Published : 22 Sep 2016 12:01 PM
Last Updated : 22 Sep 2016 12:01 PM

டிஎன்பிஎஸ்சி | குரூப்-IV தேர்வு | மாதிரி வினா-விடை 14: அறிவியல்

தாவரவியல் தலைப்பில் உயிரினங்களின் வகைப்பாடு, ஊட்டச்சத்து மற்றும் சுவாசித்தல், உயிரினங்களின் வகைப்பாடு தலைப்பில் மொனிரா, புரோடிஸ்தா, தாவரம், விலங்குகள், பூஞ்சை, பாக்டீரியா அதன் பண்புகள், அதன் செல்லமைப்பு போன்றவை கேட்கப்படலாம்.

ஊட்டச்சத்து தலைப்பில் கார்போ ஹைட்ரேட், புரதம், கொழுப்பு, வைட்டமின், கனிமங்கள் போன்றவற்றுக்கான உதா ரணம் கேட்கப்படலாம். கார்போஹைட்ரேட் & புரத குறைப்பாட்டு நோய்கள் கேட்க வாய்ப்பு உள்ளது. வைட்டமின் தலைப்பில் நீரில் கரையும் மற்றும் கொழுப்பில் கரையும் வைட்டமின்கள், வைட்டமின் குறைபாட்டு நோய்கள் கேட்கப்படலாம்.

விலங்கியல் தலைப்பில் இரத்தம், இரத்த ஓட்ட மண்டலம், இனப்பெருக்கம், சுற்றுச் சூழல், சூழலியல், தொற்று நோய்கள் போன்ற தலைப்புகளில் இருந்து கேள்விகள் வரும்.

இரத்த ஓட்ட மண்டலம் தலைப்பில் இரத்த வெள்ளை அணுக்கள், சிவப்பணுக் கள், அவை உற்பத்தி ஆகும் இடம், அவை அழியும் இடம், அவற்றின் ஆயுட்காலம், அவ்வணுக்கள் குறைபாட்டாலும், அதிகரிப்பாலும் ஏற்படும் நோய்கள் பற்றி கேள்விகள் கேட்கப்படும்.

நோய்கள் தலைப்பில், பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை மூலம் பரவும் / உருவாகும் நோய்களும் , நடப்பு நிகழ்வில் உள்ள யபோலா, ஜிக்கா, டெங்கு நோய் போன்றவற்றிலிருந்தும் கேள்விகள் வர வாய்ப்பு உள்ளது. மேற்கண்ட நான்கு பகுதி களையும் படிக்க தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட் டுள்ள அறிவியல் பாடத்திட்டத்தில் உள்ள தலைப்புகளை, சமச்சீர் கல்வி பாடப்புத்தகத்தில் படித்தால் போதுமானது.

டிஎன்பிஎஸ்சி இந்த ஆண்டு மற்றும் கடந்த ஆண்டுகளில் நடத்திய போட்டி தேர்வு கேள்விதாள்களில் இருந்தும் சில வினாக்கள் வர வாய்ப்பு அதிகம்.

1. செல்களில் டிஎன்ஏ காணப்படுவது

a. உட்கரு b. இழைமணி

c. உட்கரு மற்றும் மைட்டோகாண்டிரியா (இழைமணி) (d) ரிபோசோம்

2. நெய்யில் காணப்படும் கலப்படப் பொருள்

a ரெசின் b பருத்திக்கொட்டை

c.வளர்ச்சி ஹார்மோன் d. டெஸ்டோஸ்டிரோன்

3. பாக்டீரியாவின் செல் சுவர் எதனால் ஆனது

a. பெப்டிடோகிலைக்கான் b. கேப்சிட்

c. செல்லுலோஸ் d. சிட்டிகன்

4. டொபாகோ மொசைக் வைரஸ் (TMV) ன் வடிவம்?

