழக்கிழமை ) - மொழிப்பாடம் -- முதல் தாள்

டிசம்பர் 13 (வெள்ளி-) -மொழிப்பாடம் -- 2-ம் தாள்

டிசம்பர் 16 (திங்கள்) - ஆங்கிலம் -- முதல் தாள்

டிசம்பர் 17 (செவ்வாய்) - ஆங்கிலம் -- 2-ம் தாள்

டிசம்பர் 19 (வியாழன்) - கணிதம்

டிசம்பர் 20 (வெள்ளி) - அறிவியல்

டிசம்பர் 23 (திங்கள்) - சமூக அறிவியல்

தேர்வு நேரம்

அரையாண்டு தேர்வு தினமும் காலை 10.15-க்கு தொடங்கி மதியம் 1.15 மணிக்கு முடிவடையும். காலை 10 மணிக்கு வினாத்தாள் கொடுக்கப்படும். 10.10 வரை கேள்வித்தாள் படிப்பதற்கான நேரம். 10.10 முதல் 10.15 வரை விடைத்தாளில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பூர்த்தி செய்துகொள்ளலாம். அதன்பிறகு 10.15 மணிக்குத் தேர்வு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x