Published : 20 May 2017 11:11 am

Updated : 28 Jun 2017 19:11 pm

 

Published : 20 May 2017 11:11 AM
Last Updated : 28 Jun 2017 07:11 PM

வீட்டின் வழிகாட்டி மதிப்பைக் கண்டுபிடிப்பது எப்படி?

ஒரு வீட்டு மனை வாங்குகிறீர்கள் என்றால் அதற்குச் சந்தை வழிகாட்டி மதிப்பு காண வழி இருக்கிறது. நிலத்தின் சர்வே எண், கிராமத்தின் பெயர், சார்பதிவாளர் அலுவலகம் போன்ற விவரங்களை அளித்தால் அந்த நிலத்துக்கான அரசின் வழிகாட்டி மதிப்பு தெரிய வரும்.

சரி, மனைக்கான வழிகாட்டி மதிப்பைக் கண்டறிய வழி இருக்கிறது. வீடுகளுக்கும்கூடச் சந்தை வழிகாட்டி மதிப்பை எப்படிப் பார்ப்பது? அரசின் இணையத்திலேயே இதையும் பார்க்க முடியும். வீடு இருக்கும் பகுதி. யூடிஎஸ் அளவு, வீடு கட்டி முடிக்கப்பட்ட ஆண்டு, வீடு புதியதா, பழையதா போன்ற தகவல்களைக் கொடுத்து வீட்டுக்கான வழிகாட்டி மதிப்பைப் பெறலாம்.

வீடுகள் பற்றிய மதிப்பை அறிய இந்த இணையப் பகுதியில் இரண்டு வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அடுக்குமாடி வீடு, தனி வீடு என இரு பிரிவுகள் உள்ளன. அடுக்குமாடி வீடு பகுதியில் வீடு எந்த எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ளது, யுடிஎஸ் எனப்படும் கட்டிடத் தளப் பரப்பு எவ்வளவு, வீடு அமைந்துள்ள மொத்தச் சதுர அடி, வீடு பழையதா புதியதா, வீட்டின் வயது, எந்தத் தளத்தில் வீடு உள்ளது, வீட்டில் பயன்படுத்தப்பட்டுள்ள மர வகை, கட்டுமானத்துக்குப் பயன்படுத்தப்பட்டுள்ள பொருட்கள், மேற்கூரை வகை, வீட்டில் பயன்படுத்தப்பட்டுள்ள உயர் ரகக் கற்கள் வகைகள் பற்றித் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். இதற்கான பதில்கள் தெளிவாக இருந்தால் வீடு அமைந்துள்ள மனையின் மதிப்பு, கட்டிடத்தின் மதிப்பு தனித்தனியாகக் கொடுக்கப்படும். இதில் அதிகபட்சமாக 60 ஆண்டுகள் ஆன கட்டிடத்தின் மதிப்பை மட்டுமே பார்க்க முடியும்.

இதே போலத்தான் தனி வீட்டுக்கும் கேள்விகள் தொகுத்துக் கேட்கப்படுள்ளன. வீடு அமைந்துள்ள எல்லை, வீட்டின் மொத்தப் பரப்பளாவு, வீடு பழையதா புதியதா, வீட்டின் வயது, தளம், மர பயன்பாடு, கட்டுமானப் பொருள் பயன்பாடு, மேற்கூரை வகை, உயர் ரகக் கற்கள் பயன்பாடு ஆகியவற்றுடன் சில வசதிகள் பற்றிய கேள்விகளும் கேட்கப்படுள்ளன. மின்சாரம் வசதி, சுகாதார வசதி, குடி நீர் வசதி, வீட்டைச் சுற்றியுள்ள சுற்றுச்சுவரின் விவரங்களையும் அளித்தால் வீட்டின் மதிப்பும், அந்த வீடு அமைந்துள்ள மனையின் மதிப்பையும் தெரிந்துகொள்ளலாம்.

இந்த மதிப்பானது நாம் ஒரு இடத்தில் வீட்டைப் பார்க்கவும், அதன் அடிப்படையில் வீடு விலை குறித்துப் பேரம் பேசவும் வீடு வாங்குவது தொடர்பான முடிவுக்கு வரவும் ஓரளவுக்கு உதவும். கேட்கப்பட்ட கேள்விகளுக்கு நீங்கள் அளிக்கும் பதிலைப் பொறுத்தே நிலம் மற்றும் வீட்டின் மதிப்பு கொடுக்கப்படுகிறது என்பதால், இந்த மதிப்பை அப்படியே எடுத்துக்கொள்ளக் கூடாது.

சந்தை நிலவரம், ரியல் எஸ்டேட் நிலவரத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும். அரசின் பத்திரப் பதிவு இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருப்பதால், இது வீடு வாங்க உத்தேசித்துள்ளவர்களுக்கு ஓரளவு பயனுள்ளதாகவே இருக்கும்.

இணைய முகவரி: https://goo.gl/AP5fyt

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை


வீட்டு மனைவழிகாட்டி மதிப்புவீடு மதிப்புவீடு திட்டம்நில மதிப்பு

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author