a. கிரிஸ்டல் b. கோளம்

c. சிலிண்டர் d. விண்கலம்

5. பொருத்துக

a) மொனிரா - 1. டெரிட்டோபைட்டுகள்

b) ப்ரோட்டிஸ்தா - 2. எசின்டா

c) தாவரங்கள் - 3. ப்ரோட்டோசோவா

d) விலங்கினம் - 4. பாக்டீரியா

A B C D

a) 1 2 3 4

b) 3 4 2 1

c) 3 2 4 1

d) 4 3 2 1

6. பொருத்துக

a) துளையுடலிகள் - 1. மண்புழு

b) வத்தசைப்புழுக்கள் - 2. கரப்பான்

c) கணுக்காலிகள் - 3. நட்சத்திரமீன்

d) முள்தோலியினம் - 4. கடற்பாசிகள்

A B C D

a) 4 1 2 3

b) 3 4 2 1

c) 3 2 4 1

d) 4 3 2 1

7. பொருத்துக

a) மீன் - 1. நார்சத்து அதிகம்

b) பழம் மற்றும் காய்கறிகள் - 2. ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள்

c) ஆட்டிறைச்சி மற்றும் மாட்டிறைச்சி - 3. உயர் கலோரி விரைவு உணவு

d) பீட்சா - 4. சிவப்பு இறைச்சி

A B C D

a) 4 1 3 2

b) 2 1 4 3

c) 1 2 3 4

d) 4 3 2 1

8. பொருத்துக

a) எத்தனால் - 1. நொதித்தல்

b) பீனோதியாசின் - 2. மருந்து

c) நிகோடின் - 3. மன அழுத்த நீக்கி

A B C

a) 1 3 2

b) 2 3 1

c) 3 1 2

d) 3 2 1

9. ரத்த உறைதல் எதிர்ப்பு வைட்டமின்

a. வைட்டமின் A b. வைட்டமின் D

c. வைட்டமின் E d. வைட்டமின் K

10. சரியாக பொருந்தியுள்ளது எது?

a) இழைமணி - 1. சிஸ்டர்னே

b) கோல்கி உபகரணம் - 2. கிறிஸ்டே

c) பசுங்கனிகம் - 3. தைலகாய்டு

d) வாக்குவொல்கள் - 4. கிரானா

a) 1 மட்டும் b) 2 மட்டும் c) 3 மட்டும் d) எல்லாம்

11. பொருத்துக

a) ப்ரோகேரியோடிக் - 1. ஒற்றை குரோமோசோம்

b) யூகேரியோடிக் - 2. ஒன்றுக்கு மேற்பட்ட குரோமோசோம்

c) எளிய எண்டோபிளாஸ்மிக் வலைப்பின்னல் - 3. புரத உற்பத்தி

d) கடின எண்டோபிளாஸ்மிக் வலைப்பின்னல் - 4. லிப்பிட் உற்பத்தி

A B C D

a) 4 1 2 1

b) 2 1 3 4

c) 1 2 3 4

d) 4 3 2 1

12. பொருத்துக

a) ராபர்ட் ஹூக் - 1. புரோட்டோபிளாசம்

b) அண்டன் வான் லீயூவென்ஹோக் - 2. செல்

c) ராபர்ட் பிரவுன் - 3. உட்கரு

d) புர்க்கின்ஜி - 4. எளிய நுண்ணோக்கி

A B C D

a) 4 1 2 3

b) 2 4 3 1

c) 1 2 3 4

d) 4 3 2 1

13. பொருத்துக

a) ப்யூரின் - 1. அடினைன், குவானின்

b) பிரிமிதீன் - 2. சைட்டோசின், தையாமின்

c) பெண்டோஸ் சர்க்கரை - 3.DNA

d) பாஸ்பேட் - 4. ஏடிபி

A B C D

a) 4 1 2 3

b) 2 4 3 1

c) 1 2 3 4

d) 4 3 2 1

14. பின்வருவனவற்றில் அபியாடிக் மூலக்கூறு எது

1. காற்று 2. நீர் 3. மண் 4. ஒளி 5. தாவரங்கள்

a)1,2,3 b)1,2,3,4 c) 2,3 d) 3 only

15. வைட்டமின் B3 வேறு எவ்வாறு அறியப்படுகிறது?

