Published : 29 May 2017 11:47 AM
Last Updated : 29 May 2017 11:47 AM

மதிப்புமிக்க பிராண்டுகள்

எல்லோருக்கும் தரமானப் பொருட்களை வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் தரமானப் பொருட்களின் விலை அதிகம் இருப்பதால் வாங்குவதற்கு யோசிப்போம். இந்த நிலை 10 ஆண்டுகள் முன்பு வரை இருந்தது. ஆனால் தற்போது நிலை மாறிவருகிறது. அதிகம் செலவானாலும் பரவாயில்லை தரமான பொருட்களை வாங்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது. மேலும் சில குறிப்பிட்ட பிராண்டுகளின் தயாரிப்பில் மக்கள் அதிகம் நம்பிக்கை கொள்வதால் அந்த பிராண்டு மதிப்புமிக்க பிராண்டாக மாறுகிறது. அந்த பிராண்டின் விற்பனையும் அதிகரிக்கிறது.

2017-ம் ஆண்டில் அதிக மதிப்புமிக்க பிராண்டுகளின் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் ஆப்பிள் நிறுவனம் முதலிடத்தை பெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து கூகுள், மைக்ரோசாப்ட், பேஸ்புக், கோககோலா, அமேசான், டிஸ்னி, டொயோடா, மெக்டொனால்டு, சாம்சங், ஜெனரல் எலெக்ட்ரிக், ஏடி அண்ட் டி, ஐபிஎம் மற்றும் இண்டெல் ஆகிய நிறுவனங்கள் இடம்பிடித்துள்ளன. இந்த நிறுவனங்களின் தயாரிப்புகள் அந்தந்த துறையில் முத்திரை பதித்து வருகின்றன. சில குறிப்பிட்ட பிராண்டுகளை பற்றிய சில தகவல்கள்…

கோக கோலா

# 2017-ம் ஆண்டின் படி பிராண்டின் மொத்த மதிப்பு 5,640 கோடி டாலர்

# 2016-ம் ஆண்டின் படி நிறுவனத்தின் வருமானம் 4,186 கோடி டாலர்

# நிறுவனம் தொடங்கப்பட்ட நாள் 8/ 05 /1882

# சுமார் 135 ஆண்டுகளுக்கு மேலாக குளிர்பான தயாரிப்பில் உள்ளது.

# 2016-ம் ஆண்டின் படி நிறுவனத்தில் பணிபுரியும் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 1,23,200

# அமெரிக்கா நாட்டில் அட்லாண்டா நகரில் நிறுவனத்தின் தலைமையிடம் அமைந்துள்ளது.

# 200 நாடுகளில் கோகோ கோலா தயாரிப்புகள் விற்கப்படுகின்றன.



டொயோடோ

# 2017-ம் ஆண்டின்படி பிராண்ட் மதிப்பு 4,110 கோடி டாலர்

# நிறுவனம் தொடங்கப்பட்ட ஆண்டு 1937

# நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கை 3,48,877

# 2016-ம் ஆண்டு படி மொத்த வருமானம் 25,409 கோடி டாலர்

# நிறுவனத்தை தொடங்கியவர் கிச்சிரோ டொயோடோ

# ஜப்பான் நாட்டில் ஐச்சி நகரத்தில் டொயோடோ நிறுவனத்தின் தலைமையிடம் அமைந்துள்ளது.



மெக்டொனால்டு

# 2017-ம் ஆண்டின் படி மெக்டொனால்டு நிறுவனத்தின் பிராண்டு மதிப்பு 4,030 கோடி டாலர்

# நிறுவனம் தொடங்கப்பட்ட ஆண்டு 1940

# உலகம் முழுவதும் உள்ள மெக்டொனால்டு கடைகளின் எண்ணிக்கை 36,900

# ரிச்சர்டு மெக்டொனால்டு, மெளரிசே மெக்டொனால்டு ஆகிய இருவரால் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது.

# துரிதவகை உணவுகள், சிக்கன் உணவுகள், குளிர்பானங்கள் ஆகியவை இந்த உணவகங்களின் சிறப்பு

# 2016-ம் ஆண்டின்படி நிறுவனத்தின் மொத்த வருமானம் 2,462 கோடி டாலர்

# நிறுவனத்தின் பணியாற்றும் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 3,75,000



ஜெனரல் எலெக்ட்ரிக்

# 2017-ம் ஆண்டின் படி ஜெனரல் எலெக்ட்ரிக் நிறுவனத்தின் பிராண்டு மதிப்பு 3,790 கோடி டாலர்

# நிறுவனம் தொடங்கப்பட்ட ஆண்டு 1892

# தாமஸ் எடிசன், சார்லஸ் ஏ.காபின், எலிஹூ தாம்சன், எட்வின் ஜே ஹோஸ்டன் ஆகியோரால் ஜெனரல் எலெக்ட்ரிக் நிறுவனம் தொடங்கப்பட்டது.

# ஏர்கிராப்ட் இன்ஜின், எலெக்ட்ரிக் மோட்டார்ஸ், கேஸ், லோகோமோட்டிவ்ஸ் போன்ற தயாரிப்புகளில் ஈடுபட்டு வருகிறது.

# 2016-ம் ஆண்டின் நிறுவனத்தின் மொத்த வருமானம் 12,370 கோடி டாலர்

# நிறுவனத்தில் பணிபுரியும் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 3,33,000



ஏடி அண்ட் டி

# 2017-ம் ஆண்டின் படி ஏடி அண்ட் டி நிறுவனத்தின் பிராண்டு மதிப்பு 3,670 கோடி டாலர்

# அமெரிக்காவில் டெக்ஸாஸ் மாகாணத்தில் டல்லாஸ் என்ற நகரில் நிறுவனத்தின் தலைமையகம் அமைந்துள்ளது.

# 2016-ம் ஆண்டின் படி நிறுவனத்தின் மொத்த வருமானம் 16,380 கோடி டாலர்

# மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 2,73,000

# கிரிக்கெட், டிஜிட்டல் லைப், டைரைக்ட் டிவி, கோபோன், யு-வெர்ஸ், ஸ்கை என பல்வேறு பிராண்டுகளில் இந்நிறுவனம் இயங்கி வருகிறது.



இண்டெல்

# 2017-ம் ஆண்டின் படி இண்டெல் நிறுவன பிராண்ட் மதிப்பு 3,330 கோடி டாலர்

# நிறுவனம் தொடங்கப்பட்ட ஆண்டு 1968

# அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தின் சாண்டா கிளாரா நகரில் இந்த நிறுவனத்தின் தலைமையகம் அமைந்துள்ளது.

# 206-ம் ஆண்டின் மொத்த வருமானம் 5,938 கோடி டாலர்

# மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 1,06,000

# புளூடூத் சிப்செட், மைக்ரோபிராசசர்ஸ், மதர்போர்டு சிப்செட்ஸ், பிளாஸ் மெமரி ஆகியவற்றை இந்நிறுவனம் தயாரித்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x