Published : 01 Aug 2016 02:54 PM
Last Updated : 01 Aug 2016 02:54 PM

ஸ்மார்ட் தலையணையும் 3டி பேனாவும்

ஸ்மார்ட் தலையணை

உறக்கத்தின் தன்மை, குறட்டை அளவு போன்றவற்றை அளவிடும் தலையணை இது. இதற்குள்ளிருக்கும் சிறிய ஸ்பீக்கர்களிலிருந்து இசையையும் கேட்கலாம். ஸ்மார்ட்போன் மூலம் இதை இயக்க வேண்டும்.

பேட்டரி டில்லர்

தோட்ட வேலைகளுக்கு உதவும் சிறிய டில்லர் கருவி. சிறிய களைகளை வெட்ட, தோட்டத்தில் மண்ணை கிளறிவிட களைவெட்டிகளுக்குப் பதிலாக பயன்படுத்தலாம். பேட்டரியால் இயங்கக்கூடியது.

3டி பேனா

காலியாகும் பிளாஸ்டிக் பாட்டில்களை இழைகளாக பிரித்து அதிலிருந்து 3டி உருவங்களை உருவாக்கும் பேனா. குப்பையாக வீசும் பாட்டில்களை இப்படி உருவங்களாக மாற்றுவதன் மூலம் சுற்றுச் சூழலும் காக்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x