a. தயாமின் b. நியாஸின்

c. ஃபோலிக் அமிலம் d. சயனோகோபாலமின்

16. பின்வருவனவற்றுள் ஒளிச்சேர்க்கைக்கு தேவையானவை

1. சூரிய ஒளி 2. பச்சையம்

3. CO2 4. நீர்

a) 1,2,3 b) 1,3,4 c) 1,2,3,4 d) 1,4

17. ‘ரெட் டேட்டா’ புத்தகத்தை வெளியிடுபவர்

a. IUCN b.UNFCCC c. UN d. WHO

18. பின்வருவனவற்றுள் நுண்ணூட்டச்சத்துக்கு உதாரணம்

a. கார்போஹைட்ரேட் b. புரதம்

c.கனிமங்கள் d. மேற்கண்ட எதுவும் இல்லை

19. பின்வருவனவற்றுள் ஃபைரோடாக்ஸின் என்பது

a. வைட்டமின் A b. வைட்டமின் C

c. வைட்டமின் B6 d. வைட்டமின் B2

20. பின்வருவனவற்றுள் ஆளுமை ஹார் மோன் எது?

a. தைராக்சின் b.அட்ரீனலின்

c.வளர்ச்சி ஹார்மோன் d. டெஸ்டோஸ்டிரோன்

21. பொருத்துக

A. தேசிய அறிவியல் தினம் - 1. பிப்ரவரி 28

B. உலக காடுகள் தினம் - 2. மார்ச் 21

C. புவி நாள் - 3. ஏப்ரல்22

D. உலக ஓசோன் தினம் - 4. செப்டம்பர் 16

A B C D

a. 4 2 3 1

b. 4 3 2 1

c. 1 2 3 4

d. 3 4 2 1

22. நமது உடலில் இரத்த சிவப்பு அணுக்கள் அழியும் இடம்

a. கல்லீரல் b. மண்ணீரல்

c. சிறுநீரகம் d. நுரையீரல்

23. தவறாக பொருந்தியுள்ளது எது?

a. Rh ரத்தம் - ஏரித்ரோ ப்ளாஸ்தோஸிஸ் பெட்டாலிஸ்

b. ஹீமோபீலியா - பாலினம் சம்பந்தமான மரபு குறைபாடு

c. A, B, O ரத்தம் - பல அல்லீல்கள்

d. நிறக்குருடு ஊட்டச்சத்து குறைபாடு

24. அமோனியா கலவை

a. நைட்ரஜன் மற்றும் ஹைட்ரஜன்

b. ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன்

c. நைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன்

d. நைட்ரஜன் மற்றும் சோடியம் ஹைட்ராக்சைடு

25. வைரஸில் காணப்படும் மரபணு பொருள்

a) DNA b) RNA

c) Both DNA & RNA d) DNA or RNA

26. மரபணு பொறியியல் என்பது

a. குரோமொசோம் மாற்றம்

b. ஜீன் மாற்றம்

c. சைட்டோ குரோமொசோம் மாற்றம்

d. உட்கரு மாற்றம்

27. ஈஸ்ட்டுகள் உற்பத்தி செய்வது எது?

a. ஆக்ஸிஜன் b. குளுக்கோஸ்

c. ஆல்கஹால் d. உப்புகள்

28. மண்ணில் நைட்ரஜன் நிலைப்படுத்துதல் எதனால் செய்யப்படுகிறது?

a. நீல பசும் பாசி b. பசும் பாசி

c. பிரவுன் பாசி d. சிகப்பு பாசி

29. சிறுநீரகக் கல்லில் காணப்படுவது

a. அமோனியம் ஆக்சலேட்

b. பொட்டாசியம் ஆக்சலேட்

c. கால்சியம் ஆக்சலேட்

d. சோடியம் ஆக்ஸலேட்

30. தவறாக பொருத்தப்பட்டுள்ளது எது?

a. வைட்டமின் A --- கொழுப்பில் கரையக்கூடியது

b. வைட்டமின் C --- நீரில் கரையக்கூடியது

c. வைட்டமின் B --- நீரில் கரையக்கூடியது

d. வைட்டமின் D --- நீரில் கரையக்கூடியது

விடைகள்: 1.c 2.c 3.a 4.c 5.b 6.a 7.b 8.a 9.d 10.c 11.c 12.b 13.c 14.b 15.b 16.c 17.a 18.c 19.c 20.a 21.c 22.b 23.d 24.a 25.d 26.b 27.c 28.a 29.c 30.d

கணேச சுப்ரமணியன், கணேஷ் ஐஏஎஸ் அகாடமி

அண்ணா நகர், சென்னை. ganiasacademy@gmail.com போன்: 044-26191661

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x